1989 ஆம் ஆண்டு நடைப்பெற்ற காஷ்மீர் கலவரங்களின் வடு சற்று ஆறிக் கொண்டிருக்கும் இந்நிலையில் அதில் கைவைத்து, சீழ் பிடிக்கச் செய்து முழு உடலிலும்புற்றாகப் பரவ செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தில் பாஜகவின் பெரும் ஆதரவோடு இயக்குனர் விவேக் அக்னியொத்ரி இயக்கத்தில் வெளிவந்தப் திரைப்படம் “தீகாஷ்மீர் ஃபைல்ஸ்”
திரையரங்குகளில் வெளியாகி சமூகத்தில் பெரும் சலசலப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது, கலவரத்தின் ஒருபக்க நியாயத்தையும், வலியையும் மட்டும் காட்சிப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பையும் வன்மத்தையும் தூண்டும் எண்ணத்தில் இப்படம் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது, இதில் மிகவும் கவலையளிப்பதாக இருப்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருந்துக்கொண்டு மதக் கலவரங்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தை பிரதமர் மோடி அவர்கள் ஆதரிப்பது தான்
காஷ்மீர் பண்டிதர்களின் இறப்பையும், இழப்பையும் நாம் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை, மனிதன் எந்த இனத்தை, மதத்தை, சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவன் அநியாயமாக எவனால் துன்புறுத்தப்பட்டாலும் அது தவறான ஒன்றுதான் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை நாம் எப்படி சீர் அமைக்க வேண்டும் என்று சிந்திக்காமல் அடிப்படை ஆதாரங்கள் ஏதுமில்லாமல் மதக் கலவரங்களையும் மக்களிடையே பதட்டமான சூழ்லையும் எதிர்பார்த்து அமைந்திருக்கும் இப்படத்தின் உண்மையை நாம் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்,
காஷ்மீரின் கடைசி மன்னராக இருந்தஹரி சிங் பெரும்பாண்மை முஸ்லிம்கள் வாழும் நிலப்பரப்பின் ஹிந்து மன்னராக இருந்தார், அன் நிலையில் (கர்வாபசி) தாய்மதம் திரும்புங்கள் என்னும் கொள்கையை செயல்படுத்த விரும்பினார் ஆனால், முஸ்லிம்கள் ஹிந்து வாக மாறிவிட்டால் தான் அனுபவித்து வரும் சலூகைகளை பங்கு போட வேண்டி வரும் என்று பயந்த பண்டிதர்கள் ஆற்றில் இறங்கி நாங்கள் தற்கொலை செய்துக்கொள்வோம், பிராமணனைக் கொண்ரபிரம்ம கத்தி தொஷம் ஏழேழு ஜென்மத்திற்க்கும் உங்களை விடாது என்று மிரட்டினர். இதிலிருந்தே காஷ்மீரில் இருந்த பண்டிதர்களின் கை ஓங்கி இருந்தது என்று தெரிகிறது. அவ்வப்போது பண்டிதர்கள் மற்றும் காஷ்மீரில் வாழ்ந்த மற்ற சமூகங்களுக்கிடையில் சண்டைகள் மூன்டுக் கொண்டு இருந்தன, 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் பண்டிதர்களுக்குமிடைமில் மிகப் பெரிய அளவில் கலவரம் வெடித்தது இதில்அனைத்து தரப்பிலும் உயிர் மற்றும் உடைமைகள் சேதமடைந்தன, முதல்தாக்குதல்அலி முஹம்மது வதாவி என்ற முஸ்லீம் போலீஸ் மீது நிகழ்ந்தது.
மீர் முஸ்தஃபா என்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அப்துல் கணி என்ற காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் முஷிர் உல்ஹக் போன்ற பல்வேறு முஸ்லிம்கள் மரணமடைந்தர்க்கு பின்பே கலவரம் துவங்கியது.
அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்ட பண்டிதர்களின் எண்ணிக்கை 219 ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூஸ்லிம்கள் அக்கலவரத்தில் கொல்லப்பட்டார்கள்.
1990 முதல் 2007 வரை 399 பண்டிதர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள் ஆனால் தீவிரவாதி என்று பட்டம் சுமத்தப்பட்ட முஸ்லிம்கள் 15000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எப்படி பாதிக்கப்ட்டவர்களை விட தீவிரவாதிகளின் மரண எண்ணிக்கை அதிகமாக இருக்க முடியும் அப்படியென்றால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?
அக்கலவரத்தைத் தொடர்ந்து பிப்ரவரி 23, 1991 அன்று ஆயிரக்கணக்கான இந்திய இராணுவப் படையினர்
(குனன் மற்றும் போஷ்புரா) என்ற இரு கிராமங்களில் cordon and search operation எனும் பெயரில் நுழைந்து 13 வயது சிறுமி முதல் 80 வயது முதியவர் வரை கற்பழித்தனர். இதற்க்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்.
