Author: Admin

January22 #GrahamStaines #BajrangDal #BurntAlive மறதி என்பது மனிதனின் இயல்பு என்பதால், ஒவ்வொரு ஜனவரி 22ஆம் தேதியும், அதே தேதியில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு குறித்து ஏதாவது ஒரு பதிவையாவது எழுதி, அதனை மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன். 1965 ஆம் ஆண்டு, தன்னுடைய 24 வது வயதில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரிசாவின் மனோகர்பூர் என்கிற பழங்குடி கிராமத்திற்கு வந்தார் கிரகாம் ஸ்டெயின்ஸ். அங்கிருக்கும் தொழுநோய் மருத்துவமனையை கவனித்துக்கொண்டு, அங்கேயே தங்கிவிட்டார். காதலித்து மணமுடித்து மனைவியுடனும் இரண்டு மகன்களுடனும் ஒரு மகளுடனும் அந்த பழங்குடி கிராமத்திலேயே மக்களுக்காக வாழ்ந்து வந்தார் கிரகாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்த கிராமத்திற்கு பயணித்து, அங்கேயே தங்கி தொழுநோய்க்கான சிகிச்சை பெற்று ஆண்டுதோறும் ஏராளமானோர் பயனடைந்துவந்தனர். 1999இல் ஃபாதர் கிரகாமும் அவரது இரு மகன்களும் ஒரு காருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அங்கே 50 பேருக்கும் மேற்பட்டோரைக் கொண்டு ஒரு கும்பல்…

Read More

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் . பாலஸ்தீனம் ! மனித குலம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே, உலக வரலாறு ஒரு தனிப்பட்ட நாட்டைப் பற்றியும் தனிப்பட்ட இனத்தைப் பற்றியும் தனிப்பட்ட ஒரு நகரைப் பற்றியும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது என்றால் அவை பாலஸ்தீனம், பாலஸ்தீனர்கள் , ஜெருசலம் ஆகியவைகளைப் பற்றியதாகும். இந்த மூன்று காரணிகளையும் ஒதுக்கிவிட்டு உலகசரித்திரத்தின் எந்த காலக்கட்டத்தையும் எவராலும் எழுத இயலாது. எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் மட்டுமல்லாமல் இறைவேதங்களிலும் குறிப்பிடப்படும் சிறப்புக்கள் பெற்றவைதான் நாம் குறிப்பிடும் இந்த நிலமும் இனமும் நன்நகரும். இந்த அடிப்படையில் இவை பற்றி பல்வேறு நூல்களைப் படித்து இருக்கிறோம். உலகப் படத்தைப் பார்த்தால் , அந்தக்கால 501 நிறுவனத்தின் நீண்ட பார் சோப் அளவுக்கு மட்டுமே தென்படுகிற இந்த நிலப் பகுதி, உலக அரசியலின் ஒவ்வொரு நகர்விலும் தனது தாக்கத்தை செலுத்தி இருக்கிறது. யூத , கிருத்தவ, இஸ்லாமிய மார்க்கங்களில் இறைவனின் தூதர்கள் என்று…

Read More

The Royal Islamic Strategic Studies அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய 500 முஸ்லிம் ஆளுமைகளை வரிசைப்படுத்தி வெளியிடுவது வழக்கம். இந்த பட்டியலில் கடந்த 2020 ஆண்டின் சிறந்த முஸ்லிம் பெண்மணியாக 82 வயதான பல்கீஸ் பானு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நன்கு கவனியுங்கள் வயது 82.! நீதி வேண்டி ஆதிக்க சக்திகளை எதிர்த்து நடைப்பெறும் போராட்ட களங்களே வரலாறு முழுவதும் புதிய தலைவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் நடைப்பெற்ற CAA எதிர்ப்பு போராட்டங்களுக்கு வழிக்காட்டியாக அமைந்த டெல்லி ஷாஹின்பாக் போராட்டக்களம் கண்டெடுத்த முதன்மை போராளி தான் பில்கீஸ் பாட்டி என்று அழைக்கப்படும் பில்கீஸ் பானு. உத்தரபிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். தமது இளமையையும் முதுமையின் பெரும்காலத்தையும் சாமானிய மக்களில் ஒருவராகவே கழித்தார். 2019-ம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை தக்கவைத்த பாஜக, தமது தாயகமான RSS-ன் முஸ்லிம் விரோத கனவுத்திட்டங்களை ஒவ்வொன்றாக…

