கட்டுரை உதவி – பூவுலகின் நண்பர்கள் கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும்மழை பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 39அணைகளில் 35அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் இன்னும் ஒருவார காலத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உரியிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை…
Author: Admin
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த மாதம் ஜூலை30 ஆம் தேதி NRCயின் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் வெளியானது. 1951 ஆம் ஆண்டு வெளியிடபட்ட பட்டியலை புதுப்பிக்க 2015ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் உச்ச நீதி மன்ற கண்காணிப்பில் உருவாக்கபட்ட பட்டியல் NRC. அங்கு வாழும் மக்களில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை கண்டறியும் நோக்கில் எடுக்கப்பட்ட குடிமக்கள் கணக்கெடுப்பு பணியே இதன் நோக்கம். 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் போராட்ட குழுவுடன் மத்திய, மாநில அரசுகளால் போடப்பட்ட அஸ்ஸாம் accord எனப்படும் ஒப்பந்தத்தின் அடிபடையில் 1971 ஆம் ஆண்டு மார்ச்24க்கு முன் வாழ்ந்தவர்களுக்கே குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கு பின் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்ற புரிந்துணர்வு ஏற்பட்டது. இதன் அடிபடையில் உச்ச நீதிமன்றத்தில் என்ஆர்சி எனப்படும் குடிமக்கள் கணக்கெடுப்பு பணியை தொடங்க வேண்டும் என்று மனு அளித்து அங்கு வாழும் மக்களில் மேலே…
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வின் தேசிய தலைவர் நஹாஸ் மாலா அசாமில் தேசிய குடியுரிமைப் பதிவு(NRC) புதுப்பிப்பதில் அரங்கேறியுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் எச்.எல்.தத்துவிற்கு எழுதியுள்ள கடிதம். ஐயா, வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை தேசிய பதிவு (NRC) புதுப்பித்தல் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வரைவு குறித்து எழுதுகின்றேன். 40 இலட்சத்திற்கும் அதிகமான குடிமக்கள் NRC யில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்படவும் இருக்கின்றனர். அசாமின் பெங்காலி பேசும் சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டதாக கூறப்படும் பரந்தளவிலான இனவழிச் சுத்திகரிப்பு என்று ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் எழுப்பிய சந்தேகங்களும் கவலைகளையும் இது நிரூபிப்பதாக உள்ளது.கள யதார்த்தங்களும் புள்ளிவிபரங்களும் கூட அதையே வெளிப்படுத்துகின்றன. ப்ரத்யேகமாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் ஏற்கனவே வங்காள மொழி பேசும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை அந்நியர்கள் என்று அறிவித்து ஆறுக்கும் மேற்பட்ட வெளியேற்றும்…
இந்தியாவில் ஆராய்ச்சிப் படிப்பில் (PhD) அதிகளவு சேருவோரின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அறிவியல், பொறியியல் மற்றும் தொழில் நுட்ப பின்னணியில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் உடனடி வேலை வாய்ப்புக்காக மேற்படிப்பினை தேர்ந்தெடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அகில இந்திய அளவிலான 2017 -18ம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான ஆய்வு முடிவுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் phd படிப்பில் சேர்ந்துள்ள 1.62 இலட்சம் மாணவர்களில் 29,778 மாணவர்கள் (18.5%) தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி தமிழ்நாட்டு மாணவர்களே ஆராய்ச்சிப் படிப்பை முடித்து முனைவர் பட்டமும் அதிகளவில் பெறுகின்றனர். உதாரணமாக 2016 -17 ல், 24,171 மாணவர்கள் PhD பட்டம் பெற்றுள்ளனர். அதில், 3973 மாணவர்கள் (16.32%) தமிழ்நாட்டை சார்ந்தவர்கள். ஆய்வுப் படிப்பில் சேர்வதில் தமிழகத்தை அடுத்து உத்திரபிரதேசம் இரண்டாம் இடத்திலும்(15,408 மாணவர்கள்), புதுடில்லி, கர்நாடகா அடுத்த இடங்களிலும்…
