Author: Admin

இந்த மௌனம் கொல்கிறது நண்பர்களே! உங்கள் மௌனம் என்னைக் கொல்கிறது நண்பர்களே! உண்மைதான்! உங்கள் மௌனம் எனது கொலைக்கு ஒப்பானதாய் நான் கருதுகிறேன் நண்பர்களே! முகநூலில், ஐந்தாயிரம் நண்பர்கள். இதில் பின்பற்றாளர்கள் இன்னும் சில ஆயிரம். அப்படியிருந்தும் இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அராஜகம் குறித்து நீங்கள் மௌனமாக இருப்பது என்னை பெருத்த கேள்விகளால் துளைத்தெடுக்கிறது என்பதே உண்மை. எனது பதிவுகளுக்கு நீங்கள் தெரிவிக்கும் விருப்புகள், வெறுப்புகள், அழகிய முறையில் விவாதிக்கும் பின்னூட்டங்கள், எனது ஒளிப்படங்களுக்கான உங்களது புகழுரைகள், விமர்சனங்கள் இவை எல்லாம் போலியானவை என்று உங்கள் மௌனத்தின் பொருளாய் நான் எடுத்து கொள்ளலாமா? இன்னும் ஓரிரு மாதங்களில் பாட்டன், பூட்டன் என்று காலங்காலமாய் வாழ்ந்து வந்த ஒரு சமூகத்தின் அங்கத்தினரான எனது குடியுரிமை சம்பந்தமாக வளர்ந்து நிற்கும் கேள்விக்குறியும், அனுதினமும் நாட்டில் நடக்கும் பதட்டங்களுமாய் கழியும் பொழுதுகள் ஒருவேளை நீங்கள் உள்வாங்காமலிருக்கலாம். ஆனால், நானும் என்னைச் சார்ந்தோரும் இந்த நாட்டின்…

Read More

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் என்பது மட்டுமே அவர் அடையாளம் அன்று. கதீஜாவை அறிந்தவர்கள் எல்லோரும் அறிவர், ஏ.ஆர்.ரஹ்மானைப் போலவே அவரும் எவ்வளவு முக்கியமானதோர் ஆளுமை என்று. கதீஜாவை எனக்கு ஒன்பது ஆண்டுகளாகத் தெரியும். இன்று ‘கருணாமிர்தசாகரம்’, தமிழ் இசை இணையத்தளத்திற்காகச் சேர்ந்து பணியாற்றத்தொடங்கியிருக்கிறோம். யார் யார் கைகளிலேயோ இந்தப் பணியை ஒப்படைத்தும் அது முன் நகரத்தொடங்காமல் கடைசியாக, ஏ.ஆர்.ரஹ்மான், கதீஜாவிடம் ஒப்படைத்த பின்பு தான் இந்தப்பணி வேகமும் உறுதியும் கொண்டது. அந்த அளவிற்கு தனித்த ஆற்றல் கொண்டவர், கதீஜா ரஹ்மான். ‘சிறகு’, திரைப்படப்பணி தொடங்கிய நாள் முதல் எங்களுடன் இருக்கிறார். தொடர்ந்து மிகுந்த அக்கறையுடன் படப்பணிகள் குறித்து விசாரிப்பார், அலுவலகத்திற்கு வருவார், தயாரிப்பாளருடன் உரையாடி நலம் விசாரிப்பார். என்னிடம் மட்டுமன்று, அவர் தொடர்பில் இருக்கும் யாரைக் கேட்டாலும் அவரவர்க்குத் தனித்த சிறப்பான அனுபவங்கள் இருக்கும். அந்த அளவிற்கு இளம் வயதிலேயே முதிர்ந்த பண்பும் நடத்தையும் ஆளுமையும் கொண்டவர். கதீஜா ஒரு கொடை.…

