Author: முஹம்மது சாதிக் இப்னு ஷாஜஹான்

ஆர் எஸ் எஸ், பாஜகவினர் போன்ற காவி கும்பல் கூறக்கூடிய வளர்ச்சி என்பதை சற்று உற்று நோக்கினால் ஒரு விஷயம் நமக்கு தானாகவே புரியும். இவர்கள் தனியார்மயத்தை ஊக்குவிப்பதுடன் அதனுடன் ஹிந்துத்துவத்தையும் கலந்து அதனை ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மக்களுக்கு முன் எடுத்து வைக்கும் போது அந்த பெயர், சிந்தனை ரீதியாக, சித்தாந்த கருத்தைப் போல வீரியம் பெற்றுவிடுகிறது. குஜராத் மக்கள் மீண்டும், மீண்டும் மோடி அரசை பதவியில் அமர்த்துவதற்கான காரணம் அம்மாநிலத்தின் பெரும்பான்மையான இந்து மக்கள் ஹிந்துத்துவ கருத்தியலுக்கு அடிமையாக இருப்பதாலாகும், ஆனால் இந்த ஹிந்துத்துவ கருத்தியலை மட்டுமே நம்பி இருப்பது தகுந்ததல்ல என்பதை புரிந்து கொண்ட மோடி அரசு தன் மீதோ தன் அரசின் மீதோ வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் ‘குஜராத் உடைய கௌரவத்தின் மீதான தாக்குதல்’ என்றும், ‘குஜராத் சாதித்திருக்கும் வளர்ச்சியின் மீதான தாக்குதல்’ என்றும் ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைத்திருக்கின்றனர்.குஜராத்தை குறித்து ஏதேனும் ஒரு…

Read More

மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி… இன்று நாம் பார்க்கவிருக்கும் வளர்ச்சி மோடி முதலமைச்சராக இருந்த அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் குஜராத்தின் பாதையை முன்மாதிரி பாதையாக மாற்றியமைத்த ஆஸ்தான வளர்ச்சி… வேறு என்ன ? பொருளாதார வளர்ச்சி தான். பொருளாதார ரீதியாக குஜராத் எம்மாதிரி வளர்ச்சி பெற்றது என்பதை பார்ப்பதற்கு முன் ஒரு விந்தையான உண்மையை உங்களிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறேன், ஏனெனில் அது இந்த கட்டுரைக்கும் அவசியமானது… எந்த ஒரு வளர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதற்காக திட்டங்கள் வரையறுத்து, அந்த திட்டங்களுக்கு பெயர் வைப்பது முக்கியமானது, ஏனெனில் அதை வைத்து தானே நாம் இன்ன இன்ன திட்டங்கள் இன்ன இன்ன வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டது என்பதை கண்டுகொள்ள முடியும். ஆனால் பாஜகவை பொறுத்தவரை இது கொஞ்சம் வித்தியாசமானது, இவர்கள் ஒரு வளர்ச்சியை ஏற்படுத்த முயன்றால் அந்த வளர்ச்சிக்கான பெயர்களே அந்த வளர்ச்சி முடிவில் என்னவாகப் போகிறது என்பதை நமக்கு உணர்த்திவிடும். இந்த…

Read More

பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதிகள் அண்மையில் தென் மாநிலங்கள் – குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகா – போன்ற மாநிலங்கள் எவ்வாறு முன்னேற்றமடையவில்லை என்றும், பாஜக தான் ஆட்சி செய்த மாநிலங்களில் எவ்வாறு வளர்ச்சியைக் கொடுக்கின்றன என்றும் இந்த தென் மாநிலங்கள் தாங்கள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பவை குறித்தான உரைகள் மற்றும் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். பாஜக தான் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றி அதிக அளவில் பிரகடனம் செய்கின்றனர், குறிப்பாக பிரதமர் மோடி முன்பு முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை வைத்து ‘குஜராத் மாதிரி’ இந்தியாவின் மற்ற மாநிலங்களின் மாதிரியை காட்டிலும் அதிக அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது, மேலும் உலக அளவிலான ‘நகர மாதிரி’களுக்கு இணையான அளவில் குஜராத் வளர்ச்சி கண்டுள்ளது என்பதாக 2013-2014 கால வாக்கில் மிகப்பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தினர். இதன் விளைவாக பாஜகவிற்கு மிகுந்த செல்வாக்கு…

Read More