சுதந்திரம் பெற்றது முதல் ‘போலி மதச்சார்பின்மைவாதிகள்’ குற்றம் சுமத்தி வந்ததுபோல் இங்கு முஸ்லிம்களுக்கான எந்த ஆதரவு குரலுமில்லை. இன்று பெரும்பான்மைவாத வெறுப்புவாதிகள் முஸ்லிம்களை வேட்டையாடுவது, அவர்கள் வழிபாட்டிடங்களைத் தாக்குவது, குடியிருப்பையும் வாழ்வாதாரத்தையும் புல்டோசரால் தகர்ப்பது, உணவு, உடை போன்ற கலாச்சார சின்னங்களை மறுப்பது போன்றவற்றை அரங்கேற்றுகிறார்கள். மதச்சார்பின்மையின் சிதைந்த வடிவமே சங்பரிவாரங்களின் வழிமுறையாக உள்ளது. இது நூற்றாண்டு கால திட்டமாகக் கண்டெடுத்த கலாச்சார தேசியத்தின் அறுவடையாகும். இது விடுதலை வீரர்கள் முன்மொழிந்த அனைவரையும் உள்ளடக்கிய பிராந்திய தேசியத்திற்கு எதிரானதாகும். முகமது அலி ஜின்னா வெளிப்படுத்துவதற்கு முன்பே விநாயக் தாமோதர் சாவர்க்கர் இரு தேச கொள்கையை முதலில் கட்டமைத்தார். 1923ம் ஆண்டு தேசியத்திற்கான அவரது சிந்தனையை வார்த்தை மாறாமல் இவ்வாறு குறிப்பிட்டார், ‘அனைத்து இந்துக்களுக்கும் பாரத தேசமானது பித்ரு பூமியாகவும் புண்ணிய தேசமாகவும் உள்ளது. அவர்களின் தந்தை நாடு மட்டுமன்றி புனித நாடாகும். நமது நாட்டின் முகமதியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் உண்மையில் கட்டாயமாக…
Author: அஜ்மீ
ராமநவமி கொண்டாட்டம் என்ற பெயரில் சங்பரிவார் கும்பல் பல மாநிலங்களில் வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளது. இதனைக் குறித்துப் பேசியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ‘அமைதியைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் இந்தியா அவ்வப்பொழுது தடியை ஏந்துவதும் அவசியம். இந்த உலகம் அதிகாரத்தின் மொழியை மட்டுமே புரிந்துகொள்ளும்’ என்றார்.கடந்த ஏப் 13ம் தேதி ஹரித்வாரில் நடந்த ஆன்மீக மாநாட்டில் பேசிய பகவத், சுவாமி விவேகானந்தர் மகரிஷி ஆரோ பிந்தோவின் கனவு 10,15 வருடங்களில் உணரப்படும் என்றும் கூறினார். ‘நீங்கள் 20,25 வருடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், பத்து வருடங்களில் அவர்கள் கனவு கண்ட இந்தியாவைக் காண்போம். எந்த விஷயமும் ஒரு கணத்தில் சாத்தியப்படாது. நான் அதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. அது மக்களோடு உள்ளது. அவர்களே அதைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் தயாராகும்போது ஒவ்வொருவரின் மனநிலையும் மாறுகிறது. உன்னால் முடியும் என நாங்கள் அவர்களை தயார்ப்படுத்துகிறோம். நாங்கள் ஒரு முன்னுதாரணமாகப் பயமின்றி நடைபோடுகிறோம். நாங்கள் அகிம்சையைப்…
உத்திர பிரதேச தேர்தலில் பாஜகவின் மாபெரும் வெற்றி எவ்வாறு சாத்தியமானது என்ற உரையாடலே கடந்த வாரங்களை நிறைத்திருந்தது. அதில் முக்கிய பேசுபொருளாகக் காவி அரசியல் எப்படிப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களைக் கவர்ந்தது என்பதாக இருந்தது. குறிப்பாக, இந்துத்துவமும் மக்கள் நல அரசும் இணைந்து சாதியப் பிரிவினைகளைக் கடந்து பாஜகவின் வெற்றியைச் சாத்தியமாக்கியது என்றெல்லாம் கூறப்பட்டது. ஓபிசி மற்றும் தலித்துகளின் கவர்ச்சிகரமான ஆதரவு இருந்தபோதும், பாஜகவின் வலிமையான வெற்றிக்கு அவை முக்கிய காரணமல்ல. அது பலரும் கவனிக்கத் தவறிய