Author: Admin

இவர் தான் ரமேஷ் குமார் ஜல்லா.ஆசிஃபாவின் வழக்கை விசாரித்தவர். BJPயின் பல அமைச்சர்கள் இவரை நெருக்கடிக்குள் ஆளாக்கியபோதும் தன் உயிரையே பணயம் வைத்து உலகத்திற்கே அதிர்ச்சி அளிக்கும் அந்த குற்றப் பத்திரிக்கையை பதிவு செய்கிறார்  நீதிமன்றத்தில்.ஒருவேளை ஜஸ்டிஸ் லோயாவையும் ஹேமந்த் கர்கரேவையும் மனதில் வைத்துக் கொண்டு இவருக்கு வேண்டுமானால் இந்த வழக்கில் இருந்து விலகியிருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யாமல் இரவு பகலாக ஆஸிஃபாவின் நீதிக்காக அவர் உழைத்திருக்க வேண்டும் அதனாலேயே அவரால் இத்தகைய வழக்கை துணிச்சலாக செய்து முடிக்க முடிந்தது.             இந்த வழக்கின் வேறொரு குறிப்பிடத்தக்க பங்கை வகித்தவர் தீபிகா துஸொ என்ற பெண்  வழக்கறிஞர் ஆவர். ஆளும் வர்க்கத்தின் மிரட்டல் மட்டுமல்லாமல் பல வழக்கறிஞர்களின் அழுத்தத்திற்கும் ஆளாக்கப்பட்டு தைரியமாக வழக்கை கைவிடாமல் எடுத்துச் செல்கிறார். இத்தகைய அச்சுறத்தல்களுக்கு எதிராக ஜம்மு கஷ்மீர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார்.  அவர் தற்காலிகமாக போலீஸ் பாதுகாவலில் உள்ளார்.       …

Read More

என்னதான் இருந்தாலும் அந்த 56 இஞ்சு விரிந்த நெஞ்சுக்குரியவர் நம் நாட்டின் பிரதமர் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களே, கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். உலகிலேயே நான்கு மணி நேரமே அவகாசம் கொடுத்து நாட்டின் 85 சதவீத பணத்தைச் செல்லாக்காசாக அறிவித்த சாதனையாளரும் அவர்தாம்…! ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை குறையும் என்று சொல்லி, முறையான திட்டத்துடன் அமல்படுத்தாமல், சொதப்பி, விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து பாமரனின் வயிற்றின் அடித்த சிறப்புக்குரியவரும் அவர்தாம்..! புனேயின் முஹ்சின் சாதிக், தாத்ரியின் முஹம்மத் அக்லாக், இராஜஸ்தானின் பெஹ்லு கான், ஹரியானாவின் ஹாஃபிஸ் ஜுனைத்கான் என்று வரிசையாக தொடர்ந்து மாட்டு வெறியர்களால் முஸ்லிம்கள் அடித்தே கொல்லப்பட்ட போது கள்ள மௌனத்துடன் குதூகலித்த தேசபக்தரும் அவர்தாம்..! தலித்களும் விவசாயிகளும் நாள்தோறும் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளான போதும் ஒரு நாள் கூத்துக்கு பத்து இலட்சம் ரூபாய் செலவில் சொக்காய் போட்டு மகிழ்ந்த ‘பெரிய’ மனசுக்காரரும் அவர்தாம்..! இரண்டு கோடி இளைஞர்களுக்கு…

Read More

நிதிப் பற்றாக்குறை ,  உள்கட்டமைப்பு,  நிரந்தர பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பது போன்ற அடிப்படை ப்ரச்னைகள் காரணமாக தேசம் முழுவதிலும் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்பதுவே ஆய்வறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள் அனைத்தும் சொல்லும் பொதுவான செய்தியாக உள்ளது. இந்த சூழலில் 60 கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு(UGC)  அறிவித்திருப்பது அரசின் தோல்வியையும், கல்வித்துறையில் அக்கறையின்மையையும் வெளிப்படுத்துகிறது. தாராளமயமாக்கல், தன்னாட்சி இவற்றால் கல்வித்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது, மாறாக தனியார்மயமாக்கம் மூலம் கல்வி வணிகமாக்கப்படவே வழிவகுக்கும். கல்வித்துறையில் தனியார் பெருமுதலாளிகள், வியாபார முதலைகள் கால் பதிப்பதன் மூலமும், பாடத்திட்டங்கள் சந்தையின் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதாலும் ஆற்றல்மிகுந்த தொழிலாளிகளே உருவாக்கப்படுவார்கள். நிதர்சனத்தில் அவர்கள் சட்டப்பூர்வமான குழந்தைத் தொழிலாளர்களே . கல்வி நிறுவனங்ளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது என்பது அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்களை வணிகமயமாக்க வழிகோலுவதுடன், உயர்கல்விக்கு நிதி வழங்குவதில் இருந்து…

