• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»அம்மாகிட்ட நெறய கேக்கணும்..
கட்டுரைகள்

அம்மாகிட்ட நெறய கேக்கணும்..

ஆர். அபுல்ஹசன்By ஆர். அபுல்ஹசன்April 15, 2018Updated:June 1, 20232,059 Comments3 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

காஷ்மீர் மீண்டும் தேசத்தின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இந்த முறை கல்வீச்சு, தனிநாடு போராட்டம், இறுதி ஊர்வல கலவரம் என்று வழக்கமாக வருவதைப் போல் இல்லாமல் வித்தியாசமான் செய்தியுடன்.

காஷ்மீர் என்றாலே இந்திய மக்களுக்கு நினைவுக்கு வருவது இராணுவம் மீதும், காவல்துறை மீதும் கற்களை வீசும் சிறுவர்கள், வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த கையோடு இந்தியாவிற்கு எதிராக போராடும் தொப்பி, ஜிப்பா, தாடி வைத்த மக்கள். திரும்பத் திரும்ப இவற்றைத் தான் தேசிய ஊடகங்கள் என்று சொல்லப்படும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் நமக்கு காஷ்மீர் என்ற பெயரில் காட்டி வருகின்றன. நாமும் காஷ்மீர் என்றால் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகள் நிறைந்த பகுதி என்றே எண்ணுகின்றோம்.

ஆனால் உண்மையில் பனிச்சிகரங்களாலும், மலைகளாலும் சூழப்பட்ட இடம். பூக்களின் தேசம் என்று அழகுற அழைக்கப்பட்ட பள்ளத்தாக்கு. பார்ப்பதற்கு ரம்மியமான, பூமியின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்பட்ட காஷ்மீருக்கு இன்று ஏன் இந்த இழிநிலை? அமைதியாக வாழ வேண்டும் என்ற கனவுடன் இந்தியாவுடன் இணைந்த காஷ்மீரை சொந்த தேசத்து இராணுவமே கற்பழித்தது. “இராணுவ சிறப்பு அதிகார சட்டம்” என்ற ஒற்றை சொல்லாடலில் இராணுவத் தீவிரவாதம் இராப்பகலாக தலைவிரித்தாடி வருகின்றது. சாலையில் சென்று வர சாவினை வென்று வர வேண்டியுள்ளது. காலையில் கணவனை புன்னகையுடன் வழியனுப்பிய மனைவி மாலையில் அவனது பிணத்தை வரவேற்கும் அவலம். தெருவில் விளையாடச் சென்ற குழந்தை உயிருடன் திரும்ப வரும் என்று நிச்சயமில்லாத சூழல். பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை சீருடை அணிந்த அந்த கயவர் கூட்டம். அனைவரையும் தீவிரவாதி என்று பட்டமிட்டு துப்பாக்கித் தோட்டாக்களைப் பரிசாக வழங்கி வருகின்றது. மலர்களின் புன்னகையை மட்டுமே பார்த்து ரசித்த அம்மக்கள் துப்பாக்கித் தோட்டாக்களையும், மரண ஓலங்களையும் பார்க்க நேர்ந்தது. உரிமைக்காக போராடும் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் கொடூரம். மனிதக் கேடயமாக காஷ்மீர் குடிமக்களைப் பயன்படுத்தும் மிருகத்தனம் அரங்கேறுகின்ற அவலம். ஆம்! அமைதி வேண்டி இந்தியாவுடன் இணைந்த  அம்மக்களை அந்த இந்தியாவே புரிந்து கொள்ளாத நிலையே இன்றும் தொடர்கின்றது.

காஷ்மீரின் கத்துவார் மாவட்டத்தில் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி சில அரக்கர்களால் கடத்தப்பட்டு, 8 நாட்கள் ஒரு கோவிலில் அடைத்து வைக்கப்பட்டு தொடர்ச்சியாக வன்புணர்வு செய்யப்பட்டு தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தான் கடந்த சில நாட்களாக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. மூன்று மாதங்களுக்கு முன்பு அரங்கேற்றபட்ட இந்த அரக்கத்தனம் வெளி உலகிற்கு வரவே இத்தனை நாட்கள் ஆகியுள்ளது. காரணம் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஆளும் பாஜகவைச் சார்ந்தவர்களாகவும், ஒரு காவல்துறை அதிகாரியும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருந்ததாலும் உண்மை மூடி மறைக்கப்பட பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கூடாது என்று பாஜகவினரும், இந்துத்துவ இயக்கத்தினரும் ஊர்வலம் நடத்தியுள்ளனர். மேலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை பல மணி நேரம் தாமதப்படுத்தியுள்ளனர். இப்படி அரசியல்வாதிகள், காவல்துறை, நீதித்துறை என்று அனைவரும் இணைந்து மனிதத் தன்மையற்ற மாபாதகச் செயலை செய்துள்ளது தேசத்தையே உலுக்கியுள்ளது.

கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட ஆசிஃபா தனக்கு நடந்த அசிங்கங்களை சொல்லியிருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார்.

என் பேரு ஆசிஃபா. புஜ்ஜி என்னோட குதுர. அன்னைக்கு ஒரு நாள் அம்மா என்னக் கூப்டு புஜ்ஜிய வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க..நானும் மேதோவுக்கு போய் புஜ்ஜிய தேடிட்டு இருந்தேனா அப்போ ஒரு தாத்தா உன்னோட குதிரை அந்தப் பக்கமா போனுச்சு பாப்பா, வா நான் உன்ன கூட்டிட்டுப் போரேன்னு சொன்னாரு.. நானும் கூடவே போனேன். திடீர்ன்னு அந்த தாத்தா என்ன ஒரு இடத்துக்குள்ள கூட்டிட்டு போய் பூட்டிட்டாரு..

இன்னொரு அன்கிளும் அங்க வந்தாங்க..கையில எதோ மிட்டாய் மாதிரி வச்சுருந்தாங்க..அத என்ன சாப்பிட சொன்னாங்க..அந்த புது அங்கிள் என்னோட கழுத்தப் புடிச்சு நெறிச்சு அந்த மிட்டாய சாப்ட வச்சாரு.. கொஞ்ச நேரம் கழிச்சு என்னோட தொடைக்கு பக்கத்துல வலிச்சுச்சு, ஒன்னுக்கு போலாம்ன்னு தோணுச்சா, ரொம்ப வலிச்சு சிகப்பு கலர்ல வந்துச்சு.. வலி நிக்கவே இல்ல, அந்த தாத்தாவும், அன்கிளும் என்ன எதேதோ பண்ணாங்க, என் மேல ஏறி படுத்து வலிச்ச இடத்து மேல அமுக்குனாங்க, இன்னும் வலி அதிகமாச்சு, நான் கத்துனப்போ என் வாயில எதையோ வச்சு அடச்சு கத்த விடாம பண்ணிட்டாங்க..அப்பறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல..

இன்னொரு தடவ ஒரு புது அன்கிள் வந்தாரு, அவர் போலிஸ் போடுற ட்ரஸ் போட்ருந்தாரு..அவங்க எதோ பேசிக்கிட்டாங்க, அப்பறம் அந்த போலிஸ் ட்ரஸ் போட்ட அன்கிளும் அவங்க பண்ணுன மாதிரியே என்ன எதோ பண்ணாங்க.. ஒன்னுக்கு போனப்பலாம் சிகப்பு கலர்லயே வந்துச்சு, ரொம்ப வலிச்சுச்சு, அம்மாகிட்ட போனும்ன்னு அழுதேன், அந்த தாத்தா, அன்கிள்லாம் சேந்து என்னோட தலைல கல்ல தூக்கி போட்டு அடிச்சாங்களா தலைல இருந்தும் சிகப்பு கலர்ல வந்துச்சு, மயங்கிட்டேன்..அப்பறம் முழிச்சுப் பாத்தா காட்டுக்குள்ள கிடந்தேன்..என்னோட ட்ரஸ் எல்லாமே சிகப்பு கலர்ல மாறிடுச்சி..

அம்மாவப் பாக்கணும், புஜ்ஜி வீட்டுக்கு வந்துடுச்சா, என்ன ஏன் வீட்டுக்குக் கூட்டிட்டு போக வரல, அந்த தாத்தா, போலிஸ் ட்ரஸ் போட்ட அன்கிள்லாம் யாரு, என்ன பண்ணுனாங்க என்கிட்ட, எதுக்கு என்ன அடிச்சாங்க,  ஏன் ஒன்னுக்கு சிகப்பா வந்துச்சு, ஏன் வலிச்சுச்சி,  இன்னும் நிறைய கேக்கணும்..

அபுல் ஹசன்

9597739200

 

Loading

காஷ்மீர்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
ஆர். அபுல்ஹசன்

Related Posts

அண்டை வீட்டார் உரிமைகள்

November 22, 2025

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

அண்டை வீட்டார் உரிமைகள்

November 22, 2025

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.