Author: Admin

“வேற்றுமையில் ஒற்றுமை” என்ற பன்மைத்துவ தத்துவத்தை தாங்கி நிற்கும் நம் இந்தியா தேசத்தில், பல மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணக்கத்துடன் பிரிக்க இயலாத் தன்மையில் கம்பீரத்தன்மையோடு விளங்குகிறது. இவ்வேளையில் கடந்த மூன்றாண்டில் அரங்கேறியுள்ள மக்களுக்கு எதிரான செயல்பாடுகளும், அக்கிரமங்களும் நம் இந்தியாவின் பன்மைத்துவ தூணை நிலைக்குலைய வைத்துள்ளது. மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்த தேசம் இப்பொழுது வாழத் தகுதியற்ற தேசம் எனும் ‘பரிணாம வளர்ச்சியை’ அடைந்துள்ளது. இதன் முழு பெருமையும் ஆளும் பா.ஜா.க-வையே சேரும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த அரசு இதன் ஒரு பகுதியாக ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க ஏழைகளை அழிக்கும் திட்டங்களைக் கையில் எடுத்திருக்கின்றது, தன் முட்டாள்த்தனமான அதிரடி அறிவிப்புகளால். இந்தியா எனும் தேசம் முதலில் பல தேசிய இனங்களின் ஒருங்கிணைப்பே என்பதில் மக்களிடம் தெளிவு ஏற்பட வேண்டும். ஆகவே ஒவ்வொரு மாநிலங்களின் தேவைக்கேற்ப, மக்களின் வாழ்வாதார நலனுக்கேற்ப, புவியியல் நிலைமைக்கேற்ப செயல்படும்…

Read More

Sio ஹாதியாவுக்கு தன் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. 24 வயது நிரம்பிய அகிலா, தான் பிறந்த இந்துமதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை ஏற்கிறார். ஹாதியா ஆகிறார். பிறகு தன் மனம் விரும்பும் ஒரு முஸ்லிம் ஆணை கைப்பிடிக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றோர் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். கேரள உயர்நீதிமன்றமோ இந்தத் திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கிறது. ஹாதியா முஸ்லிம் அடிப்படைவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார் என்கிறது. இது இந்துத்துவவாதிகளிடம் இருந்து உருவான இஸ்லாமிய வெறுப்பு (இஸ்லாமோஃபோபியா) எந்த அளவு நிறுவனமயப்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது. இன்று கேரளத்திலும் ஏனைய மாநிலங்களிலும் இந்து மதத்திலிருந்து வேறு மதத்தைத் தழுவுபவர்கள் பல்வேறு வகையில் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் . குறிப்பாக இந்துப் பெண்கள் வேறு மதத்தைத் தழுவும்போதும், வேறு மத ஆடவர்களைத் திருமணம் செய்ய எத்தனிக்கும்போதும் ஆணாதிக்க பார்ப்பனிய இந்து மதம் தனது எல்லா அஸ்திரங்களையும் பிரயோகித்து அவர்களை ஒடுக்குகிறது. இவ்வாறு இந்துப் பெண் தன் சிந்தனைச் சுதந்திரத்தையும், தனது…

Read More

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதாவின் தற்(கொலை) நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. MBBS படித்து மருத்துவர் ஆகவேண்டும் எனும் அனிதாவின் கனவை நீட் தேர்வு மூலம் பாஜக அரசு பறித்ததே அவரின் உயிரிழப்புக்குக் காரணம். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் அவருக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை அனிதாவின் தனிப்பட்ட பிரச்னையாக நாம் குறுக்கிவிட முடியாது. இனிமேல் ஏழை எளிய, அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்டால் என்ன ஆகும் என்பதற்கு அனிதாவின் இறப்பு நம்முன் இரத்த சாட்சி. நீட் தேர்வில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 80 மட்டுமே. CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுவதே இதற்குக் காரணம். அந்தப் பாடத்திட்டத்தில் படிப்பதற்கான வாய்ப்புள்ள மேல்தட்டு, உயர்சாதி, நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும். மாநில கல்வி வாரியத்தில் (State Board) படித்தவர்களால்…

Read More

வேட்டியை கீழாடையாக அணியும் வழக்கம் நெடுங்காலமாக நம் தமிழகத்தில் இருந்துவருகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் முதலிய அண்டை மாநிலங்களிலும் இது புழக்கத்தில் இருக்கும் ஒன்றுதான். எனினும், தமிழ்நாட்டில் வேட்டிக்கு ஒரு தனி இடம் உண்டு. நாம் வேட்டி என்று சொல்வதை வேறு சில பெயரை கொண்டும் பிற மாநில மக்கள் குறிப்பிடுகிறார்கள். சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கிரிக்கட் கிளப் சங்கத்தில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வேட்டி உடுத்தி சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் அவர்களும் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இருவரும் கிளப்பினுள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டியை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல தமிழ் நாட்டில் கூட உரிமை இல்லையா! என்று ஆக்ரோசப்பட்டு சமூக ஆர்வலர்கள் எதிர் குரல் எழுப்பினார்கள். வேட்டிக்கு அனுமதி மறுக்கும் கிளப்புகளையே மூடவேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.…

Read More