“அப்துல் ரவுப்” – விசாரணை திரைப்படத்தின் அப்சல் கதாபாத்திரத்தின் நீட்டிப்புப் பாத்திரம். அப்துலும் அப்சலும் இதுவரை திரையில் வெவ்வேறு வடிவங்களில் நீங்கள் சந்தித்திருக்கலாம். பெரும்பாலும் அவர்கள் பயங்கரவாதிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதே அப்துல்களும் அப்சல்களும் விசாரணை கைதிகளாக இருப்பது உங்களுக்குத் தெரியுமா? “சிறை” எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை. பார்வையாளர்களால் பதில் கூற முடியாத கேள்விகள் அவை. பார்வையாளர்களின் கூட்டத்தின் பெரும் கைதட்டல்களுக்கிடையே, ஒருவகை பெரும் குற்றுணர்ச்சியும் வெளிப்பட்டதை காண முடிந்தது. அந்த குற்றுணர்ச்சிக்கான காரணத்தை பின்வரும் வரிகளில் கூற முயல்கிறேன். படத்தில் வரும் அப்துல் எனும் கதாபாத்திரம், போலீஸ் காவலில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். செல்லும் வழியில், போலீஸ் அதிகாரிகளின் அதீத கவனக்குறைவால் அப்துலுக்கு தப்பிச் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. தப்பிக்க முயற்சித்தாலும், பின்னர் அவன் பின்வாங்குகிறான். அவனது முடிவை மாற்றியது என்ன? “எப்படியும் பிடிபட்டுவிடுவோம்” என்ற பயமா? அல்லது வேறு ஏதும் காரணமா? கதைக்களம் நடைபெறும் காலம்…
