ஒரு சமூகத்தின் இனச் சுத்திகரிப்பு என்பது வரலாற்றில் அவர்களின் பங்களிப்பை நீக்கி, துரோகிகளாகவும் எதிரிகளாகவும் சித்திரிப்பது, அவர்களின் இலக்கிய ஆக்கங்களை அழித்து அவர்களைப் பற்றிய பொய்யைப் பரப்புவது, அவர்களின் பண்பாட்டுப் பின்னணியில் இருக்கும் பெயர்களை மாற்றுவது ஆகியவற்றிலிருந்தே தொடங்குகிறது. இந்தியாவில் அண்மைக் காலமாக எவ்வித தங்குதடையுமின்றி முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்புக்குப் பகிரங்க அறைகூவல்கள் விடுக்கப்படுவது கண்கூடு. குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய உண்மைகளை அழித்தல் அல்லது மதிப்பிழக்கச் செய்யப்படுவதை ‘அறிவாதாரப் படுகொலை’ (Epistemicide) என்று குறிப்பிடுவர். இந்த எபிஸ்டெமிசைட் என்பது குறிப்பிட்ட வழிகளில் ஒழுங்கமைக்கப்பட்டு நிலையாக, முறையாக அறிவுத்தளத்தில் ஒரு சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும். மேலாதிக்க சக்தி கல்வி, அறிவுத்தளங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த எபிஸ்டெமிசைட் (அறிவாதாரப் படுகொலை) நிகழ்த்தப்படுகிறது. அதன் விளைவாக உண்மைகள் அழிக்க, மௌனிக்கப்படுகின்றன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த எபிஸ்டெமிசைட் தொன்று தொட்டே நிகழ்த்தப்படுவது என்றாலும் இப்போக்கு அண்மைக் காலத்தில் அதிதீவிரம் அடைந்துள்ளது. இந்துத்துவவாதிகள் இதனைச் சரிவரச்…
Author: எஸ். ஹபிபுர் ரஹ்மான்
2013ஆம் ஆண்டு சிபிஎஸ்இ- ஆல் முன்மொழியப்பட்ட நீட் தேர்வு தமிழ்நாடு, கேரளா போன்ற மாநில அரசுகளின் எதிர்ப்பால் பின்வாங்கிக் கொள்ளப்பட்டது. அதையடுத்து 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு நீட் தேர்வு இரண்டு கட்டமாக நாடு முழுவதும் நடத்தப்பட்டது. ஆனால் அப்பொழுதும் கூட அது கடுமையான எதிர்ப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டது. அதன் விளைவாக நாட்டின் பிற பகுதிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்ட போதும் தமிழ்நாடு மட்டும் அதிலிருந்து விலக்கு பெற்றிருந்தது. 2016 டிசம்பரில் அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் விளைவாக நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் 2017ஆம் ஆண்டு ஊடுருவியது. நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் ஆண்டே 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள், 196.6% கட்ஆஃப் பெற்ற தலித் கூலித்தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் பெற்றுத் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார். 2017ஆம் ஆண்டு மாணவி…
கடந்த ஜூலை 31 அன்று ஹரியானாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) ‘பிரிட்ஜ் யாத்ரா’ எனும் பேரணியை நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த வன்முறை முன் திட்டமிடலுடன் நடந்தேறி உள்ளது. கலவரத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே தீவிரவாத விஎச்பி, பசு இறைச்சியைக் கடத்தினர் எனக் கூறி முஸ்லிம் இளைஞர்கள் ஜுனைத், நசீர் ஆகியோரை உயிருடன் காருக்குள் வைத்து எரித்துக் கொலை செய்த ‘மோனு மோனோசர்’ என்பவனை அவர்களின் பேரணியில் கலந்துகொள்ள வைத்துள்ளனர். ‘முஸ்லிம்கள் நாட்டிலிருந்து மொத்தமாக அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்’ எனப் பொது மேடையிலேயே பேசியவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவனது வேலையே பசுக் காவலர் (கவ்ரட்ஷக்) எனும் பெயரில் ஒரு காரையும், அதில் நவீன ஆயுதங்களை ஏந்திய குண்டர்களையும் ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமாக காவல்துறையினரைப் போல வலம் வருவதுதான். அவர்களுக்கு ஐயம் ஏற்பட்டால் வாகனங்களையோ, வீடுகளுக்குள்ளேயோ எத்தகைய அனுமதியும் இன்றி நுழைந்து…