எழுதியவர் : உமர் ஃபாரூக், ஆராய்ச்சி மாணவர், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் இருக்கும் திருமலைகவுண்டர்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் திருமதி. பாப்பாள் அவர்கள் சத்துணவு சமைக்கும் பணியில் அமர்த்தபட்டுள்ளார். இதற்கு முன் இருந்த பள்ளி தொலைவில் இருந்ததால் சிரமத்துடன் சென்று வந்த அவர், தனது சொந்த ஊரில் அமைந்துள்ள இந்த பள்ளியில் தற்போது பணி காலியிடம் வந்தது தெரிந்ததும் இடமாற்றலுக்கு விண்ணபித்து பணியில் சேர்ந்த்துள்ளார். ஆனால் அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் (75 மாணவர்களில் 29 மாணவர்களின் பெற்றோர்கள் என்று செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) இவர் அருந்ததியினர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர் எங்கள் பிள்ளைகளுக்கு சமைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தி பள்ளியை விடுமுறை அளிக்க நிர்பந்தம் செய்து பின்னர் பள்ளியை திறக்க விடாமல் போராட்டம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சி வளர்ச்சி நிர்வாகத்தினர் சட்டத்தை மதிக்காமல் அங்கு நடைபெற்ற சாதிய வன்முறையை…
எழுதியவர் – ஹூசைனம்மா முதலில், அந்தச் சிறுமியின் தாய்க்கும், தந்தைக்கும், சகோதரிக்கும் என் பாராட்டுகள் – எதற்கும் அஞ்சாமல், மானம்-மரியாதை-கௌரவம் என்ற வெற்றுப் பிதற்றல்களுக்குக் காது கொடுக்காமல் தைரியமாக இக்கொடூரத்தை வெளிக்கொணர்ந்ததற்காக. ஒரு நிர்பயாவுக்காக நாடு முழுவதுமே இணைந்து போராடியபோது, இம்மாதிரிச் சம்பவங்களுக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்படுவிடும் என்று நம்பியவர்கள்தான் நாமெல்லாம். ஆனால், அதன் பின்புதான் அதிகரித்து விட்டது போல் தோன்றுகிறது – அதுவும் அதிகக் கொடூரமாக!! நடக்கும் நிகழ்வுகள் அப்படித்தான் நம்ப வைக்கின்றன. என்னதான் காரணம்? குற்றங்களைக் கண்டிக்கும் நாம், குற்றவாளிகளை உடனே தூக்கிலேற்றச் சொல்லிக் கண்டனம் தெரிவிக்கும் நாம், இந்தக் குற்றம் அதிகரிப்பதன் காரணங்களை யோசித்துப் பார்த்தோமா? அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்யாமல், மேம்போக்காக நோயை மட்டும் குணப்படுத்தினால் அது அப்போதைக்கானத் தற்காலிகத் தீர்வாக மட்டும் அமையுமே தவிர, நிரந்தரத் தீர்வாக அமையாது. நோய் மீண்டும் மீண்டும் தாக்கத்தான் செய்யும் என்ற உண்மையை அறிந்தும் செயற்படுத்தாதவர்களாக நாம் இருக்கிறோம்…
மற்றுமொரு வன்கொடுமை சென்னையில் நிகழ்தப்பட்டிருக்கிறது மனித மிருங்கங்களால் அல்ல மிருகங்கள் கூட அவ்வாறு செய்யாது மனித வடிவில் உலாவறும் கொடூரர்களால். ஏழு மாதங்களாக அரங்கேறியிருக்கிறது அந்த அசிங்கமான கொடூரம்….. இது போன்ற கேவலங்கள் காலம் காலமாக நடந்து வந்தாலும் டெல்லியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு தான் இது அதிகமான அளவில் பேசு பொருளாக்கப்பட்டது.அன்றிலிருந்து இன்று வரை இது பேசு பொருளாக மட்டுமே இருந்து வருகிறது.அதுனால் தான் என்னவோ மூன்று வயது முதல் 80 வயது வரை இக்கொடூர தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்த சம்பவங்கள் நாள்தோறும் இந்திய தேசத்தின் மடியில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போது அதை செய்தியாக கடந்து சென்றுகொண்டிருக்கும் நாம் நம் அருகில் அமைதி பூங்காவின் தலை நகரில் நடக்கும் போது இங்கும் இவ்வாறெல்லாம் நடக்குமா என அதிர்ச்சி அடைகிறோம். ஆம் நடக்கிறது, நடந்து கொண்டே தான் இருக்கிறது.சம்பவம் நடக்கும் போது மட்டும் ஆங்காங்கே எழுப்பப்படும் கண்டன குரல்கள்…