Read More

கேள்வித்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து, 10ம்வகுப்பில் கணிதத் தேர்வையும், 12-ம் வகுப்பில் பொருளாதாரப் பாடத் தேர்வையும் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் கேள்வித்தாள்கள் வெளியானதாக சில தினங்களுக்கு முன்புதான் மாபெரும் அதிர்ச்சியும் போராட்டங்களும் நடைபெற்றன. அந்த சுவடுகளே இன்னும் அழியாத நிலையில் இப்போது CBSE வினாத்தாள்கள் வெளியானது கல்வி ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு சிரமப்பட்டு மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகிறார்கள்.? அதிலும் CBSE மாணவர்கள் ஒன்றரை வருடங்களாக பொதுத் தேர்வுக்கு தயாராக்கப்படும் நிலையில் தேர்வாணையத்தின் கையாலாகாத்தனத்தால் கேள்வித்தாள்கள் வெளியானதற்கு மாணவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமா.? எழுதிய தேர்வுகளை மீண்டும் எழுதச் சொல்வது மாணவர்கள் மீதான அதிகார வன்கொடுமை என்றுதான் சொல்ல முடியும். வினாத்தாள்களையே பாதுகாக்க திராணியில்லை. இந்த இலட்சணத்தில் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டமாம், அந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒரே பொதுத் தேர்வாம். வினாத்தாள் வெளியானதற்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான…

Read More

அவள், இந்த உலகின் சரிபாதி நபர்களை குறிக்கும் அடையாளச் சொல். ஆனால் அவளாக உலகில் வாழ்வதில் உள்ள பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் அவள் அனுபவித்துதான் ஆக வேண்டும். ஒரு பக்கம் உடைகளால் உருவங்களை மறைத்து வீட்டின் அடுப்பங்கரையில் உட்கார வைத்து தன் அடக்குமுறையையும், தன் அதிகாரத்தையும் பறை சாற்றுகிறது ஆண் சமூகம் என்றால் மற்றொரு புறம் உடைகளை களைந்து வீதி உலா வர வைத்து தன் வணிகத்தையும், தன் மோகத்தையும் தனித்து கொள்கிறது அதே ஆண் சமூகம். ​ஆணாதிக்கம் நிறைந்த இச்சமூகம் பெண்ணடிமைத்தனத்தை எந்த வகையிலும் ஏவ தயாராகவே வரலாறு முழுக்க காணக்கிடைக்கிறது. அதிலும் பெண் விடுதலை என்ற நோக்கில் பல தலைவர்களும், சிந்தனைவாதிகளும் தன் கருத்துகளிற்கேற்ப சிலவற்றை தீர்வுகளாக முன் வைத்தனர். ஆனால் அவை செயலில் இல்லாத காணல் நீராகவும், இன்னும் சில காணலாகவே இருந்து விடட்டும் என்றும் தோன்றும். உதரணமாக ‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு…

Read More

ஒரு வாரத்தில் இரண்டு காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜெயலலிதா சமாதியில் கடந்த 4ம் தேதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அருண்ராஜ் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். நேற்று இரவு சென்னை அயனாவரம் காவல்நிலைய ஆய்வாளர் சதீஷ்குமார் என்பவர் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துவிட்டு காவல்நிலைய வாசலிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். கடந்த சில வருடங்களாக மத்திய, மாநில பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் பணி நேரங்களிலேயே இப்படி தங்களைத் தாங்களே சுட்டுக் கொல்வதும், சிறு ப்ரச்னைகளுக்காகக் கூட சக பணியாளர்களை சுட்டுக் கொல்வதுமான துன்பியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அரசுகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணிச் சுமைகளை குறைப்பது, உளவியல் ரீதியாக மன அழுத்தங்களை நிவர்த்தி செய்வது, பல வருடங்களாக நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் பணிச்சுமைகளை சமமான அளவில் பிரித்துக் கொடுப்பது…

Read More

போட்டித் தேர்வுகள் என்பது பெரும்பாலான மாணவ, இளைஞர்களின் இலட்சியமாகவும், கனவாகவும் இருக்கிறது. மத்திய அளவில் நடைபெறும் குடியியல் பணிகளுக்கான தேர்வுகள், இரயில்வே தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கான SSC தேர்வுகள், மாநில அளவிலான போட்டித் தேர்வுகள் என்று பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக தங்கள் உழைப்பையும், பொருளாதாரத்தையும் செலவழித்து இரவு,பகல் பாராமல் தயாராகி தேர்வுகளை எதிர்கொள்கின்றனர் பல இலட்சக்கணக்கான மாணவ, இளைஞர்கள். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று தனது ஆக்டோபஸ் கரங்களை அகல விரித்து ஆக்ரமித்துள்ள இலஞ்ச இலாவண்யங்கள் இத்தகைய போட்டித் தேர்வுகளையும் விட்டு வைக்காமல் அந்த மாணவர்களின் எதிர்பார்ப்புகளை உடைத்து சுக்குநூறாக்குகின்றன. 2010ஆம் ஆண்டு இரயில்வே பணியிட தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தேர்வாணையத் தலைவரின் மகனே இலஞ்சம் பெற்றுக் கொண்டு வெளியிட்டது அப்போது அதிர்ச்சி அலைகளை பரவவிட்டது. பல்வேறு தரப்பினரும் ஆதாயம் அடைந்த இந்த ஊழலில் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவிற்கு இலஞ்ச தொகைகள் கைமாறியதாக சிபிஐ அப்போது தெரிவித்தது.…

