Author: அறிஞர் அண்ணா

(7-10-1957 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தநாள் விழாவில் அண்ணா ஆற்றிய சொற்பொழிவு) நபிகள் நாயகத்தை ‘மகான்’ என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால் இந்த 1957ஆம் ஆண்டில் சமுதாய விழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச் சொன்னால், எங்களை ஓட ஓட விரட்டுகிறார்கள் என்றால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் மிகவும் விவேகமான முறையில் அண்ணலார், “நீ வணங்க வேண்டிய கடவுள் இது அல்ல!” என்று கூறினார். அந்த மக்களிடம் தம் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னார். அதுதான் அவரை ‘மகான்’ என்று கொண்டாடக் காரணமாயிருக்கின்றது. அப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம்தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறதென்றால் அது ஆச்சரியமில்லை. ‘மார்க்கம்’ என்பது மக்களை ஒன்றுபடுத்துவது – மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது; மக்களை ஒற்றுமைப்படுத்துவது; அரிய பந்தங்களை ஏற்படுத்துவது; நல்ல தோழமையை வளர்ப்பது; சிறந்த விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணுவது. ‘மதம்’ என்பது…

Read More