• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»தொடர்கள்»நைல் முதல் ஃபுராத் வரை..! – 3
தொடர்கள்

நைல் முதல் ஃபுராத் வரை..! – 3

AdminBy AdminJune 12, 2021Updated:May 29, 2023No Comments4 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

      கிமு 300 முதல் கிபி 200 வரையிலான கால-கட்டத்தில் நெகவ் பாலைவனத்தில் நான்கு நகரங்கள் வர்த்தகத்தில் செழித்திருந்தன. அவ்தக், ஹலுசா, மம்ஷிக், ஷவ்தா ஆகிய நான்கு பாலைவன நகரங்கள் தென் அரேபியாவின் மேமனிலிருந்து மத்திய தரைக்கடல் துறைமுகமான காசா வரையில் இலாபகரமான வர்த்தகப் பாதையாக இருந்து வந்தது. இந்தப் பாலைவன வர்த்தகப் பாதையில் பெட்ரா, காசா முதலான நகரங்களும் இணைக்கப்பட்டு மிகப்பெரும் பாலைவன வணிகம் பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது.

பாலஸ்தீனம் இதன் முக்கிய வணிகம் கேந்திரம். ஜெருசலம் பெருவாரியான மத்திய கிழக்கு அரபு மக்களின் வியாபாரத் தொடர்பு மிக்க நகராகவும் அறியப்பட்டிருந்தது. புனித யாத்திரை செய்பவர்களின் கூட்டமும், கிஸ்ரா, பாரசீகம், யமன் வியாபாரிகளின் சந்தைகளும், பதூயீன்கள், கானான்கள், சமாரியன்களின் ஒட்டகம், ஆடுகளின் விற்பனைச் சந்தைகளும், பாலஸ்தீனத்தின் நெகவ் பாலைவனத்தை ஓர் வணிகக் கேந்திரமாக மாற்றியது. 1920ஆம் ஆண்டு பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆர்மி ராங்குலர் ஜீப்பில் புழுதி பறக்க அந்த நெகவ் பாலைவனத்தில் வந்து இறங்கினான் சர் ஹெர்பர்ட் சாமுவேல். பாலஸ்தீனத்தை ஆட்சி செய்வதற்காக பிரிட்டன் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட ஹை கமிஷனர்.

முதலாம் உலக யுத்தம் நிறைவடைந்தவுடன் பிரிட்டனும், பிரான்சும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டன. ஒட்டமன் பேரரசும் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதால் அதன் கட்டுப்பாட்டில் இருந்த பல நாடுகளை பிரிட்டனும் பிரான்சும் பங்கு போட்டுக் கொண்டன. அதனடிப்படையில் பாலஸ்தீனம் பிரிட்டனின் காலனி நாடாக அறிவிக்கப்பட்டது. சர் ஹெர்பர்ட் சாமுவேல் பாலைவனத்தைத் தாண்டி ஜெருசலம் நகருக்குள்  பிரவேசித்தான். அவன் மனம் பெரும் பூரிப்பில் கிளர்ச்சியுற்றிருந்தது. ஜெருசலத்திற்கு தன் வாழ்நாளில் ஒரு முறையாவது வர வேண்டுமென்பது அவனின் கனவு. ஆனால் பாலஸ்தீனத்துக்கு ஆட்சியாளராக வருவேன் என்பதை அவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. சர் ஹெர்பர்ட் சாமுவேல் ஒரு யூதன். பிரிட்டன் சாம்ராஜ்யத்தில் முதல் காபினட் அமைச்சராக அறிவிக்கப்பட்ட முதல் யூதனும் கூட. எலிஷியர் பென் பின்காஸ் சாமுவல் என தன் பெயரை ஹீப்ருவில் அழைப்பதை விரும்பக்கூடிய சியோனிச யூதன்.

