சமூக ஊடகங்களின் திரையில் தொலைந்த சமுதாயம்! இன்று நம்மில் பலருக்கும் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றார்கள். எங்கோ தொலைவில் இருக்கும் இந்த இணையவழி நண்பர்களின் பிறந்தநாளுக்கு ‘Happy Birthday’ என்று வாழ்த்து தெரிவிப்பதில் தொடங்கி, அவர்களின் கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்காக நம்முடைய அனைத்து அசைவையும் இணையத்தில் பதிவிடுகிறோம். Like, Comment,Share, Followers எண்ணிக்கையைப் பற்றி அவர்களிடம் நாம் பெருமையாகப் பேசுகிறோம். அதேநேரம், சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் இணையத்தில் மூழ்கிய பெரும்பாலான GEN Z தலைமுறையினருக்கு வீட்டின் இருபுறமும், மேலேயும் கீழேயும் வாழும் அண்டை வீட்டாரின் பெயர்கூட தெரிவதில்லை. அவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது, அவர்கள் நலம் விசாரிப்பது போன்ற அடிப்படை மனிதநேயப் பண்புகள் மெதுவாக மறைந்து வருவதை நாம் உணரத் தவறிவிட்டோம்.இது வெறும் சாதாரண சமூக மாற்றம் அல்ல. இது மனித உறவுகளின் மையக் கல்லான அண்டை வீட்டார் அன்பு சிதைந்துவிட்டதற்கான ஓர் அபாயகரமான அறிகுறியாகும். இணைய உலகம் நம்மை…