பல்லாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்துவந்த மணிப்பூரில் மெய்தேயி சமூகத்துக்கும், குக்கி கிறித்தவச் சமூகத்துக்கும் இடையே கடந்த மே 3ம் தேதி மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை கட்டுப்படுத்தப்படாமல் இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவே இந்தியாவில் 2000க்குப் பிறகு அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ள மூன்றாவது பெரும் வன்முறை வெறியாட்டமாகும். இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் (உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் எனக் கூறப்படுகிறது). 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து 350க்கு மேற்பட்ட முகாம்களிலும், வனப்பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். லட்சக்கணக்கான குழந்தைகள், மாணவர்கள் கல்வியை இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள், தேவாலயங்களின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் 70க்கும் மேற்பட்ட கட்டடங்கள், பள்ளிகள் தீயிடப்பட்டுள்ளன என்றும், நாற்பதிற்கும் மேற்பட்ட கோயில்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு இனக் கலவரங்களுக்கு மத வழிபாட்டுத் தலங்கள் இரையாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். மணிப்பூர்…
வாழ்க்கையில் பணம்தான் எல்லாமே, பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனக் கருதும் கதாபாத்திரமான புலிப்பாண்டியும், அவரின் நண்பர்களும் தூத்துக்குடியில் சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்துவருகின்றனர். ஒருகட்டத்தில் காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக மாலை போட்டு சபரிமலைக்குச் சென்று விடுகின்றனர். அங்கு இஸ்லாமிய முதியவர் இஸ்மாயிலிடம் ஒரு லாட்டரி சீட்டை வாங்கி, அதை அங்கேயே தவற விட்டுச் செல்கின்றார். முதியவர் அதை எடுத்து பத்திரப்படுத்தி வைக்கிறார். எதிர்பாராத விதமாக அந்த லாட்டரிக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுகிறது. இதை அறிந்து அதிர்ந்துபோன முதியவர், அந்தப் பணத்தின் உரிமையாளரான கதாநாயகன் புலிப்பாண்டியிடம் தனக்கு இருக்கும் பல தடைகளையும் தாண்டிச் சென்று அதைச் சேர்த்தாரா, இல்லையா என்பதை உண்மைக்கு நெருக்கமாக ஆக்சனுடன் எமோஷனைக் கலந்து சொல்லியிருக்கும் படம்தான் பம்பர். கடந்த வாரம் வெளியான இப்படத்தை அறிமுக இயக்குநரான செல்வக்குமார் இயக்கியுள்ளார். அருமையான கதை, கதாபாத்திரங்கள். அதற்கேற்ற பக்காவான நடிகர்கள் தேர்வு. கதாநாயகக் கதாபாத்திரம் வெற்றி…
அமெரிக்காவின் தற்போதைய கருப்பினர் வெள்ளையினர் பிரிவினைக்குச் சற்றும் சளைக்காத வகையில் இந்தியாவின் நகரங்களில் சாதி, மத, இன அடிப்படையிலான பிரிவினைகள் இருப்பதாக சர்வதேச கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் நடத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. அந்த ஆய்வறிக்கை, ‘குடியிருப்புப் பிரிப்பு, உள்ளூர் பொதுச் சேவைகளுக்கான சமமற்ற அணுகல்: 1.5 மில்லியன் சுற்றுப்புறங்களின் சான்றுகள்’ (Residential Segregation and Unequal Access to Local Public Services in India: Evidence from 1.5m Neighborhoods) முஸ்லிம்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் (SC) வசிக்கும் சுற்றுப்புறங்களில் அரசின் பொதுச் சேவைகள் மிகவும் குறைவாகவே வழங்கப்படுவதைக் கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான பொருளாதார பேராசிரியர் பால் நோவோசாட், அதன் முடிவுகளைப் பகிர்ந்து. இந்த ஆய்விற்காக 5 ஆண்டுகள் உழைத்ததாக ட்வீட் செய்துள்ளார். https://twitter.com/paulnovosad/status/1669373541584719873?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1669373541584719873%7Ctwgr%5E7f722ec7879a2a918e39622b457b2eb1241d4ab5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmaktoobmedia.com%2Flatest-news%2Findias-cities-have-high-segregation-on-the-basis-of-caste-religion-says-new-research%2F நோவோசாட் “பட்டியல் சாதியினருக்கு அநீதியிழைக்கும் வகையில் கிராமப்புறங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளனவோ அதேபோலத் தான் நகர்ப்புறங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கும் மேல் நகரங்களில் முஸ்லிம்களின் நிலை…