Read More

ஒரே வருடத்தில் இந்த விவகாரம் மீண்டும் சுற்றி வருகிறது. நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் அனைவரும் ஒரு பெண் என்ன ஆடையை அணிய விரும்புகிறாள் என்பதில் கவனம் செலுத்துகின்றனர். வாவ், எனக்கு மிகவும் திகைப்பாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் தலையெடுக்கும்போதும் என்னுள் எரியும் தீ பல்வேறு விஷயங்களைச் சொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது. பல ஆண்டுகளாகப் பார்க்காத என்னுடைய பல்வேறு குணாதிசயங்களைக் கடந்த ஒரு வருடமாக நான் கண்டுகொண்டேன். என்னுடைய வாழ்வின் நான் எடுத்த முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன். என்ன செய்துகொண்டிருப்பதை எண்ணி மகிழ்வாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நன்றி கூறுகிறேன். கடவுளுடைய விருப்பத்தால் என்னுடைய பணிகள் மட்டுமே பேசும். மேற்கொண்டு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கு ஏன் நான் விளக்கமளிக்கிறேன் என்று உங்களில் யாரேனும் நினைத்தால், இங்கே ஒருவர் தனக்காகப் பேசியாக…

Read More

‘போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது’ என்ற கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் அது இன்னொரு கொடுங்கனவின் விழிப்பு ‘ இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரித்துவிட்டது’ என்ற குரலும் கூடவே கேட்டது தேச பக்தர்கள் தங்கள் துருப்பிடித்த ஆணிகளால் சிலேட்டில் எழுதுகிறார்கள் பல் கூசுகிறது எல்லாவற்றையும் தாண்டி வேறொரு குரலும் கேட்டது கருப்பு இரவில் குண்டாந்தடிகள் தலையில் இறங்குகையில் கேட்கும் கூக்குரல் அதையும் மீறி எதிர்ப்பின் இன்னொரு குரல் உரத்துக் கேட்கிறது ‘ அடிபணிவதென்றால் அது அல்லா ஒருவனுக்கே’ அந்தக் குரல் அளவற்ற தன்னம்பிக்கையைத் தருகிறது அது தெருத்தெருவாக பரவுகிறது பிறகு நகரம் நகரமாக பிறகு ஊர் ஊராக காற்றில் ஒரு நெருப்பைபோல இருளில் ஒரு வெளிச்சம் போல சாலைகளில் வாகனங்கள் நிற்கின்றன முடிவற்ற வரிசையில் நீள்கின்றன ‘கலைந்து செல்லுங்கள்’ என காக்கிக்குரல்கள் லவுட் ஸ்பீக்கரில் உத்தரவிடுகின்றன ‘ எங்கே செல்ல வேண்டும் தடுப்பு முகாம்களுக்கா?’ என்று கேட்கிறாள் முகத்திரை அணிந்த ஒருத்தி ‘ பாகிஸ்தானுக்குப் போக…

Read More

முஸ்லிம்கள் சட்டத்தை மதிப்பவர்கள், அதற்குக் கட்டுப்பட்டவர்கள். பின்னர் ஏன் CAA வுக்கு எதிராக போராடுகிறார்கள்?CAA எனப் பொதுவாகச் சொல்வதைவிட CAA2019 எனத் தெளிவாகச் சொல்வோம். ஏனெனில், நாட்டில் மொத்தம் 5 CAA க்கள் இதுவரை வந்துள்ளன. அதில், 2019 ல் இயற்றப்பட்ட தற்போதைய CAA வுக்கு எதிராக மட்டுமே போராடுகிறார்கள். மற்றவைகளுக்கு எதிராக அல்ல. தற்போதைய CAA 2019, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிராக உள்ளது; மனிதாபிமானம், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் முதலானவற்றுக்கும் எதிராக உள்ளது. இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு கவுரவம் உள்ளது. அது, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழனின் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் மனிதாபிமானமிக்க நாடு. இந்தக் கவுரவத்தை இழக்க வைக்கும் விதமாகவும் CAA2019 உள்ளது. எனவேதான் முஸ்லிம்கள் இதற்கு எதிராகப் போராடுகிறார்கள். தம் உயிர், உடைமை, அடையாளம் என எவற்றையும் நாட்டுக்காகவும் நாட்டு ஒற்றுமைக்காகவும் தியாகம் செய்வதற்குத் தயங்காதவர்கள் முஸ்லிம்கள். சுதந்திர வரலாற்றிலிருந்து…

