Author: முஹம்மது சாதிக் இப்னு ஷாஜஹான்

மேற்கத்திய நாடுகளில் வாழும் சில மக்களுக்கு இஸ்லாத்தின் மீதான “விசித்திரமான நிலைப்பாடு” தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்கத்திய நாகரிகமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் கலாச்சாரம், பண்பாடு கடந்து உலகம் முழுக்க வியாபித்துக் கொண்டிருக்க, இஸ்லாமிய கொள்கையின் மீது முஸ்லிம்கள் வைத்திருக்கும் திடத்தன்மை, இஸ்லாத்தை எதிர்க்க நினைக்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இல்லை. மேற்கில் வாழும் மக்களுடன் முஸ்லிம்கள் வாழ்வதை பார்த்து தூசி விழுந்தாலும் துடைக்க நேரமின்றி கண்களைத் திறந்து வைத்து எரிச்சல் அடைந்து கொண்டிருக்கும் இவர்கள், எங்கெல்லாம் இஸ்லாத்தின் ஸ்திரத்தன்மையை முடக்க வழி ஏற்படுகிறதோ அவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை. இஸ்லாத்தை எதிர்க்கும் சிலருக்கு, சமூகத்தின் மத்தியில் இஸ்லாத்திற்கு எதிரான விஷம கருத்துக்களை பரப்புவதற்கு மிகச்சிறந்த ஆளுமைகளின் உதவி தேவைப்படுகிறது. அவ்வகை ஆளுமைகள் பொதுவெளியில் மக்களிடையே புகழ்பெற்ற நற்பெயர்களை பெற்றிருந்தாலும் அதை வைத்து இஸ்லாத்தை எதிர்ப்பதில் தான் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி இவர்கள் செய்யும் சில விஷயங்களை பற்றி…

Read More

ஷதியா அபூ கஸ்ஸாலே (Shadia Abu Ghazaleh) என்ற இளம்பெண்ணை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் போர்கள் என்றாலே ஆண்கள் முன்னணியில் இருப்பதும், உயிர்த்தியாகிகளின் பெயர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.‌‌ ‍‍‍இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிரான ஃபலஸ்தீனர்களின் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த முதல் பெண்மணிதான் இந்த ஷதியா அபூ கஸ்ஸாலே. 1949ஆம் ஆண்டு நாப்லஸ் (Nablus)இல் பிறந்த ஷதியா அபூ கஸ்ஸாலே, ஃபலஸ்தீன விடுதலை போராட்டங்களில் பங்காற்றிய ஆரம்பகால பெண் போராளிகளில் ஒருவர். ஷதியா 1964ஆம் ஆண்டு அரபு தேசியவாத இயக்கத்தில் (ANM) தன்னை இணைத்துக் கொண்டு ஃபலஸ்தீன விடுதலைக்காக போராட தனது வாழ்வை அர்ப்பணித்தார். பின்னர் 1967இல் ஃபலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் (PFLP) இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பினராகவும் இருந்தார். இராணுவப் பயிற்சிகளிலும், இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும், மற்றவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை உருவாக்கக் கற்றுக் கொடுப்பதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. இவை…

Read More

இயக்குனர் ஜேம்ஸ் கன் எழுதி இயக்கியுள்ள புதிய சூப்பர் மேன் படம் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே வெளியாகியுள்ளது. ஏனெனில் ஜேம்ஸ் கன், “சூப்பர் மேன் படம், அரசியல் மற்றும் அறம் பற்றியது, அதில் சூப்பர் மேனின் பயணம் என்பது புலம்பெயர்ந்த ஒருவனின் கதை” என்ற தி டைம்ஸ் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் இருந்து கதை குறித்தான ஆர்வம் மக்களை இன்னும் அதிகப்படுத்தியது. பொதுவாக சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் கதாநாயகனின் பாத்திரத்தன்மையும் பண்பு நலன்களும் மக்களுக்கு சாதகமாகவும் அவர்களை எதிர்க்கக்கூடிய அல்லது இடையூறாக இருக்கக்கூடிய விஷயங்களுக்கு எதிரானதாகவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். உள்ளூர் திரைப்படமான கேஜிஎஃபில் இருந்து உலகத் திரைப்படமான சூப்பர் மேன் வரை இந்த சூத்திரமே கதாநாயகனை சூழ்ந்திருக்கிறது. மற்றொரு கதாபாத்திரமான வில்லனின் தன்மை நாயகனின் தன்மைக்கு எதிரானதாக இருக்கும். இந்த ஹீரோ vs வில்லன் கதைகளில் வில்லனின் சூழ்ச்சிகளும் அடக்குமுறைகளும் கதாநாயகனால் அடையாளம் காணப்பட்டு முறியடிக்கப்படுவதாகவும் அல்லது கதாநாயகனின்…

