மாலிக்பத்ரி, இவர் பிராய்ட் மற்றும் ஸ்கின்னர் போன்ற உளவியாளர்களின் கோட்பாடுகளை விமர்சித்தல் மற்றும் அதனை மதிப்பிடும் சவாலை ஏற்றுக்கொண்டு,, அவற்றை மதிப்பீடுசெய்து இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவர்களுடன் ஈடுபடுவதற்கான ஒரு சீரான வழியை வழங்கினார் அறிவு மற்றும் அறிவு உருவாக்கம் ஆகியவற்றின் இஸ்லாமிய மயமாக்கல் இயக்கத்தில் ஒரு உயர்ந்த நபரின் மறைவைக் கேட்பது மிகவும் மனதை கலக்கமடையச் செய்கிறது, உளவியல் துறையில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஒரு மிகப்பெரிய ஆளுமை பேராசிரியர் மாலிக்பத்ரி. இவர் ஒரு புகழ்பெற்ற உளவியலாளர் ஆவார். இவர் பல உளவியலாளர்களை குறிப்பாக முஸ்லீம் உளவியலாளர்களுக்கு அறிவூட்டியுள்ளார். நவீன உளவியல் பிராய்ட் மற்றும் ஸ்கின்னரின் கோட்பாடுகளை கண்மூடித்தனமாகப் பின் பற்றியபோது, முஸ்லீம் உளவியலாளரும் இதற்கு விதிவிலக்கல்ல, இதற்கு இவர் ஆதிக்கம் செலுத்தும் போக்குகளை விமர்சிக்கவும், அவற்றை மதிப்பீடு செய்யவும், ஈடுபாடு மற்றும் பணிநீக்கம் செய்வதற்கான சமநிலை வழியை வழங்கும் முயற்சிகளை தன் கடமையாக ஏற்றுக்கொண்டார். இஸ்லாமிய உலவியலின் கவனத்தை ஈர்த்து, ஆரம்ப…
Author: Admin
அந்தக் காலையும் விடிந்தது(!) 38 வருடங்களுக்கு முன் பிப்.18, 1983ம் ஆண்டு மத்திய அஸ்ஸாமின் நெல்லி உட்பட்ட பகுதிகளில் ஆறு மணிநேர இடைவெளியில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை 2191 முஸ்லிம்களின் உயிரைப் பறித்தது (கணக்கில் வராதவர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் இருக்கலாம்). அலிசிங்கா, குலாபதார், பசுந்தரி, பகுபா பீல், புக்துபா ஹபி, பர்ஜோலா, புதினி, தங்காபோரி, இந்துர்மாரி, மாட்டி பார்பத், முலாதாரி, சில்பேட்டா, போர்புரி மற்றும் நெல்லி என நாகயோன் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பகுதிகளில் சிலமணி நேரங்களுக்குள் மிருகத்தனமான வன்முறை நிகழ்த்தப்பட்டது. பயங்கரமான ஆயுதங்களுடன் அதிகளவில் மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வாக இது இருக்கும். ‘அஸ்ஸாமிய அனைத்து மாணவர் அமைப்பு'(AASU) இந்த படுகொலையில் முக்கிய பங்காற்றிருக்கும் என்று நம்பப்படுகிறது. நெல்லி படுகொலையில் ஆர்எஸ்எஸ் சக்திகளின் தொடர்பை மறுக்க முடியாது. அதேநேரத்தில் அஸ்ஸாமிய இயக்க கிளர்ச்சியாளர்கள் ஆர்எஸ்எஸ்-வுடன் இணக்கமான உறவைத் தொடர்ந்தனர். படுகொலை தொடர்பாக மொத்தம் 688 வழக்குகள் பதிவு…
பெங்களூரைச் சேர்ந்த 21 வயது பெண்ணான திஷா ரவி பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இளம்வயது சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு பிரச்சார ஆவணத்தினை ஃபிப்ரவரி 4-ம் தேதி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். விவசாயிகளுக்கு ஆதரவான அந்த பிரச்சார ஆவணத்தினை பகிர்ந்ததற்காக கிரேட்டா துன்பர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த ஆவணத்தினை தயாரித்ததில் திஷா ரவிக்கும் பங்கு இருப்பதாக குறிப்பிட்டு திஷா ரவியை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. யார் திஷா ரவி? 