Read More

உங்கள் அரசியல் வெளிப்பாட்டின், சித்தாந்தப் புரிதலின், தாங்கிப்பிடிக்கும் கருத்தாக்கத்தின் மற்றுமொரு பரிமாணம் தான் ‘உள்ளேன் ஐயா’ என்று நீங்கள் ‘ துக்ளக் 50’ விழாவில் ஆஜரானது. எனது சிறு பருவத்தில் ஆதர்சமாக இருந்த ஒரு நடிகர் என் இளமை முடியும் முன்னே அஸ்தமனத்தை நோக்கி நகர்வதைப் பார்க்கும்போது ஒரு சினிமா ரசிகனாய் மனம் வருத்தம்தான் கொள்கிறது. ‘லிங்கா’வில் தொடங்கி ஒரு தொடர் சரிவை நோக்கித்தான் உங்கள் சினிமா பயணம் இருக்கிறது என்ற பிரக்ஞையற்று இருக்கிறீர்களா, ரஜினி..? இடையில் ‘கபாலி’ உங்களைக் காத்தது. காரணம், ரஜினி என்கிற பிம்பம் அல்ல. அது பேசிய அரசியல். உங்களது மேட்டுக்குடித் தனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு பேசிய விளிம்பு மானிடரின் அரசியல். ஆனால், நிஜத்தில் அதைப் புறந்தள்ளிவிட்டு அதிகாரத்தின் குரலாய் மட்டுமே ஒலிக்கிறீர்கள், ரஜினி. நிதர்சனம் என்னவென்றால் அதிகாரத்தின் குரல்கள் எப்போதும் ஓரிடத்தில் இருந்து மட்டுமே ஒலித்து விடாது. தமிழ் மண்ணும்,தமிழ் ரசிகர்களும் ஒரு ஆன்மீகவாதியாய், இந்து மதப்…

Read More

எவ்வவகைப் போராட்டங்களை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் எழுப்பப்படும் முழக்கங்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. குறியீட்டுரீதியில் மட்டும் இல்லை; மிகவும் பொருண்மையான, பருண்மையான பொருளிலேயே முழக்கங்கள் முக்கியமானவை. போராடுபவர்களின் மன உறுதியை, உலகக் கண்ணோட்டத்தை, போராட்டத்தின் திசைநெறியைச் சுட்டுபவை அவை. இன்குலாப் ஜிந்தாபாத், ஆஸாதி, புரட்சி ஓங்குக, ஜெய் பீம், கம்யூனிசமே வெல்லும், தமிழ் வாழ்க எனப் பலவகைக் கோஷங்கள் முன்பும் இப்போதும் எழுப்பப்படுகின்றன. எதிர்மறையில் ஃபாசிசம் ஒழிக, பார்ப்பனியப் பயங்கரவாதம் ஒழிக, இந்துத்துவம் ஒழிக என்றும் முழக்கங்கள் எழுப்பப்படுவதுண்டு. இவை ஒரு வகை. பிறரை இழிவுசெய்யும், ஆதிக்கம் செய்யும் நோக்கில் எழுப்பப்படும் இரண்டாம் வகைக் கோஷங்களும் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணிக் கும்பல்களின் (சொல்ல நாகூசும்) கோஷங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். இதில் ‘அல்லாஹு அக்பர்!’ என்ற முழக்கம் எவ்வகையில் சேரும்? இதை முழங்கும் முஸ்லிம்கள் பொருள்கொள்வது என்ன? முஸ்லிம் அல்லாதோர் பலருக்கு இதுபற்றி பெரும் மயக்கம் நிலவுகிறது. குறைந்தபட்சமாக, ‘இது ஒரு…

