Author: Admin

ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்னு மெசேஜ் வந்த போது இவ்வளவு பிரச்சனைகள எதிர்கொள்ளுவோம்னு எதிர்பாக்கலை. முதல் சிக்கல் எங்களிடம் கணிணி, சொந்த உபயோக லாப்டாப் போன்ற விசயங்கள் இல்லை. செல்போன்கள் மட்டுமே. அதை வச்சு சமாளிக்கலாம்னு ஒரு கணக்கு போட்டோம். ஜியோ இருக்க பயமேன்னு அம்பானிய வேற நம்புனோம். டைம் டேபிள் பாத்ததும் தல சுத்திருச்சு. காலை எட்டு மணி முதல் மதியம் மூன்று வரை மாறி மாறி வகுப்புகள். நாங்கள் வேலைக்கு எப்படி போவது?திடீரென இருபதாயிரம் செலவு செய்து லாப்டாப் வாங்கணுமா? அதுவும் இருவருக்கெனில் என்ன செய்ய? எத்தனை நாட்கள் எனும் தெளிவும் இல்லை. இருந்தால் வாடகைக்கு வாங்கலாம்.இத்தனை செய்தாலும் பிள்ளைகளுக்கு கனெக்ட் பண்ண தெரியுமா? குறிப்பாக சின்னவளுக்கு. எட்டு வயதுதான். கூடவே இருப்பது சாத்தியாமா? இத்தனை எலக்ட்ரானிக் டிவைசுகளை சார்ஜர்களுடன் குழந்தைகளை நம்பி விட்டுவிட்டு எப்படி தைரியமாக வேலைக்கு செல்வது. இதெல்லாம் முதல்கட்ட சிக்கலாக இருந்தது. மிகுந்த குழப்பநிலை சரி…

Read More

தொலைக்காட்சியில் கணினிவழிக் கல்வி குறித்த என் தங்கையின் சிறு நேர்காணலைப் பகிர்ந்திருந்தேன். இணையம்வழி சரியான முறையில் கற்பவர்களுக்குப் பல பலன்கள் உள்ளன என்பதை நானும் மறுக்கமுடியாது. ஆனால் சமூகரீதியாக அதிலுள்ள சிக்கல்களையும் நாம் அறியவேண்டியுள்ளது. இந்த இரண்டு மாதங்கள் ஏட்டுக்கல்வி கற்றலில் இணையம்வழி கற்பதற்கான வசதி வாய்த்த குழந்தைகளுக்கும், அதற்கான வாய்ப்புகளற்ற குழந்தைகளுக்குமிடையே மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஆண்டுகளில் ஐஐடி, நீட், குடிமைப்பணித் தேர்வுகளின் போது இந்த இடைவெளியின் தாக்கம் தெரியவரும். என் தங்கையின் நிறுவனம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி முகாம்களின்போது கணினிவழிப் பயிற்சி அளிப்பதற்காக அரசாங்கத்தால் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இவ்வாண்டு அந்த முகாம்களும் நடைபெறவில்லை. இணையத்தின்மூலம் அதை நடத்துவதற்கான சாத்தியங்களும் இதுவரை இல்லை. [ஜூன் 15ல் தொடங்கப்படலாம்]. இணைய இணைப்பும், திறன்பேசியும், தொலைக்காட்சியும் இல்லையென்று கேரளாவில் தற்கொலை செய்துகொண்ட மாணவி தேவிகாவை நினைத்துக்கொள்கிறேன். இத்தகைய கையறுநிலை எத்தனை குழந்தைகளின் மனநிலையாக இருக்கிறது என்பதை நாம் ஆராயவேண்டும்.…

