சமூகத்தின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை கல்வி, பயிற்சி, சீர்திருத்தம், போதனை, கலாச்சார விழிப்புணர்வு ஆகியவற்றை வழங்குவதோடு, நம்பிக்கை, நெறிமுறைகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கின்றன. விளையாட்டும் கேமிங் துறையும் 21ஆம் நூற்றாண்டில் பல மாற்றங்கள் இவ்வுலகில் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் உடல்நலத்துடன் இணைத்து பார்க்கப்பட்ட விளையாட்டு எனும் செயல்பாடானது இன்று தொழில்நுட்பம் மற்றும் முதலாளித்துவத்தின் தாக்கத்தின் காரணமாக அதன் கருத்தே மாற்றம் கண்டுள்ளது. வீடியோ கேமிங் தொழில்துறையின் தோற்றம், தொலைபேசிகள் மற்றும் கணினிகள் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் ஏற்பட்டது. மக்கள் பிளேஸ்டேஷன் போன்ற சாதனங்களில் விளையாடத் தொடங்கியபோது, கேமிங் துறை வேகமாக வளர்ச்சி கண்டது. இணையப் புரட்சியானது தொலைபேசி மற்றும் கணினியின் அணுகலை எளிதாக்கி கேமிங்கை மேலும் பரவலாக்கியது. ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் தொலைபேசிகளில் இலவசமாக எண்ணற்ற புதிய விளையாட்டுகள் கிடைக்கத் தொடங்கியதால், ஆன்லைன் கேமிங் மிகவும் எளிதாக அணுகக் கூடிய…

