பள்ளிக் கல்விக்கு அரசே பொறுப்பு: அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் அடிப்படைத் தேவையான ‘அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு’ என்ற கோரிக்கையில் இருந்து விலகியே நிற்கின்றன. அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகளை இதுவரையிலான அரசுகள் உருவாக்காமல், சமூகத்தில் உள்ள பாகுபாட்டையும் ஏற்றத்தாழ்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் பள்ளிக் கல்வியை வைத்துள்ளன. மாதிரிப் பள்ளி, பள்ளி வளாகம், சிறப்புப் பள்ளிகள் என்று பல அடுக்குக் கல்வி முறையை அரசு ஊக்குவிக்கிறது. இந்த சமத்துவமின்மையைக் களைந்து, பள்ளிக் கல்வியை மேலும் சிறப்பாக வளர்த்தெடுக்கத் தொலைநோக்குத் திட்டங்கள் தேவை. சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்க அரசு தன் பொறுப்பிலும் செலவிலும் கட்டணமில்லாக் கல்வியை முன்பருவக் கல்வி தொடங்கி மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை அருகமைப் பள்ளி அமைப்பில் பொதுப் பள்ளி முறைமை மூலம் வழங்கிட வேண்டும். பள்ளிகள் படிப்பதற்கே… தொழில் பழகுவதற்கு அல்ல: ஒரு குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அல்லது கல்வியியல்…
Author: Admin
இன்றைய உலகை பெரும்பாலும் ஆளும் வலதுசாரி ஆட்சியாளர்களின் முதல் சுரண்டல் இயற்கையிலிருந்தே தொடங்குகிறது. டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி நரேந்திர மோடி வரை அவர்கள் மக்களுக்கு மட்டும் விரோதிகளாக இல்லை. ஒட்டுமொத்த பூவுலகிற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு உலகின் பெரிய வனமான அமேசான் பற்றியெரிந்தபோது பிரேசிலின் ஜேர் போல்சனேரோ அசட்டை செய்யவில்லை. ஆஸ்திரேலிய காட்டுத்தீ உலகையே பதறடித்தபோது அதன் அதிபர் ஸ்காட் மாரிசன் மட்டும் மௌனம் காத்தார். மேலும், கடந்த ஆண்டு மூன்றில் இரண்டு பங்கு இயற்கை பேரழிவுகளைக் கண்ட நாடு அமெரிக்கா. அதைப்பற்றிச் சிறு கவலையும் அடையாமல்தான் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தைதை எதிர்த்தார் டொனால்ட் ட்ரம்ப். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் சூழலியல் குறித்தான விவாதம் முக்கிய பேசுபொருளானது. இந்தியாவைப் பொறுத்தவரை அது உலக நாடுகளின் குப்பைத் தொட்டியாகத்தான் இயங்கி வருகிறது. சூழலியல் கழிவுகளை உற்பத்தி செய்வதிலும், வளங்களைப் பங்கிட்டுக் கொள்வதிலும் பன்னாட்டு, முதன்மையாக உள்நாட்டு முதலாளிகளின் வேட்டைகளமாக…
கொரோனா வைரஸ் தொற்று இதுவரை இல்லாத கல்வி அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது, 9.7 மில்லியன் குழந்தைகள் வரை பள்ளி மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் மீண்டும் வகுப்புக்குச் செல்ல மாட்டார்கள் என்ற ஆபத்தில் உள்ளனர் என்று தி சேவ் தி சில்ட்ரன் அமைப்பு எச்சரித்து உள்ளது. பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் யுனெஸ்கோவின் தரவை மேற்கோள் காட்டி, ஏப்ரல் மாதத்தில், 1.6 பில்லியன் இளைஞர்கள் பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர், இது COVID-19 ஐக் கொண்டிருப்பதற்கான நடவடிக்கைகளின் காரணமாக உலகின் மொத்த மாணவர் தொகையில் 90 சதவிகிதம் என குறிப்பிட்டுள்ளார். “மனித வரலாற்றில் முதல்முறையாக, உலகளவில் ஒரு தலைமுறை குழந்தைகள் தங்கள் கல்வியை சீர்குலைத்துள்ளனர்” என்று எங்கள் கல்வியைச் சேமிக்கவும். என்ற ஒரு அறிககையில் கூறியுள்ளது, நெருக்கடியின் பொருளாதார வீழ்ச்சி 90 முதல் 117 மில்லியன் குழந்தைகளை வறுமையில் தள்ளக்கூடும் என்றும், பள்ளி சேர்க்கைகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது கூறியது. பல இளைஞர்கள்…
