Author: Admin

காலை வணக்கம், இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், என்னை பரிபூரணமாக நேசித்தீர்கள், என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது. என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறைய ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்திவிட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே. அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப்பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே…

Read More

தற்போது மோடி அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை மசோதா 2019 : வரலாறும் நோக்கமும். ‘குடியுரிமை மசோதா 2016’ என பாஜக அரசு முன்மொழிந்திருந்த அரசியல் சட்டத் திருத்த மசோதா மூன்றாண்டு இடைவெளிக்குப் பின்,  2019 தேர்தலை ஒட்டி இப்போது இரண்டு நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு மசோதா போல் எல்லாக் கட்சிகளின் ஆதவோடும் இது இயற்றப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சி.பி.எம், முஸ்லிம் லீக், AIMIM, AIUDF முதலான கட்சிகள் இதை எதிர்த்துள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இந்தியாவை ஒட்டியுள்ள மூன்று நாடுகளிலிருந்தும் மத அடிப்படையிலான ஒதுக்கல்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்து வந்திருந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழி செய்யும் மசோதா இது. டிசம்பர் 31,2014க்கு முன் இவ்வாறு இம்மூன்று நாடுகளில் இருந்தும் இடம் பெயர்ந்து வந்துள்ள இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்துவர்கள், பவுத்தர்கள், பார்சிகள் ஆகிய முஸ்லிம் அல்லாதவர்கள் இதனால்…

Read More

எழுதியவர் : அஷ்ஃபாக் அகமது, சமூக ஊடகவியலாளர் உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளுள் ஒன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அரங்கேறியது. அது ஒரு பேரழிவு. உலகமே அதிர்ச்சியில் உறைந்து இந்தியாவை கொஞ்சம் உற்றுப்பார்த்தது. அந்த பேரழிவுக்கு காரணம் ஓர் அமெரிக்க ஆலை. அமெரிக்க நிறுவனத்துக்குச் சொந்தமான பூச்சிக்கொல்லி தயாரிக்கும் யூனியன் கார்பைட் ஆலை. ஆலையை நவம்பர் மாதத்திலேயே மூடிவிடலாம் என்று தான் அவர்கள் எண்ணி இருந்தனர். ஆனால் விதி என்னவோ டிசம்பரில் மக்களை காவு வாங்குவதற்காக காத்திருந்தது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி இரவு நடந்தது அந்த மீள முடியாத துயரம். அமைதி சூழ்ந்த இரவில் போபால் நகர மக்கள் இளைப்பாறிக் கொண்டிருந்த நேரம். நடுநிசி பொழுதில் திடீரென உறக்கத்தில் இருந்தவர்கள் இரும ஆரம்பித்தனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பலருக்கு வாந்தி மயக்கம். யாருமே இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. கதவு ஜன்னலை அடைக்கத் தொடங்கினர்.…

Read More

எழுதியவர் : சுமதி விஜயகுமார், சமூக ஊடகவியலாளர் விஸ்வநாத் பிரதாப் சிங். திரைப்பட கதாநாயகன் பெயர் போல் இருந்தாலும் இவர் நிஜ வாழ்வு கதாநாயகன். V P Singh என்றால் அனைவருக்கும் பரிச்சியம். அவருக்கு இன்னும் வேறு பெயர்களும் இருக்கின்றன. சமூகநீதி காவலர்; மண்டல் கமிஷன் நாயகன்; சிறிய வயதில் இந்திய பிரதமர்கள் பற்றி அதிகம் தெரியாமல் இருந்த பொழுதும், முழுதாக ஒரு வருடம் கூட இல்லாத V P Singh யின் பெயர் மட்டும் தெரியும். எதனால் என்று அப்போது தெரியாது, இப்போது புரிகிறது. கூடவே அந்த சமயத்தில் பொது சுவர் எங்கிலும் ‘மண்டல் கமிஷன்’ என்கிற வாசகங்கள் எழுதி இருக்கும். அப்படி என்றால் என்ன என்று கேட்ட பொழுது எனக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஒரு வேலை விளக்கம் கிடைத்திருந்தாலும் அது எனக்கு புரிந்திருக்காது. எங்கெல்லாம் ஒடுக்குமுறை நடக்கிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கும். உண்மையான விடுதலை கிடைக்கும் வரை…