Read More

ஒருவர் கனமான சிமிண்ட் கல்லால் பின்னந்தலையில் பலமாக தாக்குகிறார். தாக்கப்பட்ட அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா என்று கூறிக்கொண்டே 12 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை செருப்புக் காலால் எட்டி உதைக்கின்றனர். நெஞ்சில் ஏறி மிதிக்கின்றனர். வயிற்றில் கற்களால் அடித்து காயப்படுத்துகின்றனர். தரதரவென்று இழுத்துச் சென்று மார்பில் கத்தியால் குத்துகின்றனர். வயிற்றிலும் கத்தி குத்து. அந்த இளைஞர் பரிதாபமாக ரத்தம் கசிந்து இறந்து போகிறார். இந்த சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் நடக்கின்றது. கொல்லப்பட்ட இடம் கரூர், கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோவில் எதிரில். கோவிலுக்கும் காவல்நிலையத்திற்கும் இடையில் உயிர்போகும் நிலையில் துடிதுடித்து கிடந்தார் 23 வயது ஹரிஹரன். கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோவிலை கருமாதி தளமாக மாற்றியிருக்கின்றனர் சாதி வெறி பிடித்த கும்பல். ஹரிஹரன் ஏன் கொல்லப்பட வேண்டும்? எவிடன்ஸ் குழுவினர் களஆய்வில் ஈடுபட்டனர். கரூர்,…

Read More

மலையாளப் புனைவிலக்கிய உலகின் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைகம் முகம்மது பஷீர் எழுதிய மனதை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சரித்திரமே “மதில்கள்”. பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளார் சுகுமாரன். பஷீரின் தனி அடையாளம் தன்னுடைய வாழ்க்கையையே இலக்கியத்துக்கான மூலப் பொருளாகவும் படைப்பாகவும் கருதி செயல் பட்டார் என்பது தான். தனக்கு சொந்தமல்லாத ஓர் அனுபவத்தையோ ஒரு வரியையோ அவர் எழுதவில்லை. இலக்கியத்தின் இந்த எளிய அடிப்படை தான் பஷீரை இவ்வளவு காலத்துக்குப் பின்னர் வாசக அங்கீகாரமுள்ள எழுத்தாளராக நிலை நிறுத்தி இருக்கிறது எனலாம். “நானே பூங்காவனமும் பூவும்” என்று மதில்கள் நாவலின் மையப்பாத்திரத்தின் கூற்றாக ஒரு வாக்கியம் இடம் பெறுகிறது. பஷீரின் படைப்புலகின் அடித்தளம் இது தான். தனிமைச் சிறையில் தவிக்கும் பஷீருக்கு நாரயணியின் குரல் கொடுக்கும் நெருக்கம் சிறை வாழ்க்கையில் ஆறுதல் தருகின்றது. அவளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவிருக்கும்…

Read More

திங்கட்கிழமை 4.1.21 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி. “மூன்று சட்டங்களின் ஒவ்வொரு பிரிவையும் எடுத்துக்கொண்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்” என்று கேட்டிருக்கிறது மோடி அரசு. “சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எதையும் நாங்கள் பேசத்தயாரில்லை” என்று பதிலளித்து விட்டனர் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள். “கானூன் வாப்ஸி நஹி தோ, கர் வாப்ஸி நஹி” சட்டத்தை திரும்ப் பெறவில்லை என்றால் வீடு திரும்புவதும் இல்லை என்று மோடி அரசின் முகத்தில் அடித்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒவ்வொரு 16 மணி நேரமும் திக்ரி – சிங்கு எல்லையில் ஒரு விவசாயி இறந்து கொண்டிருக்கிறார். இதுவரை 60 பேர் இறந்திருக்கின்றனர். குளிர், மழை… எனினும் அவர்கள் பணிய மறுத்து எதிர்த்து நிற்கிறார்கள். 6 ஆம் தேதி டிராக்டர் பேரணி. குடியரசு தினத்தன்று தில்லி நோக்கி டிராக்டர் பேரணி. 6 முதல் 26 வரை நாடு முழுவதும் விவசாயிகள் பேரணிகள் என்று போராட்டங்களை அறிவித்திருக்கின்றனர். இந்திய வரலாறு…

Read More

அமித் ஷாவின் `சாவர்க்கர் பாசம்’ அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர். ஆக, விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது யாருக்காக என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது அதிஅவசியமாகிறது. இல்லையென்றால், நாளைக்கு ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் சாவர்க்கர் சிரிப்பதை, வரும் தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க நேரிடும். அமித் ஷா வேறு…