இஸ்லாமியர்கள் என்றாலே காவல்துறையும், உளவுத்துறையும், நீதிமன்றங்களும், சிறைத்துறையும், அரசு நிறுவனங்களும் எதிர்மறை சிந்தனையோடு பிரச்சினையை அணுகுகின்றன. இதனை பொதுமக்களுக்கு விளக்க வேண்டிய ஊடகங்களும் பாராமுகமாக இருக்கின்றன.போதாக்குறைக்கு சினிமாக்கள் வேறு படுமோசமாக சித்தரிக்கின்றன..! ஆனால், அனைத்து மக்களுக்குமான பொது நீதி என்ற மனிதநேய அணுகுமுறையோடு நாம் இஸ்லாமிய சிறைவாசிகளின் நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழக அரசு 10 ஆண்டுகள் தண்டனை கழித்திட்ட ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பில் முன்விடுதலை செய்ய விதித்த தகுதிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் தங்களுக்கும் இருப்பதால் தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி சுமார் 12 முஸ்லீம் சிறைவாசிகள் ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்கள். இவர்களின் மனுக்களை பரிசீலனை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இவர்களை விடுதலை செய்யவில்லை. விடுதலை மறுப்பிற்கான நியாயமான காரணம் சொல்லப்படவில்லை. “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது.…
கொரோனா தொற்றுக் கால விடுதிக்கட்டண நீக்கம் வேண்டி, தங்களுடையத் தேவைகளுக்காகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தனிப்பட்ட காழ்புணர்ச்சியால் அவர்களின் தேர்வு மதிப்பெண்ணில் பாரபட்சமாக நடந்துகொண்டதோடு, விளக்கம் கேட்கச் சென்ற மாணவர்களிடம் தரக்குறைவாகப் பேசியும், கல்லூரி மாணவியைப் பாலியல் ரீதியாக தாக்கிய சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத் தலைவர் திரு. சௌந்தரராஜன் மீது பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பேராசிரியரின் தவறான நடவடிக்கையைக் கண்டித்து 4 நாட்களாக துறை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் 21/03/2021 பேராசிரியரால் தாக்கப்பட்ட மாணவி மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்ற செய்தி அதிர்ச்சியை அளித்தது. செய்தி அறிந்தவுடன் SIO—வின் மாநில நிர்வாகிகள் கல்லூரி மாணவர்களையும், பாதிக்கப்பட்ட மாணவியையும் மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து பேசினார்கள். அதனடிப்படையில் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதங்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர் போராட்டத்திற்கு SIO முழு ஆதரவையும் கொடுக்கும்.. இவ்விவகாரத்தில்,…
புதுதில்லி: பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படவரிடமே ‘அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளமுடியுமா’ என்று கேட்டதற்காக இந்திய தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும் என நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு குழுக்கள், அக்கறையுள்ள குடிமக்கள் அடங்கிய குழு வெளிப்படையான பகிரங்கக் கடிதம் ஒன்றை தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளது. அந்த பகிரங்கக் கடிதத்தில் ஆனி ராஜா, மரியம் தாவ்லே, கவிதா கிருஷ்ணன், கம்லா பாசின், மீரா சங்கமித்ரா, அருந்ததி துரு போன்றபிரபலமான பெண்கள் உரிமை ஆர்வலர்களும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கம், இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு, சஹேலி, பாலியல் வன்முறை மற்றும் அரசு அடக்குமுறைக்கு எதிரான பெண்கள், திட்ஸ் (THITS), பெண்கள் அடக்குமுறைக்கு எதிரான மன்றம், பெபாக் கலெக்டிவ், பாரதிய முஸ்லீம் மஹிளா அந்தோலன், தலித் விமென்ஸ் ஃபைட், பசோ (BASO), பெண்கள் மற்றும்…
கலையின் தோற்றம் மக்களின் கூட்டுப் பங்களிப்பால் உருவம் பெற்றது. அது அவர்களின் வாழ்வின் ஓர் அங்கமாக மாறியது. மனிதனின் அறிதல் திறனின் வளர்ச்சி அறிவியலானது போல், உணர்ச்சித் திறனின் வளர்ச்சி கலையாகியது. ஆதலால், இரண்டும் அதனளவில் மக்களுக்காகச் செயல்படுவதே அடிப்படை இயக்கம். இன்று, சில முற்போக்கு இயக்குநர்கள் அல்லது எழுத்தாளர்களே, ‘என் படைப்பைக் குறிப்பிட்டவர்களுக்குத்தான் எடுத்தேன். அவர்களிடம் அது சென்றடைந்தால் போதுமானது. அந்த சிலர் அதனை அறிந்து என்னைப் பாராட்டினாலே எனக்கு போதும்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். தமிழில் மிஷ்கின் முதல் விசாரணை பட வேளையில் வெற்றிமாறன் வரை இதைச் சொல்லியிருக்கிறார்கள். அறிவியலை எப்படி அனைவருக்குமானதாக விளிம்புநிலை மக்கள் வரை கொண்டு சேர்ப்பது அவசியமோ, அந்தளவிற்குக் கலையையும் சேர்ப்பது தேவை. மக்களிடமிருந்து உருவாகிய கலை அதைத் தவறும்பட்சத்தில் தனது உள்ளார்ந்த அர்த்தத்தை இழக்கிறது. அதனை உருவாக்கியவனும் கலைஞன் என்ற சமூகப் பொறுப்பிலிருந்து விலகிக் குறிப்பிட்ட வணிக தேவையை நிறைவு செய்பவனாகிறான். எஸ்.பி.…