Read More

“தமிழர்கள் எந்நாளும் ஒற்றை மத அடையாளத்தில் தம்மை முடக்கிக் கொண்டது இல்லை!” சீமானின் “நாம் தமிழர்” கட்சியைச் சேர்ந்த சதாம் உசேன் எனும் முஸ்லிம் இளைஞர் முருகக் கடவுள் புகழ் பாடி ஷரியத்திற்கு முரணாகத் திருமணம் செய்து கொண்டது குறித்து இப்போது ஒரு சர்ச்சை நிலவுகிறது. சீமானைக் கண்டிப்பவர்கள் ஒருபுறம். அப்படிக் கடுமையாகத் தம் சமூகத்தினர் அவரைக் கண்டித்ததற்காக அவரிடம் வருத்தம் தெரிவிக்கும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்னொரு புறம் என இரு போக்குகளைக் காண்கிறோம்.. இந்தப் பதிவு அது குறித்து அல்ல. நான் சீமானின் அரசியல் நகர்வுகளை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவனனும் அல்ல. இங்கு தினம் ஒரு வடிவில் வெளிப்படும் பாசிசத் தாக்குதல்களை எதிர் கொள்வதற்கே நமக்கு நேரம் போதவில்லை. இருந்த போதிலும் இந்த சர்ச்சையை ஒட்டி சீமானின் கடந்த இரண்டாண்டுகால அரசியல் நகர்வுகள் குறித்து மேலோட்டமாகச் சமூக ஊடகப் பதிவுகளில் தேடிப் பார்த்தேன். சீமானின் செயல்பாடுகள் ஒரு…

Read More

கடந்த 22.5.2020 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சந்தித்தது. அந்தச் சந்திப்புக்கான காரணத்தை அறிக்கையாகவும் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். அந்த அறிக்கை வரிக்குவரி கடும் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதைப் பதிவு செய்யவே நாங்கள் இந்தக் கூட்டறிக்கையை விடுக்கிறோம். நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் வீரத் தமிழர் முன்னணி, தமிழம் மதம் போன்றவை குறித்து நம்மில் பலரிடம் அச்சம் இருந்து வந்த நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் சிவன், முருகன் பெயர் கூறி திருமணம் நடத்தியது சாமன்ய முஸ்லிம்களிடையே பெரும் விவாதப் பொருளானது. இந்தப் பின்னணியில்தான் பல்வேறு இஸ்லாமிய அமைப்புப் பிரதிநிதிகள் ஒன்றுதிரண்டு சீமானை வீடு தேடிச் சென்று சந்தித்தனர். சந்தித்ததற்கு வலுவான காரணம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனினும் இச்சந்திப்பை ஒரு குற்றமாகவும் நாங்கள் பார்க்கவில்லை. அதேசமயம், சந்திப்புக்குப் பிறகு அந்தக் கூட்டமைப்பினர் வெளியிட்ட அறிக்கை தம் சொந்த சமூகத்தையே…

Read More

கொரோனா வைரஸ் பெயரைச் சொல்லி முஸ்லிம்கள் குறி வைக்கப்படுகிறார்கள் – தி கார்டியன் (ஏப்ரல் 13 ம் நாளன்று தி கார்டியன் இதழ் ‘Conspiracy theories targeting Muslims spread in India’ என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. Hannah Ellis Peterson, Shaik Azizur Rahman என்ற பத்திரிக்கையாளர்கள் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது) வட மேற்கு தில்லியின் விளிம்பில் இருக்கும் ஹரேவாலி (Harewali) என்ற கிராமத்தைச் சார்ந்த மெகபூப் அலி என்ற 22 வயது இளைஞனை வெளியில் இழுத்து கம்பாலும்,செருப்பாலும் ஒரு கும்பல் மூக்கிலும், காதுகளிலிலும் இரத்தம் வரும்வரை அடித்தது. சில வாரங்களுக்கு முன்னதாக போபாலில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு ஒன்றில் அந்த இளைஞன் கலந்து கொண்டதுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று காவல்துறை சொல்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரசை இந்துக்களுக்கு பரப்பும் ‘சதியைச்’ செய்ததாகச் சொல்லி, வேறு யாரெல்லாம் இந்தச் ‘சதியின்’ பின்னால்…