Commercial படங்கள் முன்வைக்கும் ‘சமூக’ பார்வை பல நேரங்களில் அபத்தமானவை. தமிழர் பண்பாடு, சல்லிக்கட்டு, விவசாயம், போராட்டம் போன்றவைகளை மசாலாவாக பயன்படுத்துகின்றன இத்தகைய சினிமாக்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ஐடம் டேன்சும் இந்த டயலாக்குகளும் ஒன்றுதான். வசூலுக்கு உதவுபவை. இயக்குனர்களும், வசனகர்த்தாக்களும் அவர்களின் படம் முன் வைக்கும் சிக்கல்களை விழிப்புடன் அனுகுவதில்லை என்பது குற்றச்சாட்டு. உதாரணத்திற்கு, கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு டயலாக். “சாதி ஒழியனும்னு ஒழியனும்னு கத்துறவனும் சாதிய வளர்த்துடுறான்” என நீள்கிறது. ஒடுக்கப்பட்டவனின் அணிதிரட்டலை குற்றமாக சித்தரிக்கும் வசனம். சில வருடங்களுக்கு முன் காமெடி படங்கள் வசூலைக் குவித்ததால், அந்த ஜானர் படங்கள் வரிசை கட்டி நின்றன. அதுபோலவே இன்றைய Trendஐ AR முருகதாஸ் முதல் விஜய் டிவி வரை பயன்படுத்தி நம்மை சோதிக்கிறார்கள். பிக்பாஸில் கமலின் ‘சமூகக்கருத்துக்களை’ சகிக்க முடியல. ‘Striking is a bad attitude’ என்கிறார், பண்பாடு-ஆடை-உறவு என அவர் கக்கும் வாந்திகள் ஏராளம். Commercial…
மற்ற நாட்டவர்கள் விளையாடுவதை கைதட்டி , இரவு முழுவதும் உறங்காமல் நம் தேசத்து மக்கள் ரசித்துவருகிற வேளையில்தான், நமக்கென ஒரு அங்கீகாரத்தை வாங்கி தந்துள்ளார் அஸ்ஸாம் மாநிலம் திங் கிராமத்தை சார்ந்த 18 வயதான ஹிமா தாஸ். பின்லாந்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த ஹீமாதாஸ். அவர் பெற்ற தங்கமானது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமையடையச் செயதுள்ளது. இந்த சாதனையை ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் செய்துள்ளார். இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்த, ஓட்டப் பந்தய வீராங்கனைகளான, ரோமானிய நாட்டின் ஆண்ட்ரியா நிகோலஸ் (52.07) மற்றும் அமெரிக்காவின் டைலர் மான்சனை (52.28) இறுதி நிமிடங்களில் வேகத்தை அதிகரித்த ஹிமா தாஸ் வெற்றி கொண்டுள்ளார். 2016ல் தன்னுடைய ஓட்டப்பந்தய வாழ்க்கையை ஆரம்பித்த ஹிமா தாஸ், முன்னாள் கால்பந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கடந்த வருடங்களில் இந்திய போட்டிகளில்…
நீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த வருடம் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வின் தமிழ் வினாத்தாள்களில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியிருந்தது. 49 கேள்விகள் தவறானதாகவும், மொழிபெயர்ப்பு குறைபாடு கொண்டிருந்ததும் தமிழக மாணவர்களை குழப்பமடையச செய்தது. பல்வேறு அமைப்புகளும், பெற்றோர்களும், கல்வியாளர்களும் சிபிஎஸ்இக்கு எதிராக கண்டனங்களையும், அதிருப்தியினையும் வெளிப்படுத்தியிருந்த நிலையில் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் அளிக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கில் இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம். பஷீர் அகமது அமர்வு தவறான கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள், ஒட்டுமொத்தமாக 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரத்திற்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பாராட்டி வரவேற்பதுடன், இதன் மூலம் தமிழக மாணவர்களின் உரிமை காப்பாற்றப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை…
