இயற்கைக்குமாறாகஆண்-ஆண்,பெண் பெண் இடையேயான உடல் ரீதியான தொடர்பு, விலங்குகள், குழந்தைகளுடன் புணர்வது போன்ற செயல்களை தண்டனைக்குரிய குற்றம் என்று வரையறுத்த அரசியல் சட்டப்பிரிவு 377 செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தனி மனித சுதந்திரம், சமத்துவம் இவற்றிற்கு எதிரான இந்த சட்டப்பிரிவு என்று தலைமை நீநிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
ஓரினச் சேர்க்கையினை தனி மனித சுதந்திரம் என்று வாய்கிழியக் கூறுபவர்களுக்கு இது ஒரு கேவலமான, மனிதத்தன்மைஅற்ற செயல்என்று ஏனோ புரியவில்லை. இதனை மிருகத்தனம் என்று கூறினால் அந்த ஐந்தறிவு ஜீவன்கள் கூட அவமானம் தாங்காமல் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டுவிடும். ஏனெனில் மிருகங்கள் கூட ஒரே பாலினத்தில் உறவு வைத்துக்கொள்ளமாட்டா என்பதே நிதர்சனம்.!
தன்னைத் தாண்டி சமூகத்தை பாதிக்காதவரையே தனி மனித சுதந்திரம். ஆனால் ஓரினச்சேர்க்கையால் இரண்டு தனி மனிதர்களைத் தாண்டி சுற்றியுள்ள பலரும் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. இதற்கு பல்வேறு கல்லூரி விடுதிகளில் நடைபெற்ற தற்கொலைகளே சான்று.
சிறுவயது முதல் எனக்கு மூன்று முறை ஆண்களால் தவறான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. இறைவனின் கிருபையால் மூன்று முறையும் நான் அதிலிருந்து தப்பிப் பிழைத்திருக்கின்றேன். ஒரு முறை பேருந்தில் நான் விரட்டிவிட்ட பிறகு நான்கைந்து இருக்கைகளுக்கு முன்பு சென்று அமர்ந்தவன், அங்கு இருந்தவனை படுத்தியபாட்டை இறங்கும் போது பார்த்து கடும் கோபம் கொண்டேன். அங்கே பாதிக்கப்பட்டவன் சம்மதத்துடன் அந்த அக்கிரமத்தை அவன் செய்யவில்லை, என்ன செய்வதென்று தெரியாத ஒரு சூழலில் அந்த நபர் மாட்டிக் கொண்டிருந்தார். எனது தெருவில் இன்றும் இருக்கும் அந்த நபர் வீட்டருகே எனது சகோதரிகளின் பிள்ளைகளை அனுப்பக்கூடாதென்று சொல்லிவைத்திருக்கிறேன்.
நண்பர்கள் பலரும் கூட பார்த்த, கேட்ட, எதிர்கொண்ட கேவலமான நபர்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள். தனி மனித சுதந்திரம் என்பது பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வரையில் தான். எந்த இடத்தில் பிறரது சுதந்திரம் பாதிக்கப்படுகிறதோ, உரிமைகள் நசுக்கப்படுகிறதோ அங்கு தனி மனித சுதந்திரம் என்பது காணாமல் போய் சமூக நலன் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
பரஸ்பரசம் மதம், தனிமனித உரிமை, சுதந்திரம் இவற்றைக் கொண்டு அனைத்தையும் நியாயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை..அப்படி எல்லாவற்றுக்கும் இவற்றை காரணிப்படுத்தினால் இன்னும் பல மோசமான விசயங்களை எளிதில் ஆகுமானதாக்கிவிட முடியும். நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தது போல போதை மருந்துகள் உபயோகிப்பது கூட தனிநபர் உரிமைதான்.. அதனை அனுமதித்து விட முடியுமா.? மெல்ல சமுதாயத்தையே அரித்து விடும் தீமையல்லவா அது.. சாதியக் கொடுமையில் கூட ஒடுக்கப்பட்டவர்கள் விரும்பாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் தாங்கள் ஒடுக்கப்படுவதை அறிந்து உடன்பட்டுதான் வாழ்ந்திருக்கின்றனர். அதற்காக அதனை நியாயப்படுத்தி விட முடியாதே.
சில விசயங்களில் தனி நபர் பரஸ்பரம் என்பதை தாண்டி சமுதாயத்தின் நன்மை என்ற ரீதியிலும் செயல்பட வேண்டிஇருக்கிறது. சிறு வயது முதல் இப்போது வரை பல செயல்களுக்கு பயிற்றுவிக்கவும், கட்டுப்படுத்தவும், நன்மை,தீமைகளை பிரித்தறியவும் பல்வேறு படித்தரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பள்ளி, ஆசிரியர்கள், குடும்பம், பெற்றோர்கள், உறவினர்கள், சமூகம், நண்பர்கள், அரசு, நீதிமன்றங்கள் இப்படி நிர்மாணிக்கப்பட்ட கட்டுப்பாட்டு சக்திகளுக்கு உட்பட்டு பிறருக்கு பாதகம் இல்லாமல் நமது தனிப்பட்ட விருப்பங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் நலம் பெற்று வாழ முடியும்.
இறைவன் இவ்வுலகில் படைப்புகள் அனைத்தையும் ஜோடிகளாக படைக்கக் காரணம் அவை தங்களுக்குள் இணைந்து தங்கள் இனத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்காகவே. ஆனால் மனிதனின் குறு மதி எப்போதும் இயற்கைக்கு முரணாகவே சிந்திக்கின்றது. ஏற்கனவே இயற்கையின் நியதியை குலைக்கும் வண்ணம் மனிதன் செய்த செயல்களால் இந்த உலகம் கண்ட அழிவுகள் ஏராளம்.. ஏராளம். இப்போது இந்த கேவலமான செயல் மூலம் மனித இனத்தையே அழிவுப்பாதையை நோக்கி முன்னெடுத்துச் செல்ல முனைந்துள்ளது சில மானங்கெட்ட மனிதக் கூட்டம்.
