மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், மரவப்பட்டி காலனி, பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவன் சரவணகுமார். இவர் கடந்த 11.10.19 வெள்ளியன்று பள்ளிக்கூடத்தில் சாதியின் பெயரால் சகமாணவனால் வகுப்பறையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. சரவணகுமார் 11.10.2019 அன்று தனது சக பள்ளி தோழன் மோகன் ராஜின் புத்தகப்பையை அதே வகுப்பறையில் பயிலும் மகா ஈஸ்வரன் என்ற மாணவன் ஒளித்துவைத்து அவர்களை தேடவைக்க, அது குறித்து மகா ஈஸ்வரனிடம், மாணவன் சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் விசாரித்திருக்கின்றனர். அப்பொழுது மகா ஈஸ்வரன் மாணவன் சரவணகுமாரை நோக்கி தகாத வார்த்தைகளில் பேசி நீ எல்லாம் என்னை எதிர்த்து பேசுவாயா என்று கூறி தன்னிடமிருந்த பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளார். அதில் படுகாயமடைந்த மாணவன் சரவணகுமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என பாடம் படிக்கும் பள்ளியில்…
Author: Admin
அதீத அக்கறையில்,ஓட்டமும் நடையுமாய்கொழுப்புணவில் கவனமாய்,சத்துணவே கதியென்று,பார்த்துப் பார்த்து,தின்று தீர்த்துஉடல்நலமே முக்கியமாய்நாம்கழிக்கும் வாழ்நாட்கள். என்ன கவனம் வைக்கிறோம்,நம் மனநலத்தில்? அதிகவேலை – பணிச்சுமைகோபம் – தாபம்போட்டி – பொறாமைமன அழுத்தம் – கலக்கம்இரவுப்பணி – ஓய்வின்மைதனிமை – விரக்திமரியாதைக் குறைவுகண்ணியக் குறைவுவயதுமூப்பு – கவனமின்மைமுக்கியத்துவம் இழப்புமதிப்பு இல்லாமை -இவை எல்லாம்யாரும் கவனம் வைக்காதஅன்றாட சுமைகளாய்,தினமொன்றாய் ஒன்று கூடி,மனநலம் கெட்டு,வருங்காலம் பாழ்பட்டு,நம்பிக்கை இழந்து,தூக்கம் கெட்டு,சுயபுத்தி இழந்து,இறுதி முடிவைத்தேடிதற்கொலை நாடிநிமிடத்திற்கு ஒருவர் செல்லும் அவலம்நம் திருநாட்டில். மனநலத்தில் கவனமேஇல்லாத தேசமாய்உருமாறும் நிலை. சகமனிதனை மதிக்காமல்,மனிதநேயத்தை சாகடித்து,தன்சார்பு நியாயத்தைமட்டுமே பார்த்து,சீர்குலையும் மானிடம். உடல் நலத்திற்காக அதிகமாய் மெனக்கெடும் நாம்,என்ன கவனம் வைக்கிறோம்,நம் மனநலத்தில்? நம்மை சுற்றியிருக்கும்மனிதர்களை நினைக்கிறோமா? கவலைக் கொள்கிறோமா? ஆறுதலாய், அன்பாய்சில வார்த்தைகள்தான் பேசுகிறோமா? இன்றே தொடங்குவோம்.முடங்காமல் வெளிக்கிளம்புவோம்.கவலைகளை பகிர்வோம்.பிறர் கவலைகளுக்குகாது கொடுப்போம்.நம் சுமைகளைகொஞ்சம் இறக்கிவைப்போம்.பிறர் சுமைகளைகுறைக்க பாடுபடுவோம் மனநலமும், உடல்நலமும்நம் இரு கண்கள். – ஜ. ஜாஹிர் உசேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் தத்துவப்பாடம் என்கிற பெயரில் பகவத் கீதை மற்றும் சில உபநிடதங்கள் மாணவர்களுக்கு பாடங்களாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயலை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) வன்மையாக கண்டிக்கிறது. தொழில்நுட்ப பாடத்தில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த கருத்துக்களை புகுத்துவது என்பதை மத்திய பார்ப்பனிய பா.ஜ.க அரசின் ஒரே மொழி,ஒரே மதம்,ஒரே கலாச்சாரம் என்கிற கொள்கையை திணிக்கும் முயற்சியாகவே எஸ்.ஐ.ஒ பார்க்கிறது.கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் மாணவர்கள் பொறியாளர்களாக உருவாகின்றனர். தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணத்தில் 20% சலுகை போன்ற உதவிகளை செய்து மாணவர்களை பொறியியல் கற்க ஊக்குவித்தனர்.அதன் விளைவாக ஏராளமான பொறியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களிலிருந்தும் உருவாகி இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தங்களின் திறமையின் மூலம் பணிக்கு சேர்ந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது பொறியியல் பாடத்திட்டத்தில்…