Read More

அமெரிக்க-இந்தியர் முஸ்லீம் கவுசின்சில், தன்னார்வ சமுதாய அமைப்பு மற்றும் மனித உரிமை இந்து அமைப்புகள் இணைந்து இந்தியாவில் தற்போதைய நிலையைப் பற்றிய ஆய்வு வெளியீட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அறிஞர்கள், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் உட்படப் பலர் தங்கள் ஆய்வுகளை சமர்ப்பித்தனர். சர்வாதிகாரம், இனப்படுகொலை பற்றிய ஆய்வில் உலகளவில் கவனம் பெற்றவர் டாக்டர். கிரிகோரி. ஹெச். ஸ்டாடண்ட். காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமின் தற்போதைய நிலையைப் பற்றி ஆராய்ந்து அதிகாரிகள் மற்றும் மக்களின் முன் சமர்ப்பித்தார். அதாவது, ‘தற்போது அரசு இனப்படுகொலைகளுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமின் இன்றைய நிலையில் தீவிர கண்காணிப்புள்ளக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த நிலை கூட்டுத் தாக்குதல். அதாவது இனப்படுகொலை’ என எச்சரிக்கிறார் ஸ்டாடண்ட். 1996ம் ஆண்டு அமெரிக்க மாகாண துறையில் பணியாற்றிய ஸ்டாடண்ட் இனப்படுகொலைக்கான 10 படிநிலைகளை வரையறுத்தார். முதல்நிலை ‘நீங்கள்/நாங்கள் என வகுப்பு துவேஷம் பேசுவது,’ இரண்டாவது நிலை ‘அவர்கள் வெளிநாட்டவர்கள் என அந்நியமாக்குவது’,…

Read More

நான் இங்கு இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். 1) நாம் குடியுரிமையை எப்படிப் புரிந்துகொள்வது? 2) குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றைக் குறித்துப் பேசும்போது எந்த மொழியைக் கையாள்வது..? நவீன தேசிய அரசுகள் தோற்றம் பெற்றபோது தான் குடியுரிமை எனும் கருத்தாக்கம் உருவாகியது என்பதை நாம் அறிவோம். இதனை, “திடீரென தேசிய அரசுகள் உருவெடுத்தன. அதன் விளைவாக, மக்கள் ஏதோ ஒரு தேசத்தின் அல்லது நாட்டின் குடிமக்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். இதற்குப் பிறகு எந்த நாட்டுடனும் அடையாளப்படாதவர்கள் நாடற்றவர்கள் ஆகிவிட்டார்கள்” என ஹன்னா அரென்ட்ட் குறிப்பிடுகிறார். இந்த நாடற்றவர்களின் நிலை என்ன? குடியுரிமை தான் மனிதர்களின் அடையாளம். ஆனால், அது மறுக்கப்பட்டவர்கள் எந்த உரிமையும், அடையாளமும், அடிப்படைகளையும் இழந்த மனிதர்களாகிறார்கள். இவர்களுக்கு வாக்குரிமை, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை என எதுவும் இருக்காது. இவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்? இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் கேரளாவிலிருந்து ஒரு சில…

Read More

ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க அனுமதி மறுத்தேன்!!ஐ ஐ டி….. இந்தியப் பெற்றோர்களின் பெருங்கனவு!! என் பெரியவனையும் இந்தக் கனவோடுதான் வளர்த்தேன். ஐஐடியில் படிப்பு, அரசு வேலை, இந்தியாவுக்கு சேவை என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தேன். அவனும் அதிலேயே மனம் கொண்டான்.ஆனால், சரியாக அவன் கல்லூரி சேரும் சமயத்தில் இந்தியாவில் பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்தது. வருமுன்பே வெறுப்பை வேரடி வரைப் பரப்பியிருந்தார்கள் என்பதால், மிகுந்த தடுமாற்றம் அவனை இந்தியாவில் சேர்ப்பதா வேண்டாமா என்று. இப்போது ஃபாத்திமாவின் தாயாருக்கு இருக்கும் அதே பயம் எனக்கும் – அன்றும் இன்றும்!! அவனுக்கு ஐஐடி கிடைக்கவில்லை என்பது அப்போது ஏமாற்றமாக இருந்தாலும், பின்னர் நடந்தவற்றால், நல்லவேளை கிடைக்கலை என்றே தோன்றியது. முதுகலை படிக்க ஐஐடி போகலாம் என்று நினைப்பவனை நாங்களே இப்போது வேண்டாமென்கிறோம்!! JEE தேர்வில்,…

Read More