(டில்லியில் தலகோட்ரா அரங்கத்தில் நடந்த வக்ஃப் பாதுகாப்பு மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமீரே ஜமாஅத் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி ஆற்றிய எழுச்சியுரையிலிருந்து..) நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இந்தச் சட்டத்துக்கு உம்மீத் (UMEED – நம்பிக்கை) என்று பெயர் சூட்டியிருக்கின்றார்கள். இது உம்மீத் (நம்பிக்கை) கிடையாது. இது தஃப்ரீக் – பிளவுபடுத்துகின்ற சட்டம் ஆகும். இது வெறுப்பை (நஃப்ரத்) ஏற்படுத்துகின்ற சட்டம் ஆகும். இது அநீதி நிறைந்த சட்டம் ஆகும். இது கொடுமை மலிந்த சட்டம் ஆகும். இந்தச் சட்டத்தின் அசல் நோக்கங்கள் என்ன? இந்தச் சட்டத்தின் பெயரிலேயே அவை அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இவற்றை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். UMEEDஇல் U என்பது Unconstitutional – அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டம்தான் இது என்பதை உணர்த்துகின்றது. ஆம். இந்தச் சட்டம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, பிரிவு 15, பிரிவு 25, பிரிவு 26, பிரிவு…