இந்தியாவில் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூடான விஷயம். ஆண்டாண்டு காலமாக எல்லாவற்றையும் அடக்கி ஆண்டு கொண்டிருந்தவர்களின் பயணத்தில் தடைக்கல்லாகவும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் படிக்கல்லாகவும் மாறிய ஒன்று. எப்படியாவது இந்த இடஒதிக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் சில கும்பல்கள் ஓயாது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது உச்சநீதிமன்றத்தில் இட ஒதிக்கீடு 50% மிகாமல் இருக்க வேண்டும் என்பதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் இட ஒதிக்கீட்டைக் குறித்த தெளிவான புரிதல் இல்லாமலும் அதை பாதுகாக்க வேண்டிய தேவையை உணராமலும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இடஒதுக்கீடு சாதிய, சமூக பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டது பொருளாதார மற்றும் கல்வி அடிப்படையில் அல்ல. பல நூற்றாண்டுகளாக சாதிய, சமூக பாகுபாடுகளால் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் தேசிய வளங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தங்களின் சரியான பங்கைப் பெற முடியாத நிலைமைதான் இருந்தது. சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வியில் உரிய உரிமைகள்…
இந்து தேசியவாதம் பொதுவாக ஒரு பிராந்திய-மதவாத இயக்கமாக வரையறுக்கப்படுகிறது. ஆனால், அவை சமூக காரணிகளுடன் இணைந்த அடையாள அரசியலை முன்னெடுக்கலாம். போலவே, அவர்கள் வளர்ச்சியின் இறுதிக்கட்டமாக மண்டலுக்கு முதன்மையாக எதிர்வினையாற்றியதாக இருந்துள்ளது. அப்போதைய பிரதமர் விபி சிங் மண்டல் அறிக்கையைச் செயல்படுத்துவோம் என்று அறிவிக்கையில், ‘எதிர்பார்த்தபடி சூத்திரர்களின் புரட்சியால் அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் தேசத்திற்கான நீதி மற்றும் ஆன்மீகப் படையை உடனடியாக நிர்மாணிக்க வேண்டிய தேவை உள்ளது’ என்று எழுதியது ஆர்எஸ்எஸ் இதழான ஆர்கனைசர். மண்டல் இரண்டாம் கட்டமாக நிறைவேறயில், ‘காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணி மத்தியில் தகுதிக்கான மெரிட் அரணையே தகர்க்கிறது’ என்று கூறியது அதே இதழ். 2004 மற்றும் 2009ல் பாஜக தொடர்ந்து தோல்வியுற்ற பிறகு, அதிகாரத்திற்கு வர மற்றும் இந்து தேசியவாத கொள்கை மற்றும் அதன் நலனிற்கும் எதிராக உள்ள செயல்பாடுகளைத் தடுக்க உடனடி திட்டங்களை வகுக்க வேண்டியிருந்தது. தேசியவாத பாப்புலிச பிராண்டை நரேந்திர மோடி…
மாலிக்பத்ரி, இவர் பிராய்ட் மற்றும் ஸ்கின்னர் போன்ற உளவியாளர்களின் கோட்பாடுகளை விமர்சித்தல் மற்றும் அதனை மதிப்பிடும் சவாலை ஏற்றுக்கொண்டு,, அவற்றை மதிப்பீடுசெய்து இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவர்களுடன் ஈடுபடுவதற்கான ஒரு சீரான வழியை வழங்கினார் அறிவு மற்றும் அறிவு உருவாக்கம் ஆகியவற்றின் இஸ்லாமிய மயமாக்கல் இயக்கத்தில் ஒரு உயர்ந்த நபரின் மறைவைக் கேட்பது மிகவும் மனதை கலக்கமடையச் செய்கிறது, உளவியல் துறையில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஒரு மிகப்பெரிய ஆளுமை பேராசிரியர் மாலிக்பத்ரி. இவர் ஒரு புகழ்பெற்ற உளவியலாளர் ஆவார். இவர் பல உளவியலாளர்களை குறிப்பாக முஸ்லீம் உளவியலாளர்களுக்கு அறிவூட்டியுள்ளார். நவீன உளவியல் பிராய்ட் மற்றும் ஸ்கின்னரின் கோட்பாடுகளை கண்மூடித்தனமாகப் பின் பற்றியபோது, முஸ்லீம் உளவியலாளரும் இதற்கு விதிவிலக்கல்ல, இதற்கு இவர் ஆதிக்கம் செலுத்தும் போக்குகளை விமர்சிக்கவும், அவற்றை மதிப்பீடு செய்யவும், ஈடுபாடு மற்றும் பணிநீக்கம் செய்வதற்கான சமநிலை வழியை வழங்கும் முயற்சிகளை தன் கடமையாக ஏற்றுக்கொண்டார். இஸ்லாமிய உலவியலின் கவனத்தை ஈர்த்து, ஆரம்ப…
