Author: பிரகாஷ் ராஜ்

(நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த டிசம்பர் 17, 2025 அன்று ஹைதராபாத்தில் APCR ஏற்பாடு செய்த “Longing for Justice” நிகழ்வில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்) அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்! சில மாதங்களுக்கு முன்பு, நான் டெல்லியில் அரசியல் கைதிகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். இன்று நான் உமர் காலித் பற்றிப் பேச விரும்பவில்லை – அவர் யார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். டெல்லியில் நான் சொன்னதையே இங்கேயும் மீண்டும் கூற விரும்புகிறேன். தயவுசெய்து இதைப் புரிந்துகொள்ள முயலுங்கள்: இந்த நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பவை அனைத்தும் ஒரு இனப்படுகொலைக்கான (genocide) ஆயத்தப் பணிகளே. அவர்கள் முஸ்லிம்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரை முற்றிலுமாக துடைத்தெறிய விரும்புகிறார்கள். அதுதான் அவர்களின் செயல்திட்டம்.நாம் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பற்றிப் பேசலாம் – ஆனால் அவர்களுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. அவர்களுக்கு மனசாட்சியே கிடையாது. ‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’ என்று உலகம் முழுவதும்…

Read More

ஒரு சினிமா படப்பிடிப்புக்காக தில்லிக்கு சென்றிருந்தேன். என்னுடைய படப்பிடிப்பு இரவில் நடந்ததால், பகலில் நேரம் கிடைத்தது. தில்லி அப்போது கோடையில் தகித்துக் கொண்டிருந்தது. புதிதாக மாநில அரசாங்கம் தேர்வாகியிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தில்லியில் இருந்தார்கள்… இப்போது சட்டமாகிவிட்டுள்ள, வக்பு திருத்த மசோதாவால் நாடாளுமன்றம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. உமர் காலித்தை நினைத்துக் கொண்டேன். அவர் சிறையிலடைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகப்போகிறது. திகார் சிறைக்குள் இருந்தபடி, இரக்கமற்ற இந்த வெப்பத்தை அவர் எப்படி சமாளித்துக் கொண்டிருப்பார் என நினைத்தேன். அவருடைய பெற்றோரும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களின் வீட்டிற்குச் சென்று சந்திக்க உடனே புறப்பட்டேன். தேச விரோதி எனப்படும் உமர் காலித்தை நீங்கள் அறிவீர்களா? அவரைப் பற்றிக் காண்பதற்கு முன் தேச விரோதி என்பவர் யாரென்று நாம் புரிந்துகொள்ள முயல்வோமா? அதை தெரிந்துகொள்ளாமல், தேச விரோதிக்கும், தேச பக்தருக்குமான வேறுபாட்டை எப்படி கண்டுகொள்ள முடியும்? மகாத்மாவே ‘தேச விரோதி’ ஆன கதை இதற்காக நாம் கடந்த…

Read More