• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»ஆற்றாமையின் ஆறாம் தேதி
கட்டுரைகள்

ஆற்றாமையின் ஆறாம் தேதி

ஆர். அபுல்ஹசன்By ஆர். அபுல்ஹசன்December 6, 2018Updated:May 31, 2023233 Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதி

அந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மை கடப்பாரைகளுக்கு இரையானது

மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது

வேற்றுமையில் ஒற்றுமையென்பது வேருடன் பிடுங்கியெறியப்பட்டது

கதறலும்,கடப்பாறையின் சத்தமும் கலந்து கலங்கடித்து களியாட்டம் போட்டது

பாரதத்தாயிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையின் வாயுடன் மாரும் சேர்த்து அறுக்கப்பட்டது

பெரும்பான்மையினரின் குரல் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் குரல்வளை நெறிக்கப்பட்டது

காந்தி மகானை வீழ்த்தியவர்கள் கண்ணியமான மசூதியையும் தகர்த்தனர்

கரசேவையின் பெயரில் நரசேவை நடந்தேறியது

இப்போது செய்யப்பட்ட அறுவடையின் முதல் விதை விதைக்கப்பட்டதும் அன்றுதான்

சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்க ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தாதவர்கள்

அதற்காக சிந்தப்பட்ட இரத்தத்தை தங்கள் சிறுநீர் கொண்டு கழுவிய நாள்

தட்டிக் கேட்க வேண்டியவர்கள் எதனைக் கொண்டோ கட்டிப்போடப்பட்டனர்.l

ஒரு தலைமுறையாய் அலைகிறோம் நீதி வேண்டி

நீதி வழங்க வேண்டியவர்கள் பாதி பாதியாக பிரித்து வழங்கினர் நம்பிக்கையின் அடிப்படையில்

உண்மை எப்போதுமே தூங்காது அதர்மம் எப்போதுமே ஓங்காது

இந்த நினைவை எங்கள் நெஞ்சில் சுமந்து எம் பிஞ்சுகளுக்கு தாய்ப்பாலில் சேர்த்தூட்டுகிறோம்

எங்களின் இந்த இயலாமையை எங்களது பிள்ளைகள் இல்லாமல் ஆக்குவர்

எம் சமுதாயத் துயர் போக்குவர் என்ற அசைக்க முடியா நம்பிக்கையோடு

அபுல் ஹசன்

9597739200

Loading

உரிமை போராட்டம் டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
ஆர். அபுல்ஹசன்

Related Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025

நாம் ஏன் மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும்?

February 22, 2025

காஷ்மீர்: திரைப்படங்களால் திரிக்கப்படும் இராணுவ தேசம் (3)

December 14, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.