Author: முஹம்மது யஹியா பாஷா

இமயமலையின் மடியில் அமைந்துள்ள நேபாளம், உலகின் மிக அழகான இயற்கைப் பகுதிகளில் ஒன்றாகும். பனிமலைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள், காடுகள் என இயற்கை வளம் நிறைந்த இந்த நாடு, தற்போது மிகப்பெரிய இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 2026இல் நேபாளத்தின் வடக்குப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ரசுவா மாவட்டம் மற்றும் போதே கோஷி, திரிசூலி போன்ற ஆற்றுப்பகுதிகளில் ஏற்பட்ட நீர்ப்பெருக்கு வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பிற கட்டமைப்புகளை சேதப்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவத்தை வெறும் “வெள்ளப் பேரழிவு” என்று கடந்து செல்ல முடியாது. இது இயற்கையின் சக்தியையும், மனித சமுதாயத்தின் பலவீனத்தையும், அதே நேரத்தில் நமது பொறுப்புகளையும் நினைவூட்டும் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகும். வெள்ளம் ஏன் ஏற்பட்டது? இத்தகைய பேரழிவுகளுக்கு ஒரே ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்டுவது சரியானதல்ல. மிகக்…

Read More

தென் தமிழகத்தின் இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியமிக்க சகோதர சமயத்தவர்களினுடையே இருக்கும் பேரன்பின் பிணைப்பையும் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். வளர்ந்து வரும் டெக்னாலஜி & மெஷின்களுக்கு இணையாக மக்கள் கையால் தறிகளை நெய்து பிழைப்பை நடத்த முடியாமல் வேலைக்காக அயல்நாட்டு வாழ்க்கையைத் தேர்வு செய்வதால் ஏற்படும் சிரமங்களையும், நேசத்திற்குரியவர்களின் பிரிவு ஏற்படுத்தும் வலிகளையும் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது. இஸ்லாமிய கலாச்சாரம் என்ற ஒற்றை சாராம்சத்தை மட்டும் சொல்லாமல் இஸ்லாமியர்களின் வாழ்வியல், அவர்களின் பண்பாடு, இன்று கொஞ்சம் கொஞ்சமாக அல்ல வேகமாக மறைந்து வரும் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை, மாற்று மதத்தவரோடு இஸ்லாமிய மக்கள் கொண்டிருக்கும் பிணைப்பு என அத்தனையும் நம் கண் முன்னே பயணிக்கிறது. இன்றைய நடைமுறை வாழ்வில் அங்கும் இங்குமாக முஸ்லிம் சமூகத்திற்கும், சகோதர சமயத்தவர்க்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்த கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கலவரங்கள், பொய், அவதூறுகளை, சாதாரணமாக போட்டோ எடுக்க வரும் நபர்களோடு மாமா மருமகனாக உறவாடுவதில்…

Read More