தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாக்களிலும் கூட இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் நிலவி வருகின்றது என்று சொன்னவர்கள் எல்லாம் சீதாராமம் திரைபடத்தை காவியம் என்று புகழ்ந்து தள்ளியபோது சீதாராமம் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பார்க்கத் தொடங்கினோம். அவர்கள் சொன்ன அந்த அழுகிய காவியம் எப்படி இருக்கின்றது என்று பார்ப்பதற்கு. இதன் கதைக்களம் 1960களில் நகர்கிறது. கதைக்களம் எந்த காலத்தில் நடந்தாலும் கதையின் ஆரம்ப 32 நிமிடங்களிலேயே தெரிந்து விடுகிறது இத்திரைப்படம் காஷ்மீர் பைல்ஸின் இரண்டாம் பாகமாக தான் இருக்கப் போகின்றது என்று… கதையில் மேற்குறிப்பிட்ட அந்த 32 நிமிடங்கள் கடந்ததுமே முகமதியர்கள் போய்விடுகிறார்கள்… அடுத்ததாக காண்பிக்கப்படும் அத்தியாயம் காதல் சார்ந்ததாக இருக்கப் போகிறது என எண்ணிக்கொண்டு நாமும் பார்க்கத் துவங்குவோம் அதன் பின்பு ச்சே என்ன Bro… இப்படி ஒரு காதலா… பிரமாதம்… வெங்காயம்.. என்று பேசவும் தொடங்கி விடுகின்றார்கள் இங்கு தான் பிரச்சனையே பத்தில் எட்டு…
Author: எஸ். ஹபிபுர் ரஹ்மான்
உலகின் மிகவும் பயங்கரமான இனப்படுகொலையின் உயிருள்ள சாட்சியாக இருப்பவர் பில்கீஸ் பானு. அவருடைய குடும்பத்தினர் 14 நபர்களும் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். அவரது மூன்று வயது மகளின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்தனர் ஃபாசிஸ பயங்கரவாதிகள். பில்கீஸ் பானு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அப்போது அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். இறுதியாக இந்துத்துவவாதிகள் அங்கிருந்து வெளியேறும்போது பில்கீஸ் பானு இறந்திருப்பார் என்று கருதியிருக்கக்கூடும். ஆனால், தனக்கு இழைக்கப்பட்ட கொடிய அநீதிக்கு எதிராகக் கேள்வி எழுப்ப அவர் உயிரோடுதான் இருந்தார். அவருக்கு நடந்த அநீதிக்கு எதிராக 17 வருடங்கள் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தார் வீர மங்கை பில்கீஸ். அந்தச் சட்டப்போராட்டத்தில் அவர் சந்தித்த அச்சுறுத்தல்களும், அழுத்தங்களும், தடைகளும், தலையீடுகளும் அவரை நிராசையில் ஆழ்த்தவில்லை. இறுதியாக உச்ச நீதிமன்றம் அவருக்கு இழப்பீடாக 50 இலட்சம் ரூபாய், தங்க இடம், ஒரு வேலை ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் உச்ச…
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோர் மாவட்டத்திலுள்ள ஒன்பது வயது தலித் சிறுவன் இந்திரா மேக்வால் குடிநீர் பானையை தொட்டதற்காக உயர்சாதியைச் சார்ந்த ஆசிரியர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட இச்சிறுவன் ஜலோர் மாவட்டத்தின் சுரானா கிராமத்திலுள்ள தனியார் பள்ளியின் மாணவன், ஜூலை 20 அன்று தாக்கப்பட்ட இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் காயங்களின் காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தார். ஆசிரியர் சைல் சிங் (40) கொலை, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் தந்தை பீடியை செய்தி நிறுவனத்திடம் தன்னுடைய மகனின் முகம் மற்றும் காதுகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும் மேலும் கிட்டத்தட்ட அவன் சுயநினைவையே இழந்துவிட்டதாகவும் கூறினார். முதலில் இந்தச் சிறுவன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிறகு அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஒரே போரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். “ஒரு வாரமாக அவன்…
முஸ்லிம் நபரின் மீது ‘லவ் ஜிஹாத்’ குற்றம் சுமத்துவதற்காக வேண்டியே தான் ‘பணியமர்த்தப்பட்டதாக’ ஒரு பெண் கூறியதை அடுத்து பிஜேபி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரபிரதேசத்தின் காஸ்கஞ் பகுதியில் ஒரு முஸ்லிம் நபரை லவ் ஜிஹாத் மற்றும் பலாத்கார வழக்கில் சிக்க வைப்பதற்காக தான் வேலைக்கு பணியமர்த்தப்பட்டதாக டெல்லி சார்ந்த பெண் குற்றம் சாட்டியதை அடுத்து பிஜேபி தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமன் சௌகன் மற்றும் ஆகாஷ் சேலங்கி ஆகிய இருவரும் தற்போது இடைக்கால ஜாமீனில் வெளியே உள்ளனர். குற்றவாளிகளில் ஒருவரான சவ்கான் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் மாவட்ட துணைத் தலைவர் ஆவார். அந்தப் பெண் 24 வயதான ராதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ராதா முன்னர் பிரின்ஸ் குரேசி எனும் முஸ்லிம் நபர் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தன்னை ஒரு…
0.012 சதவிகிதத்தைச் சார்ந்த 607 சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். வெங்கடேஷ் நாயக் எனும் காமன்வெல் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் 75 நகரங்களில் உள்ள பெரும் 0.01 சதவீத சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த சாலையோர வியாபாரிகள் மட்டுமே மத்திய அரசின் “PM Street Vendors Atmanirbhar Nidhi (PM SVANidhi)” பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான சுயசார்பு இந்தியா நிதி திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஜூன் 2020 முதல் மே 2022 வரை பயனடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணை கடனுக்காக நாடு முழுவதிலிருந்தும் மொத்தம் 48.70 லட்சம் (4.87 மில்லியன்) விண்ணப்பங்கள் வந்துள்ளது என (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்) MoHUA இன் மத்திய பொதுத் தகவல் அதிகாரி (CPIO) வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன. சொற்ப எண்ணிக்கையிலான 0.012…