Read More

இலண்டனை விட அளவில் பெரியது, இலண்டனில் வசிப்பவர்களை விட பணக்காரர்கள் வசிக்கும் நகரம் என்று ஆங்கிலேய அதிகாரி க்ளைவ்வால் சான்றளிக்கப்பட்டதும், ஒருங்கிணைந்த வங்காளத்தின் (வங்கதேசம், பிகார், ஒடிசா) தலைநகராகவும் விளங்கியது முர்சிதாபாத் நகரம். மிகச் சிறந்த சான்றோர்கள் உருவாகிய நகரம். ஆனால் இப்போது அதெல்லாம் பழங்கதை. முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வரும் தற்போதைய முர்சிதாபாத்தின் நிலை மிகவும் மோசம். கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியதாக இப்போது முர்சிதாபாத் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை ஆண்டுகளில் ஒரு பல்கலைக் கழகம் கூட இந்த நகரத்தில் அமைக்கப்படவில்லை. முர்சிதாபாத் மாவட்ட தலைமையகம் கூட மாவட்டத்திற்கு வெளியில்தான் அமைக்கப்பட்டுள்ளது. கல்யாணி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரே ஒரு கல்லூரியும் மாவட்டத்தை விட்டு 200 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி என்பது முர்சிதாபாத் மாவட்ட மாணவர்களுக்கு பகல் கனவாகவே இருந்து வந்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு பல அரசியல் மாற்றங்களை வங்காளமும், முர்சிதாபாத்தும் பெற்ற பிறகும் எந்த ஆட்சியாளர்களும்,…

Read More

நேற்றைய தினம் வேலூரில் பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். மக்கள் பிரச்னைகளை மாணவர்கள் பாராமுகமாக இருந்த காலம் மாறி கடந்த சில ஆண்டுகளாக ஈழப் பிரச்னை, மதுவிலக்கு, சல்லிக்கட்டு, நீட், விவசாயிகள் தற்கொலை, அனிதா படுகொலை என்று பல்வேறு பிரச்னைகளையும் எதிர்த்து மாணவ சமுதாயம் களம் இறங்க ஆரம்பித்துள்ளது. ஆரோக்கியமானதும், சமூக மாற்றத்திற்கான அச்சாணியாகவும் இருக்கக்கூடியது. நாளைய தேசத்தின் எதிர்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்ற வார்த்தைகள் உண்மையாக மாறிவரும் காலச் சூழல் இது என்றால் யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த மாற்றத்தைப் பொறுக்க முடியாமல் ஆளும் அரசுகள் தங்கள் அதிகாரங்களைக் கொண்டும், காவல்துறையின் அடக்குமுறையை ஏவியும் மட்டுப்படுத்த முயல்கின்றனர். சல்லிக்கட்டிற்காக அமைதியாக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைந்துபோகச் செய்தனர். அனிதா படுகொலையைக் கண்டித்து பெருவாரியாக போராட்டங்கள் நடத்திய மாணவர்கள்…

Read More

“வேற்றுமையில் ஒற்றுமை” என்ற பன்மைத்துவ தத்துவத்தை தாங்கி நிற்கும் நம் இந்தியா தேசத்தில், பல மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணக்கத்துடன் பிரிக்க இயலாத் தன்மையில் கம்பீரத்தன்மையோடு விளங்குகிறது. இவ்வேளையில் கடந்த மூன்றாண்டில் அரங்கேறியுள்ள மக்களுக்கு எதிரான செயல்பாடுகளும், அக்கிரமங்களும் நம் இந்தியாவின் பன்மைத்துவ தூணை நிலைக்குலைய வைத்துள்ளது. மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்த தேசம் இப்பொழுது வாழத் தகுதியற்ற தேசம் எனும் ‘பரிணாம வளர்ச்சியை’ அடைந்துள்ளது. இதன் முழு பெருமையும் ஆளும் பா.ஜா.க-வையே சேரும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த அரசு இதன் ஒரு பகுதியாக ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க ஏழைகளை அழிக்கும் திட்டங்களைக் கையில் எடுத்திருக்கின்றது, தன் முட்டாள்த்தனமான அதிரடி அறிவிப்புகளால். இந்தியா எனும் தேசம் முதலில் பல தேசிய இனங்களின் ஒருங்கிணைப்பே என்பதில் மக்களிடம் தெளிவு ஏற்பட வேண்டும். ஆகவே ஒவ்வொரு மாநிலங்களின் தேவைக்கேற்ப, மக்களின் வாழ்வாதார நலனுக்கேற்ப, புவியியல் நிலைமைக்கேற்ப செயல்படும்…

Read More