சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை என்கிற பெயரில் எட்டு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கினர். அதற்கு காரணம் மரங்களையும், விவசாய நிலங்களையும் அபகரித்து அரசு எட்டு வழிச்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நிலம் அளவிடும் பணிகள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்து கொண்டே. இந்த திட்டம் நன்மை பயக்குமா இல்லையா என்கிற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் அரசின் திட்டங்களை எதிர்ப்பதாலேயே கைது என்கிற அடக்குமுறையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. மன்சூர் அலிகான் கைது,மாணவி வளர்மதி கைது,பியூஸ் மானுஸ் கைது, துண்டுப் பிரசுரம் வைத்திருந்தார்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பை சார்ந்த 19 பேர் கைது, ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் என இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.…
Author: Admin
இனியும் வேண்டாம் உயிர் துறப்பு – நாம் நமக்கானவர்கள் அல்ல,சமூகத்திற்கானவர்கள் திருச்சியில் நீட் அரக்கன் மற்றுமொரு படுகொலையை நிகழ்த்திவிட்டான்.நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற மாணவி தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 907 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் நீட் தகுதி தேர்வு அவரை அவ்வாறு செய்ய வைத்து விட்டது. சிறு வயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருந்த சுபஸ்ரீ நீட் தேர்வு காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பை அதிக கவனம் செலுத்தி படிக்காமல் நீட் தேர்விற்கான தயாரிப்பில் ஈடுபட்டு இருந்து வந்துள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பை கவனம் செலுத்தி படிக்காவிட்டாலும் அவர் 907 மதிப்பெண்ணை பெற்றுள்ளார்.ஆனால் நீட் தகுதி தேர்வை அவரால் வெல்ல முடியவில்லை. ஒரு வேளை நீட் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பன்னிரெண்டாம் வகுப்பில் சிறப்பாக பயின்று நல்ல மதிப்பெண் பெற்று அவர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருப்பார்.அவ்வாறு தமிழக மாணவர்கள்…
பாலஸ்தீனின் காசா எல்லையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் பெண் செவிலி ரசான் அல் நஜ்ஜார் (21) இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார். காசாவின் கான் யூனுஸ் நகரில் துப்பாக்கியால் சுட்டப்பட்டு அவர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை கூறியுள்ளது. காசா எல்லையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இஸ்ரேல் இராணுவத்தினால் தாக்கப்பட்டவருக்கு முதலுதவி செய்யும்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் வெள்ளை சீருடையுடன் அவர் இருந்ததாகவும், தன் கைகளை மேலே உயர்த்தியும் இஸ்ரேல் இராணுவம் அவரின் நெஞ்சில் சுட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பாலஸ்தீனர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் 30ல் இருந்து இப்போதுவரை 121 சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 12,000 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனில் இருந்து இஸ்ரேலால் துரத்தப்பட்டு 70 ஆண்டுகளாக அகதிகளாய் அண்டை நாடுகளில் வாழும் பாலஸ்தீனர்கள், தங்களின் தாயகத்துக்குத் திரும்பும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த…
கட்டுரையாளர் : அ. முஹமது அஸாருதீன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட கர்நாடக தேர்தல் களத்தின் காட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டது. தென் தமிழகத்தின் வாசலைக்கூட தொட முடியாது என்றிருந்த ஒரு கட்சி இன்று தனிப் பெரும்கட்சியாக உருவெடுத்துள்ளது. இயல்பாகவே கர்நாடக மக்கள் தன் மாநிலத்துக்கு முன்னுரிமை கொடுப்பார்களே தவிர்த்து மதத்தை பின்னுக்கு தள்ளமாட்டார்கள்.மேடை பிரச்சாரங்களில் வேண்டுமானால் வளர்ச்சியை முன்னிறுத்தி பா.ஜ.க பிரச்சாரம் செய்யலாம்.ஆனால்,அவர்கள் மக்களின் ஆழ் மனதில் கொள்கையை கட்டமைக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று சொல்ல வைத்ததற்கு முக்கிய காரணம் அவர்களது வரம்பை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கடுமையான சட்டங்கள். அதுதான் தன்னுடைய மதத்திணிப்பை அடுத்தவர்கள்மீது அவர்கள் திணிக்காமல் இருக்க காரணம்.மற்றபடி நாட்டுப்பற்றைத் தாண்டி மதப்பற்று அவர்களிடத்தில் எள்ளளவும் குறையவில்லை. பி.ஜே.பி.யின் எந்தவொரு தேர்தல் வியூகம்,பிரச்சாரங்களும் தனிமனிதனிடம் இந்து தேசம் என்கிற கொள்கையை சேர்க்காமல் இல்லை. உலகளவில் இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள்,யூதர்களுக்கென்று தனி நாடு இருக்கும்போது ஓர்…
எழுதியவர் : ராபியா குமாரன் வருகிற மே 16ஆம் தேதி தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. சிறந்த வழிகாட்டுதலும், ஆலோசனையும் கிடைக்கப் பெறும் மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே என்ன படிக்கப் போகிறோம்? எந்தக் கல்லூரியில் படிக்கப் போகிறோம் என்பதை நன்கு திட்டமிட்டு தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி இருப்பர். அவர்களில் சிலர் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளைப் படிக்க விரும்பினால் தான் படிக்க நினைக்கும் படிப்பு எந்தெந்தக் கல்லூரிகளில் சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது என்பதை விசாரித்து, இரண்டு மூன்று கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வாங்கி தயார் நிலையில் வைத்திருப்பர். தேர்வு முடிவுகள் வெளியான அன்றே மதிப்பெண் பட்டியலை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பப்படிவத்துடன் இணைந்து அனுப்பிவிடுவர். தரமான கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கு கடும் போட்டி நிலவும். அக்கல்லூரிகளில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேர விரும்புபவர்களுக்கு குறிப்பிட்ட மதிப்பெண்களை தகுதியாக நிர்ணயித்திருப்பர். அத்தோடு முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை என்ற…
