என் நண்பர்களிடம கூறுங்கள், அவர்கள் என்னை பார்க்கும்பொழுது, என் பிணத்தை பார்க்கும்பொழுது
எனக்காக அழுது துக்கம் கொள்ளும்பொழுது
“நீங்கள் காணும் இந்த பிணம் நான் தான் என்று எண்ணி விடாதீர்கள்
இறைவனின் பெயரால், நிச்சயம் நான் கூறுகிறேன், அது நான் அல்ல
நானோ ஒரு ஆன்மா, இதுவோ வெறும் சதை மட்டுமே
அது எனக்கு குறுகிய காலத்திற்கு ஒரு தங்கும் இடமாகவும் ஆடையாகவும் இருந்தது
நான் ஒரு பொக்கிஷம், தாயத்துக்குள் மறைத்து வைக்க பட்டிருந்தேன்
மண்ணால் படைக்க பட்டது அது, எனக்கு ஒரு சன்னதி ஆக இருந்தது
நானோ ஒரு முத்து, அதன் சிப்பியையோ விட்டுவிட்டது
நானோ ஒரு பறவை, இந்த உடலோ எனது கூண்டாக இருந்தது
இப்பொழுது நான் பறந்து செல்கிறேன், அதை ஓரடயாளம் ஆக விட்டுவிட்டு
எல்லா புகழும் இறைவனுக்கே, அவனே இன்று என்னை விடுதலை செய்தான்
அவனோ எனக்காக வானங்களில் என்னுடைய ஒரு உயர்ந்த இடத்தை தயார் செய்தவன்
இன்றுவரை நான் மரித்திருந்தேன், உங்கள் இடையிலோ உயிருடனும்
உண்மையில் இப்பொழுது நான் உயிரோடுள்ளேன், மண்ணரையில் – ஆடையை நிராகரித்து
இன்று நான் வானங்களில் உள்ள புண்ணியர்களோடு உரையாடுகிறேன்
எவ்வித திரையும் இன்றி, இன்று நான் என் இறைவனின் முகத்தை காண்கிறேன்
தென்படுகிறது எனக்கு அந்த உயர்தர ஏடு, அதை நான் வாசிக்கிறேன்
என்னவெல்லாம் நடந்ததோ, நடக்கிறதோ, நடக்க போவதோ
உடைந்து வீழட்டும் என் வீடு, எனது கூண்டை வைத்திடுங்கள் பூமியில்
தாயத்தை தூக்கி எரிந்து விடுங்கள், இதற்கு மேல் அது ஒரு அடையாளம் அன்று
என் ஆடையை ஒதுக்கி விடுங்கள், அது என் வெளிப்புற ஆடையாக மட்டுமே இருந்தது
அவை அனைத்தையும் வைத்திடுங்கள் மண்ணரையில், அவைகள் மறக்கப்படட்டும்
நான் என் வழியில் சென்றுவிட்டேன், நீங்களோ பின்னால் விடப்பட்டிருக்கிறீர்கள்
நீங்கள் தங்கும் இடம், எனக்கு தங்குவதற்கு ஏற்றது இல்லை
மரணத்தை முடிவு என எண்ணாதீர்கள், இல்லை அதுதான் வாழ்வு
இங்கு காணும் கனவுகளை எல்லாம் மிஞ்சும் வாழ்க்கை
இவ்வுலகில் இருக்கும் பொழுது, நமக்கு வழங்க பட்டது உறக்கம்
மரணமும் ஒரு உறக்கமே, நெடுநீண்ட ஒரு உறக்கம்
மரணம் நெருங்கும் பொழுது அஞ்சாதீர்கள்
அது இந்த கொடை நிறைந்த வீட்டிற்கான புறப்பாடே
உங்கள் இறைவனின் கருணையும் அன்பையும் எண்ணுங்கள்
அவனின் கிருபையை எண்ணி நன்றி செலுத்துங்கள், வாருங்கள் அச்சமின்றி.
என் நிலை என்னவோ, உங்கள் நிலையும் அதுவாக தான் இருக்கும்
ஏன் என்றால் நீங்களும் என்னை போன்றவர் தாம்
ஒவ்வொரு மனிதரின் ஆன்மாவும் இறைவன் இடம் இருந்தே வந்தது
உடல் அனைத்தும் ஒரே போன்று வடிவமைக்க பட்டு உள்ளது
நன்மையோ தீமையோ, அவை இரண்டும் நம்முடயதே
இப்பொழுது உங்களுக்கு நான் ஒரு நற்செய்தி கூறுகிறேன்
இறைவனின் சாந்தியும் திருப்தியும் என்றும் உங்கள் மீது இருக்கட்டும்.”
-இமாம் கஸாலி
தமிழில்- ஃபாயிஸ்