பாலஸ்தீனத்தில் யூத குடியேற்றங்களை நடத்திக் காட்ட வேண்டும். அதன் மூலம் யூதர்களுக்கு என தனி நாடு இங்கே மலர வேணடும் என்ற கனவோடுதான் நெகவ் பாலைவனத்தில் காலடி எடுத்து வைத்தான் சர் ஹெர்பர்ட் சாமுவேல். அவன் பாலஸ்தீனத்தில் வந்திறங்கிய நாள் முதல் இன்று வரையில் அம்மக்களின் புவியியல் தன்மையும், நிம்மதியும் மொத்தமாகப் பறிபோய்விட்டது. அவனை பாலஸ்தீனத்து மக்கள் ஒரு புழுப் பூச்சியை விட கேவலமாகப் பார்த்தனர், வெறுப்பை உமிழ்ந்தனர். ஒரு யூதனின் கீழ் அடிமையாக வாழ்வதை அம்மக்கள் விரும்பவில்லை.

சர் ஹெர்பர்ட் சாமுவேல் அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சியோனிச யூதர்களின் குடியேற்றத்தை இந்த மண்ணில் வெற்றிகரமாக நடத்திக் காட்டவேண்டும் என்பது மட்டுமே அவனின் குறிக்கோளாக இருந்தது. யூதர்களின் பூர்வீக மண்ணில் யூதர்களுக்கு என தனிநாடு உருவாக வேண்டும். அதற்கான திட்டங்களை வடிவமைப்பதில் மட்டுமே அவன் கவனம் செலுத்தினான். இலண்டனில் செயல்படும் சியோனிச அமைப்பு அவனிடம் தனிப்பட்ட முறையில் அவர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியே இங்கு அனுப்பி வைத்தது. ஒட்டுமொத்த யூதர்களின் நம்பிக்கையை செயல்படுத்தும் இடத்தில் சர் ஹெர்பர்ட் இருந்தான். அவன் ஆட்சிசெய்த ஐந்து ஆண்டுகளில் யூத குடியேற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்தினான். பாலஸ்தீனர்களின் எதிர்ப்பை இராணுவ பலம் கொண்டு அடக்கி ஆண்டு அவன் செய்த வேலை யூத குடியேற்றம் மட்டுமே. 1922ஆம் ஆண்டில் 11 சதவீதமாக இருந்த யூத குடியேற்றம், 1940ஆம் ஆண்டில் முப்பது சதவீதமாக உயர்ந்தது என்றால் அதன் முழு முதற்காரணம் சர் ஹெர்- பர்ட் சாமுவேல்தான்.

உலக வரலாற்றில் இதுபோன்ற திட்டமிடலுடன் குடியேற்றங்கள் நடந்ததே இல்லை. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் வீழ்ச்சிக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றம் தங்கு தடையில்லாமல் நடந்தது. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய முஸ்லிம் நாடுகளில் ஒற்றுமை இல்லை. உதுமானிய கிலாபத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முஸ்லிம் நாடுகளை வழிநடத்தக் கூடிய முறையான அமைப்பும் இல்லை. யூதர்களுக்கு இது  சாதகமான சூழல். பிரிட்டனின் அனுசரனையும் யூதர்களுக்கு இருந்தது. சட்டப்பூர்வமாக யூதர்கள் பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கலாம் என்ற சட்ட முன்வரைவை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இதைத் தட்டிக் கேட்பதற்கு எந்த முஸ்லிம் நாடும் முன்வரவில்லை. காரணம் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் பிரிட்டனின் காலனி நாடாகவும், பிரான்சின் காலனி நாடாகவும் இருந்தன. துருக்கி சுதந்திர ஜனநாயக நாடாகத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு, பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் ஜால்ரா அடிக்கும் நாடாக மாறியிருந்தது.

சர் ஹெர்-பர்ட் சாமுவேலின் ஐந்து ஆண்டு ஆட்சியில் இஸ்ரேலுக்கான அத்தனை அடித்தளங்களும் முடுக்கிவிடப்பட்டன. வெற்றிகரமாக தன் வேலையை முடித்துவிட்டு பிரிட்டன் திரும்பிய சர் ஹெர்பர்ட் சாமுவேல் பாலஸ்தீனத்தில் தான் செய்த சீர்திருத்தங்களை பிரிட்டன் அரசுக்கு அறிக்கையாகக் கொடுத்தான். பிரிட்டன் பிரதமர் ஸ்டான்டிலி பால்ட்வின் வசம் ஹெர்பர்ட் கொடுத்த அறிக்கையின் படிதான் பிரிட்டன் ஃபால்பர் ஒப்பந்தத்தைத் தயார் செய்தது. 1948ஆம் ஆண்டில் அதன் அடிப்படையில்தான் இஸ்ரேல் என்ற நாடும் யூதர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

