ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோர் மாவட்டத்திலுள்ள ஒன்பது வயது தலித் சிறுவன் இந்திரா மேக்வால் குடிநீர் பானையை தொட்டதற்காக உயர்சாதியைச் சார்ந்த ஆசிரியர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இச்சிறுவன் ஜலோர் மாவட்டத்தின் சுரானா கிராமத்திலுள்ள தனியார் பள்ளியின் மாணவன், ஜூலை 20 அன்று தாக்கப்பட்ட இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் காயங்களின் காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தார்.
ஆசிரியர் சைல் சிங் (40) கொலை, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனின் தந்தை பீடியை செய்தி நிறுவனத்திடம் தன்னுடைய மகனின் முகம் மற்றும் காதுகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும் மேலும் கிட்டத்தட்ட அவன் சுயநினைவையே இழந்துவிட்டதாகவும் கூறினார். முதலில் இந்தச் சிறுவன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிறகு அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஒரே போரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
“ஒரு வாரமாக அவன் உதைப்போரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான் ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் நாங்கள் அவனை அகமதாபாத்திற்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அங்கும் அவனுடைய உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சனிக்கிழமை அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்” சிறுவனின் தந்தை தேவராம் மேவால்.
ஜனவரின் சைலா காவல் நிலைய பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதில் மாணவர் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின் மீது கொலை மற்றும் எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் கல்வித்துறை இந்த சம்பவத்தை குறித்து விசாரிப்பதற்காக விசாரணை குழு அமைத்துள்ளது மற்றும் ராஜஸ்தானின் எஸ் சி கமிஷன் தலைவர் கில்லாடி லால் பைரவா இந்த வழக்கின் விரைவான விசாரணைக்காக அதிகாரி திட்டத்தின் கீழ் எடுத்துக்கொண்டு விசாரிப்பதற்கு ஆணையிட்டுள்ளார்.
பைரவா சுரானா கிராமத்தில் வருகிற ஆகஸ்ட் 15 அன்று தலித் சிறுவனின் குடும்பத்தை சந்திக்கிறார்.
தமிழில்
ஹபிபுர் ரஹ்மான்
(சகோதரன் ஆசிரியர் குழு)
Source – maktoob