இன்றைய சமூகத்தில் தனித்தன்மை பற்றிய கருத்து தீவிரமாக வளர்ந்து வருகிறது. மிகக் குறிப்பாக ‘செல்ஃபி’ கலாச்சாரத்தின் வளர்ச்சியால் மேலும் அதிகரித்துள்ளது. ஒரு நபரின் அடையாளமும் அவரின் மீதுள்ள மதிப்பும் அவர் தன்னை எப்படி சமூக ஊடகங்களின் வழி காட்சிப்படுத்துகிறார் (Digital Representations) என்பதை வைத்தே அளவிடப்படுவதாக மாறியிருப்பதை இந்த அதிகப்படியான செல்ஃபி கலாச்சாரம் நமக்கு உணர்த்துகிறது. லைக்ஸ், கமெண்ட்ஸ் வழியாக தன்னை வெளிக்காட்ட நினைக்கும் இச்சிந்தனையை குறித்து பேசுகிறது இந்த கட்டுரை. இந்த செல்ஃபி கலாச்சாரமானது தற்போது உள்ள தனிமனித அடையாளத்தை பற்றிய புரிதலை மாற்றி அமைப்பது மட்டுமல்லாமல் உளவியல் மற்றும் சமூகவியல் சார்ந்த விளைவுகளிலும் தாக்கம் செலுத்துகிறது.மேலும், தன் மீதான அதீத கவனம் மற்றும் மனநல பாதிப்புகள் போன்ற காரணிகளை மட்டுப்படுத்துகிறது. டிஜிட்டல் உலகில் ‘நான்’: சுயத்திலிருந்து காட்சிப் பொருளாக வரலாறு நெடுகிலும், தனிமனித சுயம் என்பது மெய்யை உணர்வதும் தனிப்பட்ட நபரின் வளர்ச்சியாகவுமே பார்க்கப்பட்டு வந்துள்ளது. இது அவனுடைய…