Read More

பாபர் மசூதி என்பது ஒரு வழிபாட்டுத்தலம் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தீர்கள் இல்லை அது யாருடைய கையிலோ இருந்த மதுக்கிண்ணம் தற்செயலாக கைதவறி கீழேவிழுந்து உடைந்து விட்டது பாபர் மசூதி என்பது உறுதியான ஒரு பழங்கால கட்டிடம் என்று இதுவரை சொல்லப்பட்டது இல்லை அது யாரோ கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல் அது யார் கையிலோ உணர்ச்சிவசத்தால் மோதி சிதறி விட்டது இருபத்தெட்டு ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப்பின் இந்த உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன வழங்கும் நீதிகளில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது ஒரு கட்டுக்கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் எந்தக்குழப்பமும் இல்லாமல் தெளிவாக எழுதப்படுகிறது எதுவும் திட்டமிடப்படவில்லை எல்லாமே தற்செயலாக நடக்கின்றன குழந்தைகள் கட்டிய மணல்வீடு ஒரு காற்றில் கலைவதுபோல பாபர் மசூதி கலைந்து விட்டது அந்த ஸ்தூபியின் மீது ஏறி நிற்பவர்கள் யார்? அது ஒரு க்ராஃபிக்ஸ் காட்சியாக இருக்கக்கூடும் கேமிராக்கள் முன் ’இதற்காக பெருமைப்படுகிறோம்’ என முழங்கியவர்கள் யார்? அது ஒரு திரைப்படக் காட்சியே…

Read More

அன்பு நிறைந்த நண்பர்களுக்கு, வணக்கம்! நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக்க நாள் முதல், இன்று வரையிலும் நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்துக்கும் மேலான கூட்டு உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தனித்துவம் மிகுந்த தொலைக்காட்சியாக, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் நம்பிக்கைக்குரிய ஊடக நிறுவனமாக இன்று பரிணமித்திருக்கிறோம். இதில் உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்பும் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது. ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு சிறிய அறையிலும், ஹைதராபாதில் சில ஊழியர்களுமாக நாம் பணியாற்றிக் கொண்டிருந்த நாளில், என் மதிப்புக்குரிய நண்பர் வினவியது என் நினைவுக்கு வருகிறது. “தமிழகத்தில் ஏற்கெனவே இத்தனை தொலைக்காட்சிகள் இருக்கின்றனவே, இன்னொரு தொலைக்காட்சிக்குத் தேவையும் இடமும் இருக்கிறதா?” என்பதுதான் அவரது வினா. அக்கறையும் கவலையும் ஒருசேர அதில் வெளிப்பட்டன. அடுத்த சில வாரங்களிலேயே, ஒரு காணொளியைப் பகிர்ந்து பாராட்டுச் செய்தியும் அனுப்பி இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தின் இறுதி நாளில், காவலர் ஒருவரே ஆட்டோவுக்கு…

Read More

இது News18 எனும் ஒரு சேனலோடு சுருக்கி பார்க்கவேண்டிய விசயமல்ல. 2014 முதலே இந்த நெருக்கடியை எல்லா ஊடகங்களும் சந்திக்கிறது. பாராளுமன்ற தேர்தலின்போது ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதுபோல் தமிழக தேர்தலுக்கான நெருக்கடியை இப்போதே தருவதாக உணர்கிறேன். இது என்னோடு முடிந்துவிடும் பிரச்சினை அல்ல. எனக்கு பிறகும் சில முக்கியமானவர்களை ஊடகத்துறையில் இருந்து விரட்ட முழு முனைப்போடு செயல்படுகிறார்கள். எனக்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் தொடர்பு உள்ளது என கூறுபவர்கள் ஒரே ஒரு ஆதாரத்தை கொடுத்தால் நான் ஊடகத்தை விட்டும், சங்கத்தை விட்டும் சென்றுவிடுகிறேன் என சவால் விட்டும் இதுவரை ஒருவர்கூட அதற்கு ஆதாரம் தரவில்லை. என் பக்கம்தான் நியாயம் உள்ளது என பாஜகவை சார்ந்த அனைவருக்கும் தெரியும். நாராயணன், ராம சுப்ரமணியன் ஆகிய இருவர்களை தவிர வேறு யாரும் எனக்கு ஆதரவு தரவில்லை. எச்.ராஜாவிடம் நேரடியாக போனில் பேசியும் அவர் என்ன நோக்கத்தில் என்னை குறித்து ட்வீட் செய்தார் என தெரியவில்லை. சென்னை…

Read More