எழுதியவர் : அப்துர் ரஹ்மான், சமூக ஊடகவியலாளர் 1987 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி இந்துத்துவ பயங்கரவாதிகள் மீரட்டில் நடத்திய கலவரத்தின்போது, 42 முஸ்லிம் இளைஞர்களைச் சுட்டுப்படுகொலை செய்த உ.பி மாநில சிறப்பு இராணுவப்படையைச் சேர்ந்த 16 சிப்பாய்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மீரட், பாகல்பூர் படுகொலைகள் குறித்தெல்லாம் சிறுவயதில் கேள்விபட்டிருப்போம். விரிவான தகவல்கள் அதிகம் பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இக்காலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்தும் படுபயங்கரமான அட்டூழியங்களை மிஞ்சும் வகையிலான அக்கிரமங்கள் இந்தியாவில் அக்காலத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது. அதில் ஒன்றே மீரட் படுகொலை. 1986 ஆம் ஆண்டு பாபர் மசூதி சீல் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் சமூகங்களிடையே பதட்டம் ஆரம்பித்தது. இந்நிலை இரு சமூகத்தின் தலைவர்களுடைய உணர்ச்சி தூண்டும் பேச்சுகளால் தூண்டப்பட்டு 1987 மார்ச்சில் கலவரமாக வெடித்தது. ஜூன் மாதம் வரை தொடர்ந்த இக்கலவரத்தில் 390 பேர் படுகொலை…
Author: கே. எஸ். அப்துர் ரஹ்மான்
திருவிழாக்கள் என்று சொன்னாலே மகிழ்ச்சிக்குரிய தினங்கள். ஒவ்வொரு சமூகத்துக்கும், ஒவ்வொரு இனத்துக்கும், ஒவ்வொரு சிறு சிறு இனக் குழுக்களுக்கும் திருவிழாக்கள் உண்டு, பண்டிகைகள் உண்டு , பெருநாட்கள் உண்டு. இந்திய திருநாட்டிலே ஏராளமான மதச் சிறுபான்மையினர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஏராளமான சின்ன சின்ன குழுக்களை சார்ந்த பழங்குடியினர் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான திருநாட்களை, பண்டிகைகளை, பெருநாட்களை கொண்டாடிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த திருவிழாக்கள் என்பது பரஸ்பரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய தினங்களாக இருக்கின்றது. தங்களுடைய குடும்பத்தாரை, சொந்த பந்தங்களை, உற்றார் உறவினர்களை சந்திப்பதற்குண்டான மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்குத்தான் திருவிழாக்கள் முக்கிய பங்கினை அளிக்கின்றன. ஒவ்வொரு பண்டிகைகளுக்கு பின்னாலும், ஒவ்வொரு திருவிழாக்களுக்கு பின்னாலும் ஒரு நோக்கம் இருக்கின்றது. முஸ்லிம்கள் பெருநாட்களை கொண்டாடுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. தமிழ் பெருமக்கள் பொங்கலை ஒரு திருவிழாவாக கொண்டாடுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு பின்னால்…
1991 மே 21 அன்று தமிழக மண்ணில் ஏற்பட்ட ஒரு தீராக் களங்கம் திரு ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலை சம்பவம். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்பூதூர் வந்திருந்த போது அவரை விடுதலைப் புலிகளை சார்ந்த சிலர் படுகொலை செய்தார்கள். இந்த படுகொலைக்கு பின்னால் பல்வேறு சர்வதேச, அரசியல் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு இந்த கொலைக்கு விடுதலை புலிகள் மட்டுமே காரணம் என்ற பிம்பம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அதனோடு தொடர்புடையவர்கள் என்று பலரும் கைது செய்யப்பட்டு இன்றும் சிறையில் இருக்கிறார்கள். நீண்ட நெடும் காலமாக கிட்டத்தட்ட 27 வருடங்களாக இந்த கொலையோடு தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படக்கூடிய பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட ஏழு நபர்கள் இன்றும் சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் பேரறிவாளன் போன்றோர் எந்த தவறும் செய்யவில்லை, இதனுடனான தொடர்பு மிக மிக குறைவு என விசாரணை அதிகாரிகளால் சொல்லப்பட்டும்கூட…