பாஜகவின் மரபார்ந்த வாக்கு வங்கியான உயர்சாதியினரின் ஆதரவு. ஏனென்றால், சில புள்ளிவிவரங்கள் கூறும் ஆதரவு நிலைப்பாடுகள் சத்தமில்லாமல் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. Lokniti-CSDS நிறுவனத்தின் அரசியல் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, வழக்கம்போல் 89% பார்ப்பனர்களின் ஓட்டு பாஜக கூட்டணிக்குச் சென்றுள்ளது. ராஜ்புத், பனியாக்களின் முறையே 87% மற்றும் 83%. Axis என்ற மற்றொரு நிறுவனத்தின் கணக்கீடு சிறிதளவே வேறுபட்டுள்ளது. பாஜகவுக்கு வாக்களித்த பார்ப்பன ஆண்,…
வன்மம் கொப்பளிக்கும் வெறுப்பு பேச்சு, வகுப்புவாத தூண்டல் எனச் சிறுபான்மையினரை அழித்தொழிக்க அழைப்புவிடுத்த இந்துத்துவ சாமியார்களின் ‘தரம் சன்சத்’ என்ற கூட்டம் சமீபத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் தொடர் செயல்பாடுகளைப் பார்த்து வருபவர்களுக்கு இது திடீரென்று நடந்த நிகழ்வாகவோ அல்லது வியப்பளிக்கும் தனித்த நிகழ்வாகவோ தெரியாது. மதவாத கூட்டமைப்பு என்ற பெயரில் யாத்ரி நர்சிஞானந்த், பிரபோதானந்தா கிரி, சுவாமி சிந்து மகாராஜ், சாத்வி அன்னபூர்னா போன்ற பல இந்து பிரச்சாரகர்கள் ஐந்து மாநில தேர்தலில் பாஜகவை வெல்ல வைப்பதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெயரளவிலான இந்துத் தலைவர்கள் ‘சுவாமி, மகாராஜ்’ போன்ற பெயர்களை இட்டுக்கொண்டு அதிகாரத்தோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள். உபி முதலமைச்சர் ஆதித்யநாத், உத்தரகாண்டின் புஷ்கர் சிங் தாமி மற்றும் பாஜகவின் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ-க்கள் இத்தகைய சாமியார்களிடம் அடிபணிந்து வணங்கும் வீடியோக்களை காணலாம். நரேந்திர மோடி தலைமையிலான அரசும் பாஜக உறுப்பினர்களும் முஸ்லிம்களை தகாத வார்த்தையில் தாக்குவது, காந்தியைக் கொன்ற கோட்ஸேவை புகழ்வது, ஆதித்யநாத் உருதுவை அவமதிப்பது போன்றவையின் நீட்சியாக நடந்த ‘தரம் சன்சத்’ கூட்டம் நம்பமுடியாத…
பதினேழு மாதம் கடும் சிறைவாசம், பக்கவாதம் உட்பட உடல்நிலை துன்பியல் அனைத்தையும் கடந்து மனைவியையும் தனது மூன்று பிள்ளைகளையும் காண 90 நாள் இடைக்கால பெயிலில் வந்தார் முகமது சஹித். தோள்பட்டையில் குண்டடிபட்டு சிறையில் உடல்நலம் முற்றிலும் சீர்கெட்ட சஹிதின் மருத்துவ உதவிக்காகவே அவரும் அவர் மனைவி சஜியா பர்வீனும் மாதக்கணக்கில் போராட வேண்டியிருந்தது. கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி பக்கவாத தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே சஹிதுக்கு இடைக்கால பெயில் கிடைத்தது. கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 16 பிரிவுகளின் கீழ் சஹித் மீது வழக்குப் போடப்பட்டது. வடகிழக்கு டெல்லி கலவரத்தில் பங்கேற்றவர்கள் என்று கைது செய்த முஸ்லிம்களில் ஒருவர். நம்பகமற்ற குற்றச்சாட்டில் கைதான இவர்கள் விசாரணையின்றி சிறையில் கழிக்கிறார்கள். 53 உயிரிழப்பு (அவர்களில் 75% பேர் முஸ்லிம்கள்), 581 பேர் படுகாயம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் உடைமை இழப்பிற்குக் காரணமான இக்கலவரத்தை சிஏஏ போராட்டக்காரர்கள் திட்டமிட்டு நிகழ்த்தியதாக போலீஸ் கூறியது.…
