நாங்குநேரியில் சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து அனைவரும் அறிந்திருப்போம். சமூக வலைதளங்களில் அதை பற்றியான கருத்துகள் அதிகம் பேசப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் இதைகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அறிவியலும் தொழில்நுட்பமும் கொடிகட்டி பறக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டில் வாழும் மக்கள் என்று தங்களை மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும் சாதி என்ற மிக கொடிய விஷச்செடியை அழிக்க இயலவில்லை, அது இன்றோ பெரும் மரமாக வளர்ந்து நிற்கிறது. அதில் சுவைமிக்க கனியும் இல்லை; ஓய்வெடுக்க நிழலும் இல்லை; அதற்கு மாறாக அது விஷத்தையே கனியாகவும், வெறுப்பையே நிழலாகவும் தருகிறது. பல் இல்லா கிழவியிலிருந்து பள்ளியில் படிக்கும் மாணவன் வரை சாதியின் வேர் ஆழப்படர்ந்துள்ளது, மக்களின் சிந்தனையோடு அது கலந்து இருக்கின்றது. எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் சக மனிதனை இழிவாக கருதும் அவல நிலை வார்த்தைகளால் சொல்ல இயலாத பெரும் மன வடுவாகவே அதை அனுபவிக்கும் மக்களின் உள்ளத்தில்…
Author: அகமது இப்ராஹிம் ஜா
கடந்த ஆகஸ்ட் 6 – 7 ஆகிய நாட்களில் திருச்சி, தஞ்சாவூர், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஹரியானா மாவட்டத்திலும் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடும் இந்துத்துவ சங்பரிவாரத்தினரை கண்டித்தும், RPF காவல் அதிகாரி ஓடும் ரயிலில் மூன்று முஸ்லிம்களையும் அவருடைய பழங்குடிஇன உயரதிகாரியையும் சுட்டு கொன்றதை கண்டித்தும், மூன்று மாதங்களுக்கும் மேலாக பழங்டியினருக்கு எதிராக மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த வன்முறை அனைத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிய நிவாரணம் வழங்கவும் குற்றவாளிகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) #MuslimLivesMatter எனும் கருப்பொருளின் கீழ் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கான காரணம் இந்துப் பெரும்பான்மைவாதக் கருத்தியல் சமூக மட்டத்திலும் அதிகார மையங்களிலும் ஆழமாகக்…