2022 செப்டம்பர் 7ஆம் நாள் `மிலே கதம்; ஜூடே வத்தன்’ என்ற முழக்கத்துடன் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் என 3,560 கிலோ மீட்டர் கடந்து காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீ நகரில் 2023 ஜனவரி 30ஆம் நாள் முடிவடைந்துள்ளது. இந்த யாத்திரையில் கலந்துகொள்ள 50,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட 119 பேர்தான் `பாரத் யாத்திரிகள்’ எனப்படும் முழுநேரப் பயணிகளாக தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒரு நாளைக்கு 22இலிருந்து 23 கிலோமீட்டர் வரை நடந்துள்ளனர். மற்றவர்களெல்லாம் அந்தந்த மாநிலங்களில் கலந்து கொண்டவர்கள்தான். 150 நாள்களாகப் பல்வேறு தடைகள், இயற்கை இடர்கள், பா.ஜ.கவின் விமர்சனங்களைக் கடந்து, மக்கள் கடலில் சங்கமம் நடத்திவிட்டார் ராகுல் காந்தி. அவருடைய இந்த நெடும் பரப்புரைப் பயணம் நாட்டின் அனைத்து மட்டங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தின் தாக்கம் வருகிற 2024 தேர்தலில்…
“என் மைத்துனி கவுசர் பானுவுக்கு அவர்கள் செய்தது மிகவும் பயங்கரமானது, மிகவும் வெறுப்பிற்குரியது. அவர் ஒன்பது மாத கர்ப்பிணி. அவரது வயிற்றை வாளால் கிழித்து கருவை வெளியே எடுத்து நெருப்பில் வீசினார்கள். பின் அவரையும் எரித்துவிட்டனர்.” -சாய்ரா பானு, நரோடா பாட்டியா (2002 மார்ச் 27ல் ஷா-ஏ-ஆலம் முகாமில் பதிவு செய்யப்பட்டது) “தாக்குதலுக்கு முந்தைய நாளே என்னுடைய மகள் கவுசரை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவள் குழந்தையைப் பெற்றெடுப்பதற்குத் தயாராக இருந்தாள். ஆனால், மருத்துவர் நேரம் இருக்கிறது என்று மறுநாள் காலை மீண்டும் வரச் சொன்னார். ஆனால், அதற்குப் பிறகு விடியலே வரவில்லை. எல்லாம் முடிந்து விட்டது. சோகம் என்னவென்றால், எனது மகளை அறுத்து சிசுவை உடலிலிருந்து வெளியே எடுத்து அவளைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.” -காலித் நூர் சேக் (கர்ப்பிணியான தன் மகள் கவுசர் பானு (31) உட்பட ஒன்பது குடும்ப உறுப்பினர்களை குஜராத் இனப்படுகொலையில் பறிகொடுத்தவர்) “பெண்களை…
2002 பிப்ரவரி 27 அன்று காலை கோத்ரா ரயில் நிலையத்திலிருந்து சென்றுகொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த ஆர்எஸ்எஸ் கரசேவகர்கள். அந்த தீ விபத்திற்குக் காரணம் முஸ்லிம்கள்தான் என்றும், ரயில் கொளுத்தப்படுவதற்கு முன்பு முஸ்லிம் வன்முறையாளர்களால் இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என்றும் சங் பரிவார்கள் குஜராத் முழுவதும் புரளியைப் பரப்பினர். இதன் மூலம் கொம்பு சீவப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்த வன்முறை வெறியாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காவு வாங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அநேக முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்கானார்கள். முஸ்லிம்களின் வீடுகள், வியாபாரத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் அழித்தொழிக்கப்பட்டன. சற்றேறக்குறைய 1,50,000 முஸ்லிம்கள் தம் வசிப்பிடத்திலிருந்து சிதறடிக்கப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் கோரக் கதைகள் ஏராளம். இந்துத்துவ…
பிரபல பிபிசி ஊடகம் கடந்த வாரம் India: The Modi Question என்ற இரண்டு எபிசோட்களை உடைய ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படம், 2002ம் ஆண்டு நரேந்திர மோடியின் ஆளுகைக்குக் கீழ் இருந்த குஜராத்தில் முஸ்லிம்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, அப்போதைய குஜராத் அரசின் நேரடியான பங்கை ஆதாரங்களுடன் விவரிக்கிறது. நரேந்திர மோடியின் தலைமையிலான தற்போதைய ஒன்றிய அரசு இந்த ஆவணப்படத்தை பிரதமர் மோடிக்கு எதிரான ஒரு பிரச்சாரம் என்று கூறி சட்டபூர்வமாக முடக்கியுள்ளது. படம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டது. புதன்கிழமை அன்று யூடியூபிலிருந்து நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த ஆவணப்படத்தைக் குறித்த 50க்கும் மேற்பட்ட ட்வீட்களை ட்விட்டரில் இருந்து அழிக்கும்படி ட்விட்டர் நிறுவனத்திற்கும், இது தொடர்பான வீடியோக்கள் பதிவிடப்படுவதைத் தடுக்குமாறு யூடுபிற்கும் இந்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கிடையில் மோடியை விமர்சிக்கும் இந்த ஆவணப்படம் கேரளாவிலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் ஃபிரட்டர்நிட்டி இளைஞர் அமைப்பின் சார்பாக…