Read More

திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரங்கு உத்தரவால் டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பரிதவித்து நிற்கின்றனர் லட்சக்கணக்கான தொழிலாளர்கள். வேலையில்லை; வருமானம் இல்லை; ஊருக்கு செல்லலாம் என்றால் ரயில், பஸ்.. எதுவும் இல்லை. வேறு வழியின்றி, பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால், வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே கிளம்பிவிட்டனர். அதுவும் தனியாக அல்ல, குழந்தைகளை தூக்கிக்கொண்டு, பைகளை சுமந்துகொண்டு செல்கின்றனர். டெல்லி, நொய்டா, ஃபரிதாபாத், காஸியாபாத் ஆகிய இடங்களில் இருந்து இப்படி மக்கள் கூட்டம், கூட்டமாக கிளம்பிச் செல்லும் வீடியோக்களும், புகைப்படங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. எங்கோ 150 கி.மீ., 200 கி.மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஊரை நோக்கி தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கின்றனர். உறக்கமில்லை; உணவில்லை. கை குழந்தையை தூக்கிக்கொண்டு எவ்வளவு நேரம் நடக்க முடியும்? ஆறு, ஏழு வயதான சிறுவர்களை தூக்கவும் முடியாது. அவர்கள் எவ்வளவு தூரம் நடப்பார்கள்? இவர்களின் துயரம் கேள்விப்பட்டு, சில இடங்களில் சாலையோரங்களில்…

Read More

என் நண்பர்களிடம கூறுங்கள், அவர்கள் என்னை பார்க்கும்பொழுது, என் பிணத்தை பார்க்கும்பொழுது எனக்காக அழுது துக்கம் கொள்ளும்பொழுது “நீங்கள் காணும் இந்த பிணம் நான் தான் என்று எண்ணி விடாதீர்கள் இறைவனின் பெயரால், நிச்சயம் நான் கூறுகிறேன், அது நான் அல்ல நானோ ஒரு ஆன்மா, இதுவோ வெறும் சதை மட்டுமே அது எனக்கு குறுகிய காலத்திற்கு ஒரு தங்கும் இடமாகவும் ஆடையாகவும் இருந்தது நான் ஒரு பொக்கிஷம், தாயத்துக்குள் மறைத்து வைக்க பட்டிருந்தேன் மண்ணால் படைக்க பட்டது அது, எனக்கு ஒரு சன்னதி ஆக இருந்தது நானோ ஒரு முத்து, அதன் சிப்பியையோ விட்டுவிட்டது நானோ ஒரு பறவை, இந்த உடலோ எனது கூண்டாக இருந்தது இப்பொழுது நான் பறந்து செல்கிறேன், அதை ஓரடயாளம் ஆக விட்டுவிட்டு எல்லா புகழும் இறைவனுக்கே, அவனே இன்று என்னை விடுதலை செய்தான் அவனோ எனக்காக வானங்களில் என்னுடைய ஒரு உயர்ந்த இடத்தை தயார்…

Read More

வட இந்திய, இந்துத்வ வன்முறையைக் காட்சிப்படுத்தி வந்திருக்கும் ஜிப்சிக்கு நன்றி. நாடோடி ஒருவனின் கதையாக வந்திருக்கவேண்டிய இந்தப்படம், இஸ்லாமியர் வாழ்வியல் மீது துணிந்து தவறான சித்திரத்தைத் தருவதோடு, இந்துப் பெரும்பான்மைவாதத்துக்குத் துணைபோகிறது. இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் படமெடுக்கும் முன், அது பற்றிய குறைந்தபட்ச ஆய்வைச் செய்யவேண்டும். அப்படி எதுவுமில்லாமல், இப்படம் இஸ்லாமியர்களின் வாழ்வியல் முறையை மிகவும் கொச்சையாக முன்வைக்கிறது. பிதாமகன் படத்தில் வெட்டியானாக வரும் நாயகனை எங்கிருந்தோ வந்த பெண் பிரசவித்துப்போவாள். அதுபோல இப்படத்தில், “சிவாயநம” சொல்லும் இந்து அப்பாவுக்கும், “தொழுகையைக் கைவிடாத” இஸ்லாமியப் பெண்ணுக்கும் கஷ்மீரில் பிறக்கிறான் நாயகன் ஜிப்சி. குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து, ஜிப்சி ஒருவரால் ஜிப்சியாக வளர்க்கப்படுகிறான். குண்டு வெடிப்பை இஸ்லாமியர்கள் நடத்தியாகப் பின்பாதியில் நாயகன் சொல்கிறார். அதாவது “சிவாயநம” சொல்லும் இந்து, தன் இஸ்லாமிய மனைவியின் சமய உரிமைகளில் தலையிடவில்லை. கஷ்மீரிகளின் குண்டை, இஸ்லாமியர்களின் குண்டாகப் பொதுப்புத்திக்கு ஏற்றவகையில் நாயகன் சொல்வதாகப் படம் சொல்கிறது. தாய்தந்தையரைப் பறிகொடுத்த,…