சர் ஹெர்பர்ட் சாமுவேல் என்ற யூதனின் ஆரம்பகட்ட பணிகள் இஸ்ரேல் உருவாக்கத்தின் அத்தனை அடிப்படை வேலைகளையும் முடித்து வைத்திருந்தது. 1947ஆம் ஆண்டுக்குப் பிறகான இன வன்முறைகள் பாலஸ்தீனத்தில் உச்சகட்ட வன்முறையாக திட்டமிட்டே கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்தக் காலகட்டத்-தில் சுமார் 70 சதவீத பாலஸ்தீன நிலம் யூதர்கள் வசம் சென்றுவிட்டது. ஜெருசலம் நகரம் யூதர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பெயரளவில்தான் பாலஸ்தீனர்கள் அங்கு வாழ்ந்தனர். நிலங்களைக் கைப்பற்றுவதற்காக யூதர்கள் வன்முறையின் அத்தனை கோரத்தையும் கையிலெடுத்தனர். அர்னால்ட் டாயின்பீ என்ற மேற்கத்திய எழுத்தாளரின் வரிகளில் சொல்ல வேண்டுமென்றால், ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய இன துவேசத்தைவிட இந்த யூதர்கள் பாலஸ்தீனியர்களின் மேல் காட்டிய இன துவேசம் அதிகம் என்பதுதான். 1948ஆம் ஆண்டில் மெதிநாத் யாஸ்ராயில் என பெயர் சூட்டிக் கொண்டு நவீனத்துவ யூத நாடாக பிரகடனப்படுத்தினார்கள் யூதர்கள். நவீனத்துவ ஜனநாயக நாடு என்றார்கள். ஜெருசலம் மட்டும் யூதர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் பொதுவானது என்று முடிவு செய்தார்கள். ஜெருசலம் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் இருக்கும் என்றார்கள்.

யூதர்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களுமென எவர் வேண்டுமானாலும் புனித யாத்திரை வரலாமென அறிவிப்பும் செய்தார்கள். ஆனால், யூதர்கள் ஜெருசலத்தை முழுமையாகக் கைப்பற்றும் வேலையையும், கச்சிதமாய் செய்தார்கள். பெரும்பாலான இஸ்ரேலிய அரசாங்கத்தின் தலைமை அலுவலகங்கள் ஜெருசலத்தில் இருக்கின்றன. காரணம் ஜெருசலம் யூதர்களின் தலைநகரம். ஐக்கிய நாடுகள் சபையின் எந்த உத்தரவையும் இஸ்ரேல் பின்பற்றுவதாக இல்லை. 1948ஆம் ஆண்டு முதல் 1966ஆம் ஆண்டு வரையில் மட்டும் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இன வெறியாட்டம் செய்வதாக ஏழுமுறை கண்டனத் தீர்மானங்கள் இயற்றப்பட்டும் இஸ்ரேல் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் யூத சியோனிஸ்ட்களின் இன வெறுப்பையும், வன்முறையையும் உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வரும் பனி இஸ்ரவேலர்கள் வெறுப்பதுதான். ஆனால் அகண்ட இஸ்ரேலுக்-கான அத்தனை வேலைகளையும் செய்வது சியோனிச யூதர்கள் என்பதால் வெறும் எதிர்ப்புப் பேரணி நடத்தி தங்களின் எதிர்ப்பை மட்டும் பதிவு செய்கிறார்கள்.

நன்றி சமரசம்

இஸ்ரேல் பாலஸ்தீன முஸ்லிம்கள் பாலஸ்தீன்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025

ஃபலஸ்தீனம் மீதான இனப் படுகொலையில் அமெரிக்காவின் பங்கு

November 7, 2024

ஷஹீத் யஹ்யா சின்வாரின் இறுதி உயில்

October 23, 2024

“தூஃபாநுல் அக்ஸா” – அக்டோபர் 7ம் இஸ்ரேலின் தோல்வியும்

October 9, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.