எழுதியவர் : பேராசிரியர்.மு.நாகநாதன் (முன்னாள் தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ) அதிகாரக் குவிப்பு, ஆணவம், குழப்பங்கள் ஒரு சேர இருப்பதுதான் இன்றைய பாஜக ஒன்றிய அரசு. 500,1000, உயர்மதிப்பு ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஏழை எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வில் பட்ட துயர்களை எளிதாக மறந்து விட முடியுமா? எந்த நாட்டிலாவது வங்கிகளின் வாயில்களில், சாலைகளில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று நூற்றுக் கணக்கில் மடிந்த கொடுமையைக் கண்டதுண்டா? சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது உரிய கலந்துரையாடல்களை, மாநில முதல்வர்களிடம், வணிகர்களிடம், வரி வல்லுநர்களிடம் நடத்தியதுண்டா? இதன் காரணமாக பொருளாதாரமே நொறுங்கி வருவதை அறிந்த பிறகும் பிரதமரும் ஒன்றிய அரசும் கவலைப்பட்டு நல்ல தீர்வுகளை எட்டாமல் இருப்பது எவ்வளவு கொடுமை? நீட் தேர்வு மாநிலங்களின் உரிமையைப் பறித்து, சமூகநீதியைப் புறந்தள்ளும் போக்கினை எந்தக் கூட்டாட்சி நாட்டிலாவது காணமுடியுமா? புது டெல்லியின் “உண்மையான, நிரந்தர அதிகாரிகள்”-…
தொலை தூர நகரங்களுக்கு தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை அவர்களுக்கு பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் கடும் புயலில் காணாமல் போய்விடவில்லை அவர்களுக்கு உதவத் தயார் என்று கருணைக் கரங்கள் நீட்டப்படுகின்றன அவர்கள் பூகம்பங்களில் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கவில்லை அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவிருக்கிறது அவர்கள் ஒரு கலவரத்தில் சிதறடிக்கபட்டவர்கள் அல்ல அவர்களுக்கு தங்குமிடம் தர யாரோ அன்புக் கரம் நீட்டுகிறார்கள் அவர்கள் நகரங்கள் தண்ணீரில் மூழ்கிப்போய்விடவில்லை அவர்களுக்கு உணவளிக்கத்தயார் என்று யாரோ வாக்குறுதி அளிக்கிறார்கள் அவர்கள் அகதி முகாம்களைத்தேடி நடந்துகொண்டிருக்கவில்லை அவர்கள் வெறுமனே ஒரு தேர்வை எழுத விரும்புகிறார்கள் அதற்காக நாம் ஏன் அகதிகளாக மாற்றப்படுகிறோம் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை இதற்கு முன்னும் அவர்கள் ஒரு தேர்வை எழுத நிர்பந்திக்கப்பட்டார்கள் மூச்சுத்திணறினார்கள் ஒரு இளம்பெண் தன் கழுத்தில் ஒரு தூக்குக் கயிறை மாட்டிக்கொண்டு அந்த மூச்சுத்திணறலிருந்து விடுபட்டாள் இதற்கு…
கல்வி நிலையங்கள் பிள்ளைகளின் இரண்டாம் வீடு எனவும் , ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோர்கள் எனவும் கூறப்படுவது நிதர்சனமாக உண்மையாகும். ஏனெனில் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் இருப்பதை விட கல்வி கற்கும் இடங்களில்தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் நம்பி அனுப்பக்கூடிய இடமாக கல்வி நிலையங்கள் இருந்துவரும் நிலையில் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . மதுரை அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை, அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரியும் நிர்மலா தேவி தனக்கு மேல் உள்ள அதிகாரிகளின் தவறான ஆசைக்கு ஒத்துழைத்து போகும்படியும் , அவ்வாறு செய்தால் மதிப்பெண் ரீதியாகவும் , பண ரீதியாகவும் உதவுவதாக சொல்லி கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் பேசிய ஆடியோதான் பெண்கள் மீது கல்வி நிலையங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் குற்றங்கள் பற்றி இப்போது பேசப்பட காரணமாய் அமைந்துள்ளது . உயர்கல்வி நிலையங்களில் பயிலும்…
காஷ்மீர் மாநிலம் கத்துபவா பகுதியில் ஆஸிஃபா எனும் 8 வயது சிறுமி மிகவும் கொடுரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதனைக் குறித்து வகுப்பறையில் பேசினார் என்ற ஒற்றை காரணத்திற்காக கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியா இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது . ஏற்கனவே கல்வி தனியார் மயமாக்கப்பட்டு , சமூகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் , சமூக அக்கறை இல்லாதவர்களாக, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை உருவாக்க அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. படித்து மதிப்பெண் பெற்று சம்பாதிப்பது மட்டும்தான் உனது வேலை என கற்பிக்கப்பட்டு வரும் இந்நிலையில் அரசியல் விழிப்புணர்வுடன் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்களையும் , சட்டக் கல்லூரிகளையும் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்படுவது சமூகத்தின் மீது விழக்கூடிய மிகப்பெரிய அடியாகும். மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடக் கூடிய கொடுமையானது நிச்சயமாக ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கக்கூடிய…
பிஞ்சுப் பிள்ளையே வராதே வெளியே நெஞ்சம் முழுதும் நஞ்சு நிறைத்த வஞ்சகக் கூட்டம் வலம் வருகிறது உன் உடல் புசிக்க காவியை பூசிக்கொண்டு!
