Author: Admin

வேட்டியை கீழாடையாக அணியும் வழக்கம் நெடுங்காலமாக நம் தமிழகத்தில் இருந்துவருகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் முதலிய அண்டை மாநிலங்களிலும் இது புழக்கத்தில் இருக்கும் ஒன்றுதான். எனினும், தமிழ்நாட்டில் வேட்டிக்கு ஒரு தனி இடம் உண்டு. நாம் வேட்டி என்று சொல்வதை வேறு சில பெயரை கொண்டும் பிற மாநில மக்கள் குறிப்பிடுகிறார்கள். சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கிரிக்கட் கிளப் சங்கத்தில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வேட்டி உடுத்தி சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் அவர்களும் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இருவரும் கிளப்பினுள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டியை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல தமிழ் நாட்டில் கூட உரிமை இல்லையா! என்று ஆக்ரோசப்பட்டு சமூக ஆர்வலர்கள் எதிர் குரல் எழுப்பினார்கள். வேட்டிக்கு அனுமதி மறுக்கும் கிளப்புகளையே மூடவேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.…

Read More