எதிர்கொள்வது பொருளாதாரச் சுணக்கம் அல்ல சிக்கல்! நிதியமைச்சரின் அறிவிப்புகள் தேற்றுமா? பதில் கிட்டாத சில கேள்விகள். இந்தியாவின் பெருளாதாரம் சந்தித்து வரும் சரிவை தடுத்து நிறுத்தவும் மீண்டும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் 10 முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குத் தேவையான அளவிற்கு கடன் வசதியை அளிக்கத் தேவைப்படும் முதலீட்டுச் செலுத்தலுக்கு நிதி நிலை அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட ரூ.70,000 கோடியை பொதுத் துறை வங்கிகளுக்கு உடனடியாக வழங்கப்படும், கட்டுமானத் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை நீக்க வீட்டு வசதிக் கடன் தரும் நிதியமைப்புக்களுக்கு மேலும் ரூ.30,000 கோடி அளிக்கப்படும், சிறு குறு நடுத்தரத் தொழிலகங்கள் செலுத்திய ஜிஎஸ்டியில் திரும்ப அளிக்க வேண்டிய தொகையை 30 நாட்களுக்குள் செலுத்தப்படும் என்பன நிதியமைச்சரின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய, அவசியமான நடவடிக்கைகள் ஆகும். வாகன உற்பத்தியிலும் விற்பனையிலும் உருவாகியுள்ள தேக்க நிலையை நீக்கிட உதவிடும் வகையில்…
பொருளாதாரச் சரிவின் அபாய அறிகுறிகள் இந்திய நாடு இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சரிவும் அதன் விளைவாக இந்நாட்டு மக்கள் எதிர்கொண்டுவரும் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களும் இந்நாட்டின் பொருளாதார எதிர்காலம் தொடர்பான ஆழமான கவலைகளை உருவாக்கியுள்ளது. “இந்தியா ஒரு மெளன நிதிச் சிக்கலை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது” என்று பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைப் பேரவையின் உறுப்பினர் ரத்தின் ராய் கூறியதும், நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதையும் குறிப்பிட்டு ஒரு மாதத்திற்கு முன்னரே எனது முகநூலில் பதிவிட்டிருந்தேன். ஆனால் இந்திய ஒன்றிய அரசின் நிதியமைச்சரோ அல்லது பிரதமரோ அப்படி ஒரு நிலையை இந்நாடு எதிர்கொண்டிருப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வாகன உற்பத்தி உள்ளிட்ட சில துறைகளில் மந்த நிலை இருப்பதை மட்டும் ஒப்புக்கொண்டு, அதற்கு தற்காலிமான நிவாரணங்களை அளிப்பதற்கான ஆலோசனையில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் இந்நாடு…
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவர்களின் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்- இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெற்றது தொடர்பாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றை சுதந்திரப் பேச்சாளர்கள் ஆய்வு வட்டம் (Freedom Speech- Study Circle) என்ற பெயரிலான மாணவர் குழு ஏற்பாடு செய்திருந்தது. இக்குழுவில் உள்ள மாணவர்கள் மீது பல்கலைக்கழகம் நிரந்தர நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குறிப்பிட்ட பேச்சாளர்கள் ஆய்வு வட்டமானது கடந்த காலங்களில் தொடர்ந்து பல ஆக்கப்பூர்வமான விவாதங்களை பல்கலைக்கழத்திற்குள் அமைதியான மற்றும் ஜனநாயக வழியில் நடத்தி வந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பாஜக அரசு ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தை ( 370 & 35A) ரத்து செய்தது. அரசியலைப்பு சட்டப்பிரிவு 370 குறித்து…
சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘வந்தே மாதரம்‘ பாடலா? முடிவைக் கைவிடாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும்! – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் புறந்தள்ளிவிட்டு, இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வரிகளைக் கொண்ட வந்தே மாதரம் பாடலைப் பாடுவது – சட்ட விரோதமானது – கண்டனத்துக்கு உரியது என்றும், இந்த நிலையை மாற்றி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட முடிவு செய்யாவிட்டால், நீதிமன்றத்தின் வழியாக முடிவு காணப்படும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு: சென்னையில் உள்ள ஐஐடி(Indian Institute of Technology) என்ற நிகர்நிலைக் கல்வி நிறுவனம் போன்ற ஒரு தனி அமைப்பு, ஜெர்மன் நாட்டு உதவி, மத்திய அரசு, மாநில அரசுகளின் நிதி உதவியாலும் பல்வேறு அனுமதிகளுடன் நடந்துவரும் நிறுவனம்! பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டத்தைத் தடுத்தவர்கள் நடைமுறையில் அது ஒரு…
சமூகரீதியாக இன்னும் பின்தங்கியுள்ள சாதிகளைக் கண்டறிந்து இட ஒதுக்கீடு பலன்கள் அவர்களைச் சென்றுசேர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கான இட ஒதுக்கீடை அதிகரிக்க வேண்டும், உள் ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும். கலைஞர் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு கொடுத்தது அத்தகையதுதான்.
அண்மையில் வெளியிடப்பட்ட SBI வங்கியின் ஜுனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான முதல் நிலைத்தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில வாரியாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தேர்வு முடிவில், முதன்மை தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற்ற போட்டியாளர்களின் குறைந்தபட்ச மதிப்பெண்கள்(Cut-off marks) இடஒதுக்கீடு அடிப்படையில் வெளியிடப்பட்டிருந்தன. பல்வேறு மாநிலங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவுக்கான(EWS) கட்-ஆஃப் மதிப்பெண், சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் OBC, SC மற்றும் ST பிரிவினரை விட மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக, தமிழகத்தில் SC பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 61.25 ஆகவும், ST பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 53.75 ஆகவும், OBC மற்றும் பொது பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 61.25 ஆகவும் இருக்கும் நிலையில், உயர்சாதி EWS பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் வெறும் 28.5 ஆக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது கடுமையான கண்டனத்திற்குரியது. இதே போன்ற நிலை அஸ்ஸாம்,மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நிலவுகின்றது. கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட BHEL…
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராக ஆற்றிய உரை முக்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகத்தின் முழுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஏன் துடிக்கிறது. இதன் மூலம் இந்த நாட்டிற்கு என்ன சொல்ல நினைக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் நாட்டு மக்களை பிரிக்கும் முயற்சியில் இறங்குகிறது மத்திய அரசு. பெண்களுக்கு பயன் தரக் கூடிய 33 சதவிகிதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் நீங்கள் பொடுபோக்காக உள்ளீர்கள். ஆனால் முத்தலாக் தடை மசோதாவை கொண்டு வருவதில் நீங்கள் காட்டும் ஆர்வம் வியப்பளிக்கிறது. காரணம் கேட்டால் “முத்தலாக் தடை மசோதா பெண்களின் நலனுக்காக” என்கிறீர்கள். பெண்களுக்கான நலன் எது என்பது பெண்களாகிய எங்களுக்கு உங்களை விட நன்றாக தெரியும். ஒன்றும் உதவாத முத்தலாக் தடை மசோதாவை விட்டுவிட்டு பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டைத்தை…