இந்திய ஜனநாயகத் தேர்தலில் மக்கள் தொகை அமைப்பு எந்தளவிற்கு முக்கிய பங்காற்றுகிறது என்ற உண்மையை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது. இந்திய பன்மைத்துவத்தில் வெவ்வேறு மதம் மற்றும் சாதிகளின் எண்ணிக்கை தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகிறது. சீனாவிற்கு அடுத்து உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு என்ற இடத்தைப் பெற்ற இந்தியா, விடுதலைக்குப் பிறகு மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் பல திட்டங்களை அறிவித்தது. ஆனால், யதார்த்தத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த பீவ் (Pew) ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய அறிக்கை இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கலை முன்வைக்கிறது. இந்தியாவின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதை உறுதிப்படுத்தும் அறிக்கை, ஒரு இந்தியப் பெண் சராசரியாக 2.2 குழந்தைகளை தன் வாழ்நாளில் பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பிறப்பு விகிதம் அதிகம். ஆனால், முந்தைய இந்திய நிலைமைகளைப் பார்க்கும்போது குறைந்திருப்பதைக் காணலாம். 1992ல் 3.4, 1950ல்…
அமெரிக்க அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்திய நிகழ்வு செப்டம்பர் தாக்குதல். அதன் பிறகான அச்சுறுத்தலை இன்றும் எதிர்கொண்டு வருகிறது முஸ்லீம் சமூகம். பெயரளவிலான ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ முஸ்லிம்களை இலக்காக்கியதையும் இஸ்லாமிய வெறுப்பை பொது விசயமாக்கியத்தையும் அனைவரும் அறிவர். ஆனால், அமெரிக்க நீதிமன்றங்களில் இதற்கான வழக்குகளில் இன்றுவரை நீதிக்காகப் போராடும் முஸ்லிம்களைப் பற்றி அறிந்திருப்பது சொற்பம். Rutgers Center for Security, Race and Rights ஆய்வின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் 2001ம் ஆண்டிலிருந்து போடப்பட்ட 175 முஸ்லீம் சிவில் உரிமை வழக்குகளை எடுத்துக்கொண்டோம். அதில் வெறும் 17% வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. பெரும்பாலானவை விசாரணைக்கு முன்பே நீதிபதிகளால் புறந்தள்ளப்பட்டது. 2001க்கு பிறகு முஸ்லிம்கள் பாகுபாட்டை மட்டும் அடையவில்லை, நீதி நிறுவனங்களில் அர்த்தபூர்வமான விடுதலையையும் பெறவில்லை என்பதை எங்கள் ஆய்வின் ஆரம்பத்திலேயே கண்டோம். இத்தகைய பெரும்பாலான மனித உரிமை மீறல் வழக்குகள் வழக்கறிஞர்கள் நியமிக்க நீதிபதிகளால் பரிந்துரைக்கப்படுகிறது. சட்டவிரோத கட்டணம் வசூலித்தாலும்…
செப்டம்பர் தாக்குதலைச் சீனா எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது? கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தின் நெருக்கடி மோசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2001 செப்டம்பர் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் உய்குர்கள் மீது நேரடி ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டது. செப்டம்பருக்குப் பிறகு உலகளாவிய அளவில் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ அறிவித்தது அமெரிக்கா. இதன்பெயரில் மற்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதங்களைக் களைய