கர்நாடகாவில் உள்ள பெல்லேர் பகுதியில் இந்துத்துவ தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள்ளின் உறுப்பினர்கள் தாக்கியதில் காயமடைந்த 18 வயது முஸ்லிம் இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட இளைஞரின் பெயர் மசூத். கலிஞ்ஜா கிராமத்திலுள்ள விஷ்ணு நகரா பகுதியில் கடந்த ஜூலை 19 அன்று இரவு 8 இந்து தேசியவாதிகள் அடங்கிய குழு மசூதை தாக்கியுள்ளனர். இந்த முஸ்லிம் வாலிபர் கேரளாவின் காசர்கோட் பகுதியில் உள்ள மொக்ரல் புதூரை சேர்ந்தவர். சோடா பாட்டில் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த அவர் மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றவாளிகளான சுனில், சுதிர், சிவா, சதாசிவ், ரஞ்சித், அபிலாஷ், ஜிம் ரஞ்சித் மற்றும் பாஸ்கர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு கலைஞர் பகுதியில் உள்ள தன்னுடைய தாத்தா வீட்டிற்கு சென்ற மசூர் அங்கே தினக் கூலியாக வேலை பார்த்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மசூத் ஒரு தனியார் விழாவில் கலந்து…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்கள் அவைகளில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என்று கூறி பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து…
குஜராத்தில் மாநில கல்வித்துறையால் 6 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பொதுமக்கள் வழக்காடும் உரிமையின் கீழ் புகாரளித்தது ஜமாத் உலமா ஹிந்த். கடந்த திங்களன்று வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளிடம் உரிய விளக்கம் கேட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பகவத் கீதையை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்கிற மாநில கல்வித் துறையின் தீர்மானத்தை எதிர்த்து ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தொடர்ந்த பொது நல வழக்கில் கடந்த திங்கட்கிழமை குஜராத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த தீர்மானத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற முஸ்லிம் அமைப்பின் கோரிக்கையை தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுத்தோஸ் ஜே சாஸ்திரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏற்க மறுத்துள்ளது. பார் அண்ட் பெஞ்ச் – ன் படி. இந்த…
15 ஆண்டு கால முற்றுகையின் விளைவாக காஸாவின் 80 சதவீத குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். காசாவில் மொத்தம் 8 லட்சம் குழந்தைகள் இஸ்ரேலின் முடக்கத்திற்கு உட்பட்ட வாழ்க்கையை மட்டுமே அறிந்துள்ளனர். இது பெருமளவில் அவர்களின் மனநலத்தை பாதித்துள்ளது என, இந்த அறிக்கை கூறுகிறது. காசாவில் உள்ள ஐந்தில் நான்கு குழந்தைகள் மன அழுத்தம், அச்சம் (பதட்டம்) மற்றும் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ன (Save The Children) சேவ் தி சில்ரன் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. “Trapped” “மாட்டிக்கொண்ட” என பெயரிடப்பட்ட இந்த அறிக்கை இதே நிறுவனத்தால் 2018 ஆம் ஆண்டும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிக்கையானது காசாவில் உள்ள 488 குழந்தைகள், 168 பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களை நேர்காணல் செய்து தயார் செய்யப்பட்டுள்ளது. காசாவில் இந்த இஸ்ரேலின் முடக்கமானது 2007 இல் தான் தொடங்கப்பட்டது, இதனால் காசாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இதனால் குறிப்பாக காசாவின் இரண்டு…
மீரட்: பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்திற்கு எதிராக கடந்த ஜூன் 10 அன்று நடந்த போராட்டத்தில் “வன்முறையில் ஈடுபட்டதாக” கூறி கைது செய்யப்பட்ட எட்டு இளைஞர்களை சகாரன்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் இளைஞர்களின் நீதிமன்ற காவலை ரத்து செய்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த “தவறான விசாரணை” வழக்கை விசாரணை செய்வதற்காக விசாரணை அதிகாரி (IO) வை நியமித்துள்ளது. நீதிமன்றம் “இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை இது தவறான முறையில் எத்தகைய நம்பகமான ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில் இவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். CrPC பிரிவு 169 (ஆதாரங்களில் குறைபாடுள்ள நிலையில் குற்றவாளிகளை விடுதலை செய்யலாம்) எனும் சட்டத்தின் கீழ் ஒன்று (IO) விசாரணை அதிகாரி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய , அல்லது இந்த சட்டத்தை செயல்படுத்த வேண்டும்…