இந்தியா முழுவதிலும் BJPயின் காஷ்மீர்ஃபைல்ஸ் படத்தை வைத்துகலவரம்தூண்டுகிறனர் ஆனால் 1990 காஷ்மீர் கலவரத்தின் போது BJPயின் வீபிசிங் ஆட்சி மத்தியில் இருந்தது, காஷ்மீரில் Rss கவர்னர் ஜக்மோகன் மல் ஹோத்ரா ஆட்சியில் இருந்தார், பண்டிதர்கள் அங்கிருந்து வெளியேற கவர்னர் ஜக்மோகன்தான் தூண்டினார் என்கிறார் சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பக்ஹெல்
ஒன்றிய ஆட்சியின் கீழ் காஷ்மீர் கொண்டு வரப்பட்டே மூன்று ஆண்டுகளாகி விட்டன காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து அரசியல்அமைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்டன. ஆறு லட்சம் பாதுகாப்புப் படையினரின் நேரடிக் கட்டுப்பாட்டில் காஷ்மீர் உள்ளது. இத்தனைக்கும் பிறகு பண்டிதர்களின் நிலையை மேம்படுத்த இவர்கள் கொண்டுவந்திருப்பது வெறுப்புப் படம் மட்டும்தான் என்கிறார் ஆய்வாளர் அசோக் சுவாயின்.
வெறுப்பின் மூலம் அச்சத்தையும் வன்மத்தையும் பதட்டத்தையும் விதைக்க வேண்டும் என்னும் நோக்கில் இப்படம் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் வாட்ஸ்ஆப் குப்பைகளைக் கொண்டு முஸ்லிம்களின் மீது வன்மத்தை உருவாக்க விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி எடுத்த இஸ்லாமிய வெறுப்பும் படம் தான்இது.
குழந்தைகள், பெண்கள், அண்டை வீட்டார், மாணவர்கள், உலமாக்கள், என அனைத்துத் தரப்பு முஸ்லிம்களும் மோசமானவர்கள் என படம் பேசுகிறது. பார்க்கவே முடியாத வன்முறைக் காட்சிகளைக், காட்சிப்படுத்துவதன் மூலம் உளவியல் ரீதியானத் தாக்குதலை படம் பார்க்கும் அனைவரிடமும் இப்படம் ஏற்படுத்துகிறது.
ஆசாதி, அல்லாஹு அக்பர் எனற அநீதிக்கு எதிரான கோஷங்களை பிரிவினைவாத கோஷங்களாக சித்தரிக்கிறார்கள் ஆளும் அரசுகள் அக்கிரமம் செய்யும் போதெல்லாம் முதலாவதாக குரல் எழுப்பும் JNU மாணவர்களை கொச்சைப்படுத்துவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன
பல மாநிலங்களில் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் ஒருபடி மேலாக உத்திரப்பிரதேசத்தில் காவல் துறையினருக்கு இப்படம் பார்க்க ஒருநாள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட மோசமான திரைப்படத்தை நாட்டின் பிரதமரே விளம்பரப்படுத்தும் பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளிப்பதும் மிகவும் மோசமான கீழ்த்தரமான ஒன்று.
முஸ்லிம்கள் மீது வெறுப்பையும் அவர்கள் தாக்கப்பட்டால்அது சரிதான் என்று நினைக்க வைக்கும் மனநிலையை உருவாக்குவதற்கான திட்ட்மிடலாகும் இது
பாதுகாப்பான ஒரு சமூகத்தை கட்டமைக்க இதைப்போன்ற படங்கள் தடுக்கப்பட வேண்டும் என்கிறார் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவர் ஷபீர் அஹமத் அவர்கள்.
இந்தியாவில் பல்வேறு கலவரங்கள் நிகழ்ந்துள்ளன அதில் அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதோடு பழிசொல்லுக்கும் உட்படுத்தப் பட்டுள்ளனர்
கலவரங்கள் தடுப்பதே அரசின் கடமை தூண்டுவதல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும் கலவரங்களை தன் சுயநலத்திற்காக உண்டாக்கி அதன் மூலம்தன் ஆட்சியை நிலைநாட்டவேண்டும் என்னும் நோக்கில் செயல்பட்டால் இந்தியாவும் இலங்கையின் நிலைக்கு வருவதற்கு வெகு தொலைவிலல்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
வகுப்புவாதத்தை தூண்டும் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், மற்றும் வெறுப்பை விதைக்கும் தீ காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற அனைத்துப் படங்களும் தடைசெய்யப்பட வேண்டும்!
சக்கீல் – எழுத்தாளர்