முனைப்புக் காட்டப்பட்டது. இதனைப் பின்தொடர்ந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, உய்குர்களின் போராட்டம் உலகளாவிய தீவிரவாதத்தின் ஒரு பகுதியே அன்றி, உள்ளூர் பிரிவினைவாத செயல் அல்ல என்று அறிவித்தது. அமெரிக்காவும் இந்த விளக்கத்தை அப்படியே ஏற்றுக்கொண்டது. அப்பொழுது, பெரிதும் அறிந்திராத ஆப்கனின் ஆயுதப் போராட்டக் குழுவான ‘கிழக்கு தர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தையும் (இடிஐஎம்)’ பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருந்தது. உய்குர் முஸ்லிம்களை குவாண்டனமோ வளைகுடா சிறையில் அடைத்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரைப் பயன்படுத்தி உய்குர் மக்கள் தொகையில் பெரிய…
காஷ்மீர் தன்னாட்சியின் தந்தை என்று தன் வாழ்க்கை முழுவதும் போற்றப்பெற்றவர் சையத் அலி கிலானி. ‘அவர் ஒருவர் யாருக்கும் தலைவணங்கியதில்லை. அவர் ஒருவர் யாருக்கும் விலைபோனதில்லை.. அவர் கிலானி’ என்பதே தன்னாட்சி போராட்டக்காரர்களின் முழக்கமாக இருந்தது. அவர்கள் இன்று கிலானியை இழந்து அனாதையாகியிருக்கிறார்கள். உடல்நிலை சரியில்லாமலும் வீட்டுக் காவலிலும் இருந்த 92 வயது கிலானி நீண்ட காலமாகப் பொதுவெளியில் செயல்படாமல் இருந்தார். ஆனால், காஷ்மீர் தன்னாட்சி உரிமையான சட்டவிதி 370 நீக்கியது உட்பட நூற்றுக்கு மேற்பட்ட முறை காஷ்மீரை முடக்கியிருக்கிறார் கிலானி. கடந்த வாரம் கிலானியின் மறைவு ஆகஸ்ட் 4 2019 அன்று காஷ்மீர் தன்னாட்சி உரிமை நாளை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்தது. பொதுமக்களுக்குத் தடை, தொலைத்தொடர்புகள் ரத்து, முறையான இறுதி சடங்குக்கு அனுமதி மறுப்பு போன்ற நிகழ்வுகள் ஒரு முக்கிய தலைவரின் இறப்பை எப்படிப் பார்க்கின்றன என்பதை விடக் காஷ்மீரின் இன்றைய மோசமான நிலையையே பிரதிபலிக்கிறது. இன்று கிலானி மறைவுக்குப்…
ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்துவர்களின் வெறுப்பிற்கு மற்றொரு காரணமாக மாறியுள்ளது. பாஜகவின் வெறுப்பரசியலுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் முதல் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூகவலைத்தள பிரபலங்கள் வரை இலக்காகியுள்ளனர். மேற்கத்திய ஆதரவு அரசை தாலிபன்கள் தூக்கி எறிந்த அடுத்த சில நிமிடங்களில், இந்தியச் சமூக வலைத்தளங்களில் #GoToAfghanistan, #GoToPakistan போன்ற கோஷங்களை இந்து அடிப்படைவாதிகள் பரப்பினர். தாலிபன், தாலிபனியம் என்ற வார்த்தை பாஜக ஆதரவு மற்றும் எதிர்ப்பு இரு குழுக்களிடையேயும் புதிய அர்த்தத்தை வழங்கியுள்ளதாகக் கூறுகிறார் கவிஞர் மற்றும் செயற்பாட்டாளர் உசைன் ஹைதிரி. ஜிகாதி, பாஸ்கிஸ்தானி, பயங்கரவாதி என்று முஸ்லீம் வெறுப்பை உமிழ்பவர்களின் மற்றொரு இலக்கணமாகவும் அது உருவாகியுள்ளது என்கிறார். இந்தியாவில் 1921ல் நடந்த மாப்பிளா கலகம் அப்பொழுதே தாலிபனிய சித்திரத்தைப் பிரதிபலித்தது. அதை தற்போதைய கேரள அரசு மூடிமறைக்கிறது என்று கூறியிருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த ராம் மஹதேவ். 100 ஆண்டுகளுக்கு முன் காலனியகால நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான…