“இளைய தலைமுறையினரிடம் நிர்வாணத்தையும் விபச்சாரத்தையும் பரவலாக்கினால் எந்தவொரு நாட்டையும் யுத்தமின்றி அழித்துவிட முடியும்” என்பார் சலாஹுதீன் அய்யூபி. உண்மையில், சமூகத்தில் அழிவை உண்டாக்கும் இந்த விஷயங்களை இன்று நாம் மிகப் பரவலாகக் காண முடிகிறது. நிர்வாணமும் கட்டற்ற விபச்சாரமும் இன்றைக்கு விஸ்வரூபமெடுத்திருக்கின்றன. பின்வரும் விஷயங்களைச் சுற்றியே நவீன, மதச்சார்பற்ற மேலை சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவை மேற்குலகத்தைத் தாண்டியும், முஸ்லிம் சமூகங்களிலும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன: தற்காலத்தில் எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் மக்கள் ஆட்டு மந்தையைப் போல நிர்வாணம், விபச்சாரம் ஆகிய ஒழுக்கக்கேட்டின் படுகுழியின் ஆழத்தில் மூழ்குவதைப் பார்க்க முடிகிறது. இஸ்லாம் கற்பிப்பது இவற்றுக்கெல்லாம் முற்றிலும் முரணானது; இந்தத் தீமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்துவது: இஸ்லாத்தைப் பொருத்தவரை, இங்கே சுட்டிக்காட்டிய இறைவன் விதித்த விதிமுறைகள் இரு பாலருக்கிடையிலான தொடர்பாடலை நிர்ணயிக்கின்றன. அவை தனிப்பட்ட அளவில் நம்மைப் பாதுகாப்பதுடன், குடும்ப அமைப்பையும் பாதுகாக்கிறது. மேலும், சமூகம் சீரழிவில் வீழ்த்துவிடாமலும் தடுக்கிறது. நாம் இந்த…
