திகார் நிறைய மாறியிருக்கிறது. எங்களின் சிறைக்கூடத்தில் சுமார் 50 பேர் வரை உள்ளனர். இந்த எண்ணிக்கை இப்போது முன்பை விட அதிகமாகி விட்டது. அதேபோல் அமைதியும் முன்பை விட இப்போது குறைந்திருக்கிறது. உச்சநீதிமன்றமும் பிணை மனுவை நிராகரித்தற்கு பிறகு அமைதியின்மையின் சத்தம் இங்கு இன்னும் அதிகரித்திருக்கிறது. தீர்ப்புக்கு பிறகான ஊடகப் புயலிலிருந்து (புரலியிலிருந்து) இன்னும் நான் மீளவில்லை. ஆனால் சிறைவாசிகள் பலருக்கும் முன்பை விட என்னை தற்போது தெரிந்திருக்கிறது. என்னை குறித்து தொடர்ந்து பேசி வரும் தொலைக்காட்சிகளும் செய்தித்தாள்களுமே அதற்குக் காரணம். இப்போது அனைவரும் என்னிடம் சற்று நேரம் பேச விரும்புகின்றனர். ஆர்வத்தாலா? திகைப்பிலா? எனத் தெரியவில்லை. ஆனால் நானோ உண்மையில் தனியாக இருக்கவே பெரிதும் விரும்புகிறேன். என்னுடைய சிறையும் சற்று வித்தியாசம் பூண்டிருக்கிறது. இடைக்கால பிணை முடிந்து வீட்டிலிருந்து நான் கிளம்பியபோது, தீர்ப்பு சாதகமாக இருக்குமென ஏதோவொரு மூலையில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எனவே என் புத்தகங்கள், குறிப்புகள், படங்கள்,…
