சாதியத் தீண்டாமை எதிர்ப்பையும் அதற்கு எதிரான அரசியலையும் பேசிவரும் தமிழ்நாட்டில், 2025 ஜூலை 27ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்திலுள்ள பட்டியலினத்தைச் சார்ந்த மென்பொறியாளரான கவின் செல்வகணேஷ், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சார்ந்த சுபாஷினியின் சகோதரரான சுர்ஜித்தால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். சாதித் தீண்டாமையை ஒழிக்க பல முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டும் கூட இந்தியா முழுவதும் இன்றளவும் ஆணவக் படுகொலைகளும், சாதித் தீண்டாமைக் கொடுமைகளும் அரங்கேறியே வருகின்றன. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது இவற்றை தடுக்க வேண்டிய ஆட்சியாளகளும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், சமுதாயத்தில் முக்கியப்பங்காற்றும் நபர்களும் சாதிய சிந்தனைகளை தடுக்காமல் அவற்றை வளரவிட்டு அதன்மூலம் ஆதாயம் தேடுவதே. சாதியானது எப்படி அவர்களுக்கு உதவுகிறது சாதியப் பிடியில் இருந்து விடுபடுவதற்கான வழியென்ன என்பதைப் பற்றி கீழே காண்போம். காவல்துறையில் மாற்றங்கள் தேவை சுர்ஜிதின் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தொடர்ச்சியாக கத்தி போன்ற ஆயுதங்களுடன் சாதிப் பெருமையைப்…
Author: ரியாஸ் மொய்தீன்
இந்திய அரசியல் அமைப்பிற்கு விரோதமான CAA சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம் காட்டு தீயென நாடு முழுவதும் பரவியது. பொது மக்களால் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தினால் இந்தியவே ஸ்தம்பித்தது. முக்கியமாக, டெல்லி ஷாஹீன் பாக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சூழ நடத்தப்பட்ட போராட்டம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் ஷாஹீன் பாக் என்னும் பெயரில் போராட்டங்கள் வலுப்பெற்றன. வடகிழக்கு மாகாணங்களில் தொடங்கிய இந்தப் போராட்டம் நிறைய இளம் தலைவர்களை உருவாக்கிய களமாக அமைந்தது. இப்போராட்டங்களில் மாணவர்கள், செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு மிகமுக்கியமானதாக இருந்தது. அதனை அரசாங்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்த்தது. அமைதியான முறையில் நடந்த CAA போராட்டத்தை வன்முறைக் களமாக மாற்ற இந்துத்துவவாதிகள் துடித்தனர். அதன் விளைவாக பிப்ரவரி 2020இல் வடகிழக்கு டெல்லியில் கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களாக இருந்தனர். கலவரத்தை தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அதற்குக் காரணமாக…
ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரத்தைக் குறைக்காமல் இஸ்ரேல் அப்பாவி ஃபலஸ்தீனப் பொதுமக்களை இனப்படுகொலை செய்துவருகிறது. கடந்த ஒரு மாதமாக அங்கு என்னதான் நடந்து வருகிறது? கடந்த அக்டோபர் 7 அதிகாலை நேரம் ஃபலஸ்தீனின் காஸா பகுதியை அதிகாரப்பூர்வமாக ஆட்சி செய்துவரும் ஹமாஸின் ராணுவ பிரிவான அல்-கஸ்ஸாம் படையணி (Al-Qassam Brigade)ஐச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தெற்கு இஸ்ரேல் எல்லையில் உள்ள பாதுகாப்பு வேலியைத் தகர்த்தும், மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிலேடர்கள் மூலமாகவும் தங்களின் பூர்விக நிலத்திற்குள் (இஸ்ரேலுக்குள்) நுழைந்தனர். அச்சமயம் காஸாவில் இருந்து ஏவப்பட்ட சில ராக்கெட்டுகளால் 1400 இஸ்ரேலியர்கள் இறந்தனர். 240 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்குப் பதில் தாக்குதல் நடத்தப் போவதாகக் கூறி இஸ்ரேல் அப்போதிலிருந்து இதுவரை கொடூரமான முறையில் வான்வெளித் தாக்குதல் நடத்தி அப்பாவி ஃபலஸ்தீனர்களை கொன்று குவித்து வருகிறது. தற்போது வரை ஏறத்தாழ 10,022 மேற்பட்ட ஃபலஸ்தீனியர்களை காஸாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 152 பேரையும்…