Read More

எழுதியவர் : ஹூசைனம்மா, சமூக ஊடகவியலாளர் 1945-ல், பிரதமர் அட்லீ தலைமையில் புதியதாகப் பதவியேற்றுக் கொண்ட பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க முன் வந்தது. அதற்கு முன்னர், இந்தியாவில் மத்திய அரசு எப்படி அமைய வேண்டும் என்று தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. சுதந்திர இந்தியாவின் அரசு எப்படி இருக்க வேண்டும் என்று மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் வரையறுத்திருந்த திட்டமே காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினரால் – பட்டேல் தவிர மற்ற அனைத்துத் தரப்பாலும் – ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்தத் திட்டம், பாதுகாப்பு, வெளியுறவு, போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளை மட்டும் மத்திய ஃபெடரல் அரசின்கீழ் கொண்டு வந்து, மாநிலங்களுக்கு அதிக சுயாட்சியைப் பெற்றுத் தரும் வகையில் அமைந்திருந்ததுதான் படேலின் எதிர்ப்புக்குக் காரணம். எனினும், தூதுக் குழுவின் முழு ஒப்புதலையும் பெற்று, அத்திட்டத்தின் அடிப்படையில் காங்கிரசும், முஸ்லிம் லீகும்…

Read More

எழுதியவர் : ஞானபாரதி சின்னசாமி, சமூக ஊடகவியலாளர் திப்புசுல்தானிடம் பறக்கும் குதிரைகள் இருப்பதாக ஆங்கிலேயர்கள் நம்பினார்கள். ஏனெனில் ஆம்பூரை தாக்கப் போவதாகக் கூறி விட்டு கேரளத்தில் உள்ளக் கொடுங்களூரை அதே தினத்தில் தாக்கும் ஆற்றல் பெற்றவர். குதிரைப்படை நடத்துவதில் ரஷ்ய நாட்டின் கசாக்கியர்களைப் போலவும் பிரான்ஸ் நாட்டின் சக்ரவர்த்தி நெப்போலியன் போனோபார்ட்டைப் போலவும் திறமை படைத்து இருந்தார். ஸ்ரீரங்கப்பட்டினம் ஒரு தீவு. ஹைதர்அலி மைசூர் மகாராஜாவின் படையில் 20 குதிரைவீரர்களின் குழுவின் தலைவராக பணியாற்றியவர் என்பதால் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மைசூர் மகாராஜாவின் அரண்மனையை விட உயரமாக அரண்மனையைக் கட்டி விடக் கூடாது என்பதில் ஹைதர்அலி கவனமாக இருந்தார்.அதனால் ஹைதர் அலியின் அரண்மனையான ரங்க்மஹால் மைசூர் அரண்மனையை விட சிறியதாக நிர்மாணிக்கப்பட்டது.((ஹைதர்அலி விரும்பி இருந்தால் மைசூர் அரண்மனையில் இருந்து மைசூர் மன்னர்களை வெளியே துரத்தி விட்டு அவரே மைசூர் அரண்மனையைத் தன் வாசஸ்தலமாக ஆக்கி இருக்கலாம்) போர்க்களத்தில் யுத்தம் செய்து கொண்டு இருந்த போது…

Read More

அணு ஆயுதங்களையோ அணுக் குண்டுகளையோ பயன்படுத்தி ஒரு சமூகத்தை ஒரேயடியாக அழிக்கலாம். இது தீவிரவாதம். ஆனால் இன்றைய நாட்களில் ஒரு தலைமுறையை அழித்தொழிக்க அணு ஆயுதமும் தேவையில்லை, அணுக் குண்டும் தேவையில்லை. மாறாக, கற்றுக்கொடுப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் மோசடி செய்தால் போதும். ஒரு தலைமுறையை மட்டுமல்ல, சமூகத்தையே அழித்தொழிக்கலாம். ஆம். உடலில் உயிர் இருக்கும். ஆனால் உயிரோட்டம் இருக்காது. இது தீவிரவாதத்திலும் பெரிய தீவிரவாதம். ஆனால், இதன் விளைவு சட்டெனப் புரிபடுவதில்லை. மோசடி செய்து மருத்துவர் ஆகும் ஒருவரிடம் வரும் நோயாளி மரணத்தைத் தழுவுவார். மோசடி செய்து பொறியாளர் ஆகும் ஒருவர் கட்டும் கட்டிடம் இடிந்து விழும். மோசடி செய்து பொருளாதார நிபுணர் ஆகும் ஒருவரால் பொருளாதார நெருக்கடியும் நஷ்டமும் ஏற்படும். மோசடி செய்து மதபோதகர் ஆகும் போலி அறிஞர் மூலம் மனிதம் மரித்துப்போகும். மோசடி செய்து நீதிபதி ஆகும் ஒருவர் மூலம் நீதி பீதியடையும். மோசடி செய்து ஆசிரியர் ஆகும் ஒருவர் மூலம் எதிர்கால சந்ததிகளிடம் அறியாமை இருள்…