Read More

புதுதில்லி: ஒருவாரம் கழித்து ரூபினா தனது இல்லத்திற்கு முதல் முறையாக திரும்புகிறார்.பிப்ரவரி 25 அன்று தில்லி ஷிவ் விகாரில்தனது இல்லத்தை அடித்து நொறுக்க வந்த மதவெறி கும்பலிடமிருந்து தனது ஐந்து குழந்தைகளோடு தப்பித்து ஓடிய 33 வயது பெண்மணி ரூபினா. ஒரு வாரம் கழித்து மார்ச் 2 அன்று, ஷிவ் விகாரின் 14ஆவது தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். வழிநெடுகிலும் அந்த வீதி சுடுகாடு போல காட்சியளிக்கிறது. கட்டடத்தின் கீழ் தளத்தில் அந்த வீட்டுக்கு சொந்தக்காரரான முஸ்லிம் பெரியவர் வைத்திருந்த கடை அடித்துநொறுக்கப்பட்டு கிடக்கிறது. தானியங்கள், துணிமணிகள், கண்ணாடிகள், வாட்டர்கூலர்கள் என ஒவ்வொன்றும் அந்த சந்து முழுவதும் சிதறி, நொறுக்கப்பட்டு அந்த கட்டடமேஇடிந்து விழுந்தது போல காட்சியளிக்கிறது. மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைகிறார் ரூபினா. உள்ளே கண்ட காட்சியைப் பார்த்து கதறி அழுகிறார். வீடே அலங்கோலமாக்கப்பட்டுள்ளது. துணிகள் எரிக்கப்பட்டுள்ளன. எல்சிடி டிவி…

Read More

இந்த மௌனம் கொல்கிறது நண்பர்களே! உங்கள் மௌனம் என்னைக் கொல்கிறது நண்பர்களே! உண்மைதான்! உங்கள் மௌனம் எனது கொலைக்கு ஒப்பானதாய் நான் கருதுகிறேன் நண்பர்களே! முகநூலில், ஐந்தாயிரம் நண்பர்கள். இதில் பின்பற்றாளர்கள் இன்னும் சில ஆயிரம். அப்படியிருந்தும் இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அராஜகம் குறித்து நீங்கள் மௌனமாக இருப்பது என்னை பெருத்த கேள்விகளால் துளைத்தெடுக்கிறது என்பதே உண்மை. எனது பதிவுகளுக்கு நீங்கள் தெரிவிக்கும் விருப்புகள், வெறுப்புகள், அழகிய முறையில் விவாதிக்கும் பின்னூட்டங்கள், எனது ஒளிப்படங்களுக்கான உங்களது புகழுரைகள், விமர்சனங்கள் இவை எல்லாம் போலியானவை என்று உங்கள் மௌனத்தின் பொருளாய் நான் எடுத்து கொள்ளலாமா? இன்னும் ஓரிரு மாதங்களில் பாட்டன், பூட்டன் என்று காலங்காலமாய் வாழ்ந்து வந்த ஒரு சமூகத்தின் அங்கத்தினரான எனது குடியுரிமை சம்பந்தமாக வளர்ந்து நிற்கும் கேள்விக்குறியும், அனுதினமும் நாட்டில் நடக்கும் பதட்டங்களுமாய் கழியும் பொழுதுகள் ஒருவேளை நீங்கள் உள்வாங்காமலிருக்கலாம். ஆனால், நானும் என்னைச் சார்ந்தோரும் இந்த நாட்டின்…

Read More