Author: நாசர் புகாரி

மத்திய அரசின் மக்கள் விரோத குடியுரிமை திருத்தச் சட்டம் எனும் ஜனநாயக படுகொலைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள் ஜனநாயக முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அமைதிப் போராட்டங்களில் மாணவர்களை தாக்குவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற தீவிரவாத செயல்களில் இந்துத்துவ அமைப்பினர் தொடந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களையும் இவர்களுக்கு ஆயுதம் வழங்கும் தீவிரவாதிகளையும் காவல்துறை கண்டுகொள்வதில்லை. அவர்களும் குடிமக்கள் மீது கடும் அடக்குமுறையை தொடர்ச்சியாக கட்டவிழ்த்து வருகின்றனர். டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் “சுட்டுத் தள்ளுங்கள்” என்று வன்முறையை தூண்டிய பாஜக அமைச்சர்கள் மீது வழக்கு கூட பதிவு செய்யாமல், போராடும் மாணவர்களை குறிவைத்து வேட்டையாடி வருவது கண்டனத்துக்குரியது. மாணவர் தலைவர்களின் பேச்சுகளை திரித்து சில மீடியாக்கள் செய்தி வெளியிடடுகின்றன. இதை ஆதாரமாக வைத்து காவல்துறை தனது கைது படலங்களை ஆரம்பித்து விடுகின்றன. இவர்களின் இந்த நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயகத்திற்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். SIO வின்…

Read More

இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்கத் துடிக்கும் பாஜக அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) வன்மையாகக் கண்டிக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாசிச பாஜக அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் குடியுரிமைச் சட்டம் 1955ல் திருத்தத்தை ஏற்படுத்தி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் முஸ்லிமல்லாத மக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கி, முஸ்லிம்களை மட்டும் வஞ்சகமாக விலக்கி நிறுத்துகிறது. மேலும், பௌத்த பேரினவாதத்தால் மியான்மரிலிருந்தும், இலங்கையிலிருந்தும் வந்த அகதிகளுக்கும் இடமில்லை என்கிறது. NRC மூலமாக அஸ்ஸாமில் ஆயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கிய இந்த அரசு, இன்று அவர்களை நாடற்றவர்களாக மாற்றியுள்ளது. ஒருவரது குடியுரிமையை அவரது மதத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிப்பது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமில்லாமல் அதன் அடிப்படை தத்துவத்தையே தகர்க்கும் செயலாகும். சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்திற்கும் இது எதிரானதே. இந்திய அரசியலமைப்பின் சரத்துகள்…

Read More

(செங்கோட்டையில் முஸ்லிம் வீடுகள் மீது கல்லெறிந்த பதின்ம வயது சகோதரனுக்கு ஒரு கடிதம்) கையில் கற்களோடு நிற்கும் என் கலவரக்கார சகோதரனுக்கு. உன் கையில் கல்லை திணித்தவன் யார் தெரியுமா? அவன், உனக்கு கல்வி தர மறுத்தவன், நீ பெற்ற இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய துடிப்பவன், உன் உழைப்பை சுரண்டிக் கொழுத்தவன், சமநீதியை மறுத்து மனுநீதியை நிலைநாட்ட விரும்புபவன், சாதி இழிவை உன் மீது திணிப்பவன், உன்னை என்றென்றும் அடிமையாக வைத்திட நினைப்பவன், என் சகோதரனே நான் உன் கைகளில் உள்ள கல்லை பிடுங்கிக் கொண்டு கல்வியை வழங்க விரும்புகிறேன், கலவரக்காரனான உன்னை கல்வியாளராக பார்க்க ஆசைப்படுகிறேன் உன் கையில் உள்ள கல்லை என் மீது வீசி எறி, உன் கோபம் தணியட்டும் கல் ஏற்படுத்தும் காயம் சில நாட்களில் ஆறிவிடும்,ஆனால் கல்லாமையும், சாதிய இழிவும் வாழ்நாள் முழுவதும் உன்னை காயப் படுத்திக் கொண்டே இருக்கும் உன் கையில் கல்லை தந்த…

Read More