Read More

1966இல் அறிஞர் அண்ணா பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் அழைத்து உரையாற்ற வந்தார்.காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சில மாணவர்கள் மேடையின் கீழே பட்டாசுகளை மறைத்து வைத்து அண்ணா மேடைக்கு வந்தபோது வெடிக்க வைத்தனர்.அன்றைய முதல்வராகயிருந்த மறைந்த பேராசிரியர்.எஸ்.பி. சண்முகநாதன் அதிர்ந்து போனார். அறிஞர் அண்ணா தனது உரையின் போது “என் மீது அன்பு செலுத்தும் மாணவர்கள் என்னை வரவேற்ற போது மாலை அணிவித்து வரவேற்றார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் வரவேற்பு இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பட்டாசுகளை வெடித்து, சிறப்பான வரவேற்பை அளித்துள்ளார்கள். எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.கல்லூரி முதல்வர் இதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று அண்ணா கூறிய போது அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல் தொடர்ந்தது. 1967இல் அறிஞர் அண்ணாவின் ஆட்சி அமைந்தபோது மாணவர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் மோதலாக தொடங்கி வன்முறையாக மாறியது.சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது போக்குவரத்து ஊழியர்கள் கடுமையான முறையில்…

Read More

டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் மூத்த பத்திரிக்கையாளர் அன்று கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் தன்னந்தனியாக ஓங்கி முழங்கினார், அஸ்மா மஹ்ஃபூஸ் என்கிற வீர நங்கை. இன்று இந்திய வானவெளியில் பறக்கும் விமானத்தில் அனல் பறக்க, ஓங்கி குரல் கொடுத்திருக்கின்றார் சோஃபியா லூயிஸ் என்கிற வீரத் தமிழச்சி. சோஃபியாவின் துணிவும் தீரமும் மலைக்க வைக்கின்றது. பாஜகவின் பாசிச ஆட்சி ஒழியட்டும் என்று குரல் கொடுத்ததோடு அவர் ஒய்ந்துவிடவில்லை. விமான நிலையத்தில் பத்து பாஜககாரர்களைப் பார்த்த தெம்பில் தமிழிசை ருத்ர தாண்டவம் ஆடிய போதும், ‘அவளுடைய பேக் கிரவுண்டு என்ன’ என்று ஓங்காரமிட்ட போதும், ‘அந்தப் பொண்ணுக்கு அறிவில்லை, மன்னித்து விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சிய பெண் போலீசைப் பார்த்து, ‘அறிவெல்லாம் இருக்கு, அதனால்தான் ஷீ இஸ் ஷவுட்டிங்’ எனக் கொக்கரித்த போதும், ‘ஒரு நிமிடம்! ஒரு ஸ்டேட் லீடர் என்று கூடப் பாராமல் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழியட்டும் என்று கத்தினால் சும்மா விடுவேனா, என்ன’…

Read More

கட்டுரையாளர் : விஜயபாஸ்கர் விஜய், சமூக ஊடகவியலாளர் மூன்று மாதம் முன்பு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்யும் போது டிரைவரிடம் பேசிக் கொண்டு வந்தேன். அந்த டிரைவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வயது முப்பது. அவர் படித்த படிப்பு பத்தாம் வகுப்புதான். அவர் தம்பி என்ன படித்திருக்கிறார். அவரும் பத்தாம் வகுப்புதான். இன்னொரு தங்கை இருக்கிறார். அவரும் பத்தாம் வரைதான் படித்திருக்கிறாராம். ஆக 2017 – 30 = 1987. அவர் அப்பா அம்மாவுக்கு 1986 யில் திருமணம் முடிந்திருக்கும். நினைத்துப் பாருங்கள். 1986 யில் உலகம் எவ்வளவு முன்னேறின காலம். அந்த முன்னேறின சமயத்திலும் ஒரு தம்பதியினருக்கு கல்வியின் அவசியம் தெரியாமல் இருந்திருக்கிறது. அப்படி தெரிந்தாலும் அதை எப்படி போதிக்க என்று தெரியாமல் இருந்திருக்கிறது. அப்படி போதிக்க தெரிந்தாலும் அவர்கள் வீடு இருந்த சுற்றுச் சூழல், குழந்தைகள் மனம் அங்கிருந்து திசை திரும்பாமல் வளர்க்க தடையாய் இருந்திருக்கிலாம். சுற்றியுள்ள…

Read More