2018-ம் ஆண்டு சுவீடனைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியான கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காப்பதற்காக அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை வைத்து சுவீடன் பாராளுமன்றத்தின் முன்பு தனது போராட்டத்தைத் துவங்கினார். Fridays For Future என்று அந்த போராட்டத்திற்கு பெயரிடப்பட்டது. பருவநிலை மாற்றத்தினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் தலைவர்களுக்கு கோரிக்கை வைத்து, வெள்ளிக்கிழமை தோறும்…
நான் கடந்த 20 ஆண்டுகளாகக் கர்நாடகா மாநில விவசாயிகள் இயக்கத்தில் (Karnataka Rajya Raitha Sangha-KRRS) செயல்பட்டு வருகிறேன். அதில், குறிப்பிட்ட நினைவுகளில் ஒன்றாகப் பார்ப்பனிய சைவ உணவு சுத்தத்தை மறுக்கும் விதமாகக் கர்நாடக சட்டப்பேரவை முன் கேஆர்ஆர்எஸ் நடத்திய மாட்டுக்கறி விருந்து நினைவிருக்கிறது. மேலும், பார்ப்பனியத்திலிருந்து சாதியற்ற சமூகத்தை மீட்டுருவாக்க கிராமங்களில் சாதி மதங்களைக் கடந்து கேஆர்ஆர்எஸ் நடத்திவைத்த சுயமரியாதை திருமணங்கள் முக்கியமானவை. ‘கர்நாடகா பசுவதை தடை மற்றும் கால்நடைகள் பாதுகாப்புச் சட்டம்’ என்ற பெயரில் ஜனநாயகமற்ற பார்ப்பனிய சட்டத்தைச் சமீபத்தில் கொண்டுவந்துள்ளது பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி. இச்சட்டம் 2020ல் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்த நிலையில், கவர்னரின் ஒப்புதலுடன் அவசரச் சட்டமாக நிறைவேற்றியுள்ளனர். கர்நாடகாவில் இன்று அவசரமாக இந்த சட்டத்தை நிறைவேற்றக் காரணம், ஆளும் பாஜக அரசின் மத்தியத் தலைவர்களின் கவனிப்பைப் பெறுவதாகவே இருக்கும். இந்த சட்டம் ஒன்றும் புதிதல்ல. தற்போதைய முதலமைச்சர் எடியூரப்பாவால்…
என்னை வெறும் முஸ்லீம் இளைஞனாகக் கேட்கட்டும்; எல்கர் பரிஷத்தில் ஷர்ஜீல் உஸ்மானியின் முழு உரை ஷர்ஜீல் உஸ்மானி மேடையில் அமர்ந்திருக்கும் மரியாதைக்குரிய பிரமுகர்களே, அன்புள்ள நண்பர்களே, பெரியவர்களே, எனது பெயர், எனது குடியுரிமை, எனது நேர்மை, எனது நன்மை, எனது குறைபாடுகள் ஆகியவற்றிலிருந்து என்னைப் பிரித்து, வெறும் முஸ்லீம் இளைஞர்களாக என்னைக் நீங்கள் பார்க்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் மனதார கேட்டுக்கொள்கிறேன். ஒரு முஸ்லீம் இளைஞனாக, நான் இங்கே என் வலியை வெளிப்படுத்தவும், என் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் கதையைச் சொல்லவும், என் கோபத்தின் செய்தியை அனுப்பவும், என் போரை அறிவிக்கவும் இங்கு வந்துள்ளேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் மரியாதையுடன் வாழ்த்துகிறேன் அஸ்ஸலாமு அலைகும் வா ரஹ்மத்துல்லா ஹாய் வா பராகதுஹு – (என் இறைவனின் சாந்தியும்சமாதானமும் உங்கள் மீது இருக்கட்டும்) இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு ஹர்ஷாலி ஜி என்னை அழைத்தபோது, நான் கவலைப்பட்டேன், எனக்கு ஒரு பயம் இருந்தது,…