வட மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களின் வாக்குகளைப் பெற மத்திய அரசும், அமைச்சர்களும், அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பிற்குஆதரவு தெரிவித்திருப்பது வேதனை.. ஊடகங்களும் இந்தத் தீர்ப்பினை சிலாகித்து முழுப்பக்க செய்தி வெளியிடுவது, ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான கட்டுரைகளை, விவாதங்களை திரும்பத் திரும்ப காட்சிப்படுத்துவது என்று முழுவீச்சில் இறங்கியுள்ளன.
நீநிமன்றங்கள் எப்போதும் நியாயமான தீர்ப்புகளை வழங்குவதில்லை. நீதிமன்றங்களின் எல்லாத் தீர்ப்புகளும் ஊடகங்களால் இப்படி விவாதிக்கப்படுவதில்லை. 18 வயதிற்குகுறைவாக இருந்த காரணத்தினால் கொடூரமான குற்றம் இழைத்துவிட்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டபோது, பாபர் மசூதி வழக்கில் ஆவணங்களை புறந்தள்ளி விட்டு, நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, சாட்சிகள் பல்டி அடித்த காரணத்தால், காஞ்சிபீடாதிபதிகள் விடுதலை செய்யப்பட்ட போது, இன்னும் நீதி தேவதை கண்களை மூடிக்கொண்ட இது போன்ற பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள் வெளியான போது உண்மையினை உரக்கச் சொல்லும் இந்த ஊடகங்கள் தங்களை மியூட் செய்து கொண்டு, இப்போது இந்த தீர்ப்பிற்கு வக்காலத்து வாங்குவது பத்திரிகை தர்மத்தையே சவக்குழியில் இட்டு புதைப்பதற்கு சமம்.
எங்களது உறவையும் மீறி அதில் பரிமாறப்படும் எங்களது உணர்வுகளைப் பாருங்கள் என்று ஓரினச் சேர்க்கையாளர்கள் கூறுவது தங்களின் காம வேட்கையினைத் தணித்துக் கொள்ளகூறும் சப்பைக்கட்டு என்பதே உண்மை. இன்று இந்த இழிசெயலை தனி மனித சுதந்திரம் என்று கூறுபவர்கள், நாளைதாய்-மகன், தந்தை-மகள், சகோதரன் சகோதரி என்பது போன்ற நினைத்துக் கூட பார்க்க முடியாத உறவுகளையும் தன் குடும்பசுதந்திரம் என்று கூறினாலும் கூறுவர். விலங்குகளுடன்பு ணர்வதும், இரத்த பந்தங்களுக்குள் உறவுவைத்துக் கொள்வது இவையெல்லாமும் கூட தனி மனித உரிமை என்று நாளை வழக்கு தொடுக்கப்படலாம்.. அப்போது தனி மனித சுதந்திரம், சமத்துவத்தின் பெயரால் அவையும் அனுமதிக்கப்படக்கூடும்..
நாகரிகம் உருவாகிவிட்டது, நதிக்கரை நாகரிகம் தோன்றிய பிறகு மனிதன் முன்னேறிவிட்டான் என்றெல்லாம் பாடங்கள் படிக்கவைத்துவிட்டு இப்போது மீண்டும் காட்டு மிராண்டி காலத்துக்கு சமூகத்தை நகர்த்திச் செல்லும் சட்டங்களை நீதிமன்றங்கள் உருவாக்குகின்றன. இயற்கையுடன் மனிதன் முரண்பட்டு நிற்கும் போதெல்லாம் அழிவுகளே பரிசாக கிடைக்கும் என்பது வரலாறு கற்றுத்தரும் படிப்பினை. ஆண்-பெண்ஈர்ப்பு, கலப்பு இதுதான் இயற்கை. ஆண்-ஆண், பெண்-பெண் இது இயற்கைக்கு முரணாணது.
உடல் சுகம் மட்டுமல்ல, உணர்வுகளின் பகிர்வுக்குமானதேஓரினக்கலப்புஎன்றவாதம்வைக்கப்பட்டால்பிறகுநண்பர்கள்எதற்குஇருக்கிறார்கள், குடும்பஉறவுகள்எதற்குஇருக்கிறது.? நண்பர்கள், குடும்பஉறவுகளுக்குள்பகிரப்படாதஉணர்வுகளைஇப்படிமுறையற்றஉறவுகளின்மூலம்தான்பகிரப்படவேண்டும்என்றால்அத்தகையஉணர்வுகள்பகிரப்படாமலேஇருப்பதுதான்சிறந்தது.
குடும்ப அமைப்பை சீரழிக்கும் ஓரினக்கலப்பு, நாகரிகம் பெற்றதாக, அறிவு வளர்ந்ததாக சொல்லப்படும் எந்த சமுதாயத்திற்கும் அழகல்ல. அது அழிவாகத்தான் இருக்கமுடியும்.மனித இனம் தழைக்க வேண்டுமெனில், நாளைய சமுதாயம் நிம்மதியாக வாழ வேண்டுமெனில், நம் நாட்டின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்றால் ஆபாசம், அனாச்சாரங்கள், ஓரினச் சேர்க்கை போன்ற மனித குல விரோத செயல்களையும், அதற்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்களையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
அபுல்ஹசன்
தொடர்புக்கு : jeraabu.88@gmail.com