• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»மாபெரும் தலைவர் பேராசிரியர் சித்திக் ஹசன் காலமானார்
குறும்பதிவுகள்

மாபெரும் தலைவர் பேராசிரியர் சித்திக் ஹசன் காலமானார்

முஹம்மது பஷீர்By முஹம்மது பஷீர்April 7, 2021Updated:May 29, 2023No Comments2 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

ஜமாஅத்-இ-இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் கே.ஏ.சிதீக் ஹசன் சாகிப் அவர்கள் ,  தனது உடல் உடல்நலக்குறைவால் காலமானார்.

இவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், சொற்பொழிவாளர், இஸ்லாமிய அறிஞர் மற்றும் சமூகத்துக்காகவும் அடித்தட்டு மக்களுக்காகவும்  நாள்தோறும் உழைக்கக் கூடியவர். ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் துணைத்தலைவர் மற்றும் தலைவராக நான்கு முறை திகழ்ந்துளார்(1990 முதல் 2005 ஆம்ஆண்டு வரை). பள்ளிகள், வீடுகள், பொது கிணறுகள், மசூதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவற்றை வழங்கி  சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்காக செயல்படும் டெல்லியை அடிப்படையாக  கொண்ட மனித நல அறக்கட்டளை( Human Welfare Foundation Vision 2016 ) விஷன் 2016 திட்டத்தின் நிறுவனர் மற்றும்  இயக்குநராகவும் பேராசிரியர் ஹசன் அவர்கள்  இருந்தார்.

இந்தியாவில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றத்திற்காக அவர் பல திட்டங்களுக்கு, குழுக்களுக்கு  தலைமை தாங்கினார். விஷன்  2016 (தற்பொழுது , ​​விஷன்  2026). மிகப்பெரிய அளவில் சமூகத்துக்கு பயனளிக்ககூடிய மிகப்பெரிய திட்டமாகும்.   இந்தத்த்திட்டமானது பேராசிரியர் ஹசன் சாகிப் அவர்களின் கனவுத்திட்டமாக இருந்ததோடு அவரே முன்னின்று இந்த மாபெரும் பணியையும் மேற்கொண்டார்.

பேராசிரியர் ஹசன் சாகிப் மே 5, 1945 அன்று கேரளாவின் திரிசூர் மாவட்டம் எரியட் நகரில் கே.எம். அப்துல்லா மெளலவி  மற்றும் பி.ஏ. கதீஜா ஆகியோருக்குப் பிறந்தார். அவர் ரவுததுல் உலூம் அரபிக் கல்லூரி, ஃபாரூக் கல்லூரி மற்றும் சாந்தபுரம், இஸ்லாமியா கல்லூரி ஆகியவற்றிலிருந்து அப்சல் உல் உலமா மற்றும் எம்.ஏ (அரபி) முடித்தார். . கேரளாவின் பல்வேறு அரசு கல்லூரிகளில் அரபு பேராசிரியராக பணியாற்றினார்.

Human Welfare Trust, Human Welfare Foundation, APCR, Society for Bright Future and Medical Service Society போன்ற பல்வேறு தொண்டு நிறுவங்களின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.  

பேராசிரியர் சித்திக் ஹசன் அவர்கள் ஐடியல் பப்ளிகேஷன் ட்ரஸ்ட்(Ideal Publication Trust) நிறுவனராகவும், தலைவராகவும் செயல்பட்டார். இந்த நிறுவனம் கேரளாவின்  பிரபல பத்திரிக்கையான மாதியமம் தினசரி மற்றும் வார நாளிதழ்களை வெளியிடுகிறது.

பிரபோதம் வார இதழின் தலைமை ஆசிரியராகவும், ஆல்டர்நேட்டிவ் இன்வஸ்மண்ட்  மற்றும் கிரெடிட் லிமிடெட்  ((Alternative Investment and Credit Limited) AICL) தலைவராகவும், கேரளாவைச் சேர்ந்த நிதி உதவி அறக்கட்டளையான பைத்துசகாத்தின் நிறுவனத் தலைவராகவும் இருந்தார்.

ஓய்வுபெற்ற பேராசிரியர் கே\லிகட்டின் கோவூரில் உள்ள தனது மகனின் இல்லத்தில் வசித்து வந்தார். பேராசிரியர் ஹசன் அவரது மனைவி வி.கே.சுபைதா மற்றும் குழந்தைகள் ஃபசல் உர் ரஹ்மான், சபிரா, ஷராபுதீன், அனிஸ் உர் ரஹ்மான் ஆகியோருடன் வசித்துவந்தார்.

நாம் மேற்கூறிய விஷயங்கள் பேராசிரியர் சித்திக் ஹசன் சாப் அவர்களை குறித்தான மிகச்சிறிய அளவிலான அறிமுகமே ஆகும். தனது வாழ்நாள் முழுவதும் இஸ்லாமிய இயக்கத்திற்காகவும், சமூகத்திற்காகவும் ஓடோடி உழைத்த மனிதர் தனது இறப்பிற்கு பின்னாலும் நமக்கு மிகப்பெரும் பாடத்தையும் அதன் மூலம் நமக்கான அதிகப்படியான  பணிகளையும் விட்டுச்சென்றுள்ளார். வல்ல அல்லாஹ் அவரது பணிகளை ஏற்றுக்கொள்வானாக, அவரை பொருந்திக்கொள்வானாக.  நம்மையும் அவரை போன்றே நன்மையான காரியங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில் உயிர் பிரியும் பாக்கியத்தை அளிப்பானாக (ஆமீன்).

Source : Companion(https://thecompanion.in/visionary-humanitarian-prof-siddique-hassan-passes-away/)

தமிழில் : பஷீர்

Loading

இஸ்லாமிய அறிஞர் எழுத்தாளர் சித்திக் ஹசன் சொற்பொழிவாளர் பேராசிரியர்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
முஹம்மது பஷீர்

Related Posts

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும் – சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு SIO கோரிக்கை

August 20, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026

அண்டை வீட்டார் உரிமைகள்

November 22, 2025

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.