அது எண்பதுகளின் மத்தியப்பகுதி… சர்வதேச பொது மன்னிப்பு இயக்கம் என்றழைக்கப்படும் அம்னஸ்டி இண்டர்நேஷனலில் (Amnesty International) தோழர்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். . உலகின் எங்கோ ஒரு மூலையில் சிறைப்பட்டிருக்கிற இரு கைதிகளின் விடுதலைக்காக ஒவ்வொரு குழுவும் பணியாற்ற வேண்டும். . சிறை வைக்கப்பட்டிருப்பவர் தனது நிறத்தின் பொருட்டோ… இனத்தின் பொருட்டோ… தான் வைத்திருந்த சித்தாந்தத்தின் பொருட்டோ… கைது செய்யப்பட்டவராக இருப்பார். அப்படிப்பட்டவர்களை மனசாட்சிக் கைதிகள் என்றழைப்பார்கள் (Prisoner of Conscience). நாம் அவர்களது விடுதலைக்காக உழைக்க வேண்டும். . ஆனால் அப்பணியின்போது நமது இனம், மதம், சித்தாந்தம் சார்ந்த கருத்துக்கள் ஒருபோதும் குறுக்கிடக் கூடாது. நாம் யாராயினும் மற்றொரு முனையில் கைது செய்யப்பட்டிருப்பவர் எதன் பொருட்டு சிறை வைக்கப்பட்டிருப்பினும் அவரது விடுதலையையே இலக்காகக் கொண்டு செயற்படவேண்டும். . கொஞ்சம் புரியும்படி சொல்வதானால்… நாம் நாத்திகராகவே இருப்பினும் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டிருப்பவர் கிருஸ்துவ மதப் பிரச்சாரகராகவோ அல்லது ஹரே ராமா…
கோவிட்-19ம் உச்ச நீதிமன்றமும் சாதாரண காலங்களில் அரசியல் அமைப்புச் சட்டம் முக்கியமானது என சவாசமாகப் பேசிக் கொள்ளலாம். ஆனால், நெருக்கடியான நேரங்களில், அரசியல் நிர்ணயச் சட்டம், அதனை செயல்படுத்திடும், வழிமுறைகள், அதனை செயல்படுத்திட வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் அக்கறை அனைத்தும் சோதிக்கப்படுகின்றன. இந்த சோதனைகளில் நமது உச்ச நீதிமன்றம் வெகுவாகவே தோற்றுப்போய்விட்டது. கோவிட்-19 காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் வீழ்ச்சி அவமானமானது. இந்த ஆய்வு, நமது உச்ச நீதிமன்றம் எப்படி ஓர் அவவேளையில் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தையும், மக்களையும் ஒட்டுமொத்தமாகக் காலை வாரிவிட்டது என்பதைப் பற்றியதே! உச்ச நீதிமன்றத்திற்கு வரும் சில வழக்குகள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டனவாக இருக்கக் கூடாது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதாவது நீதிபதிகள் முழு விஞ்ஞானிகளாகவோ, மருத்துவர்களாகவோ, இருக்க வேண்டாம் என யாரும் எதிர்பார்த்திட வேண்டாம். ஆனால், அவர்கள் – நீதிபதிகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியும் – அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் கொள்கைகளைப்…
நெடுந்துயர சித்திரவதை – நொறுங்கிப்போன மானுடம் உடம்பு முழுவதும் காயங்கள். கண்களில் படர்ந்திருக்கும் பயம். முகம் கொடுத்து பேச மறுக்கும் தவிப்பு. உணர்வு மறுத்துப்போய் அவமானத்தால் கூனிக்குருகியிக்கும் ராகுலை புரிந்து கொள்ள முடிந்தது. என்ன ராகுல் நடந்தது? பதிலுக்கு முன்பு கண்ணீர் தான் எட்டிப் பார்த்தது. பத்துக்கும் மேற்பட்ட வன்கொடுமை கும்பல் 21 வயது ராகுல் என்கிற இளைஞரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்க, அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி அழுகின்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். என்ன நடந்தது? சம்பந்தப்பட்ட இடத்திற்கு எவிடன்ஸ் குழுவினருடன் களஆய்வில் ஈடுபட்டேன். தஞ்சாவூர் – அம்மாபேட்டை அருகில் உள்ள கிராமம் பூண்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ராகுல். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவரது அப்பாவி தனத்தை பயன்படுத்திக் கொண்டு…
ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை’ என்ற வாதம் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தொழிற்துறை வர்த்தகர்களால் வைக்கப்படும் என்று தெரிகிறது. தாங்கள் மீண்டுவிட்டோம் என்றும், நம்பிக்கையான திட்டங்கள் உள்ளன என்றும் அவர்கள் மூச்சு விட்டுக்கொள்ளலாம். ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில், இந்த அரசு வழக்கம்போல் தொழிற் நிறுவனங்களுக்கான திட்டங்களை முன்மொழிந்துள்ளது, தனியார்மயமாதலில் தனது ஈடுபாட்டை வெளிப்படையாகக் கையாண்டுள்ளது. தொழிலாளர்கள் மறுசீரமைப்பு, கொரோனா பெருந்தொற்றுக்கான நிவாரணம் மற்றும் பல்வேறு அடிப்படைத் தேவைகள் இருக்கும்போது கார்ப்பரேட்களுக்கான உதவித்தொகை வழங்குவதிலேயே கவனமாக உள்ளது. பெருந்தொற்று பல மில்லியன் மக்களின் (பெரும்பாலும் ஏழைகள்) வாழ்வாதாரத்தைச் சிதைத்த பிறகு வழங்கும் முதல் பட்ஜெட் இது. அதில் ஏதும் தமக்கான ஆச்சரியம் இருக்குமா என்று அவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அவை, அவர்களின் பெரும் பாதிப்புக்கான நிவாரணமாகவும், மற்ற அனைத்து நாடுகளிலும் செய்ததைப் போல் அவசரக்கால உதவித்தொகையாகவும், பேரிடர் காலத்தால் பாதிக்கப்பட்ட அவர்களின் கல்வியைப் பலப்படுத்தும் விதமாகவும், சிறு குறு தொழில்களின் சீரமைப்பாகவும் அல்லது கடந்த ஒரு…
தி.இராசகோபாலன் என்கிற ஓய்வுப் பெற்ற பேராசிரியர் ‘மனமாற்றமே வேண்டும்’ என்கிற தலைப்பில் மத மாற்றத்துக்கு எதிராக கட்டுரை என்கிற பெயரில் சாதிய ஆணவத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். மீனாட்சிபுரத்தில் இஸ்லாமுக்கு மதம் மாறிய தலித்துகள் பல தார மணத்துக்காகவே மதம் மாறினர் என்கிறார் இராசகோபாலன். இந்த சமூக ஆய்வை ஐயா அவர்கள் எந்த புண்ணிய ஷேத்திரத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஞான திருஷ்டி கொண்டு தெரிந்துக் கொண்டாரோ? ரோஸா பார்க்ஸ் வரலாறு தெரிந்தவர்களுக்குக் கூட தெரியாதது நம்மூர் மீனாட்சிபுரத்தில் 80-கள் வரைக் கூட தலித்துகள் பேருந்துகளில் சீட்டில் அமர்ந்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதில் உச்சப் பட்ச கொடுமை என்னவென்றால் ரோஸா பார்க்ஸ் கறுப்பு இனத்தவர், பார்த்தாலே வெள்ளைக்காரர்களுக்கு அவர் நம்மவர் இல்லை என்று தெரியும். ஆனால் மீனாட்சிபுரத்தில் அடக்குபவனுக்கும் அடக்கப்படுகின்றவருக்கும் வித்தியாசத்தை ஸ்தூலமாக எப்படி கண்டு உணர்ந்தார்கள்? இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நோபல் பரிசு கொடுக்கப்பட்டால் நம்மவர்கள் அள்ளி விடுவார்கள். இன்னும்…
