நம் காலத்தில் வாசிப்பு என்பதன் பொருள் பொதுவாக என்னவாக உள்ளது? இந்தக் கேள்வி, நாம் வாசிப்பதே இல்லை என்பதை நிறுவுவதற்காக அல்ல. மாறாக, நாம் எதை வாசிக்கின்றோம் என்பதை குறித்தானது. வாசிப்பு என்பது புரிதல், அறிதல், உணர்தல், முனைப்பு போன்ற கூறுகளின் வழியே வருகிறது. வாசிப்பின் வழி ஆறுதலையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும், மிக முக்கியமாக உளப்பூர்வமான அறிவார்ந்த வாழ்வையும் நாம் காண்கிறோம். ஆனால் இன்று நாம் வாசிப்பின் புரட்சிகர ஆற்றலை இழந்துவிட்டோம். வாசிப்பின் நோக்கம் என்பது வெறுமனே அறிவை பெற்றுக்கொள்ளுதல் மட்டுமல்ல; மாறாக தேடுதலை நோக்கி நகர்வதே – அதாவது செயல்படுதல் எனும் பண்பை உருவாக்குவதே – ஆகும். இதற்காகவே புரிதல், அறிதல், உணர்தல் மற்றும் செயல்பட முனைதல் ஆகிய வாசிப்பின் கூறுகளை மகாத்மா ஜோதிபா பூலே அவர்கள் நமக்கு வழங்கினார். அவரது வாழ்க்கையும் எழுத்துக்களும் கூட ‘கற்றலின் மீதான ஆர்வத்தின்’ (taste for learning – பூலேவின் எழுத்துக்களின் அதிகம்…