Read More

(இரண்டாம் பகுதியை வாசிக்க) பாதி விதவைகள் காஷ்மீரி பெண்களின் கணவன்மார்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் இராணுவப் படைகளால் அழைத்துச் செல்லப்படுவர். அப்படி சென்றவர்கள் மறுபடியும் வீடு திரும்பமாட்டார்கள். இப்படிப்பட்ட பெண்களே பாதி விதவைகள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால், அமரன் திரைப்படத்திலோ சில கணவன்மார்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட போய் மறைந்து விடுவதால் தான் மனைவிகளுக்கு பாதி விதவைகள் என்ற பெயர் வந்ததாக திரித்துக் கூறி இருப்பார்கள். பாதி விதவை, பாதி மனைவி? என்ற அறிக்கை ஜம்மு மற்றும் காஷ்மீர் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின வன்முறையை எடுத்துக்காட்டுகிறது. காஷ்மீரில் சுமார் 1,500 பெண்கள் பாதி விதவைகளாக உள்ளனர். அவர்களின் கணவர்கள் காணாமல் போயுள்ளனர். ஆனால் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது. பெண்கள் மீதான வன்முறைகள் இராணுவ படைகளின் அத்துமீறல்கள் இதனோடு நின்று விட்டதா என்றால் அதுதான் இல்லை. காஷ்மீர் ஆண்களுக்கே இந்நிலை என்றால் காஷ்மீர் பெண்களின் நிலை எவ்வாறு இருக்கும்.?…

Read More

(முதல் பகுதியை வாசிக்க) காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்கு 1947ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்து, இந்திய துணைக் கண்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிரிந்த போது, துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின் கீழ் 584 மாநிலங்கள் சிற்றரசர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தன. அதில் காஷ்மீர் மாநிலமும் ஒன்றாகும். இந்த சிற்றரசுகள் இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இணைந்து கொள்ள விருப்பம் அளிக்கப்பட்டது. முஸ்லிம் பெரும்பான்மையை கொண்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானுடன் சேர வாய்ப்பு இருப்பதாகவே அதிகம் நம்பப்பட்டது. ஏனெனில் பாகிஸ்தான் எனும் வார்த்தையில் உள்ள ‘K’ என்பது காஷ்மீரை குறிக்கக் கூடியது. இந்நிலையில் காஷ்மீரை ஆட்சி செய்த டோக்ரா இந்து மன்னர் மகாராஜா ஹரி சிங் தனது மாநிலத்தை சுதந்திரமான மாநிலமாக ஆக்க விரும்பினார். ஆனால், 1945இல் அவருக்கு எதிராக வெடித்த கிளர்ச்சியில் ஜம்முவின் தெற்கே மகாராஜா ஹரி சிங்கின்…

Read More

இராணுவம் சம்பந்தப்பட்டு, காஷ்மீரை அடிப்படையாக வைத்து திரைப்படம் ஒன்று எடுக்க வேண்டும் என்றால் அதில் தொழில்நுட்ப விஷயங்களுக்கு தான் மெனக்கிட வேண்டுமே ஒழிய வில்லன் கதாபாத்திரத்துக்கு அல்ல. ஏனெனில், அது இயல்பாகவே இஸ்லாமியர்களுக்கு சென்று விடுகிறது. குறிப்பாக இப்படங்களில் நாயகர்களாக வரும் இராணுவ வீரர்களின் வீரமும், தியாகமும், அர்ப்பணிப்பும் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் எல்லைகளில் தான் நினைவு கூறப்படுமே தவிர சீன எல்லைகளில் அல்ல.! இதுவரை வெளிவந்த இராணுவ படங்களில் பெரும்பாலானவைகளின் கதைகள் தீவிரவாதிகள் என இஸ்லாமியர்களையே முத்திரை குத்தின. இதற்கு சற்றும் குறைவில்லாமல் அல்லது இதைவிட ஒருபடி மேலே சென்று ஒரு குறிப்பிட்ட மக்களையே பயங்கரவாதிகள் போல் சித்தரித்திருப்பது தான் சமீபத்தில் வெளிவந்த அமரன் படத்தினை நாம் விமர்சனம் செய்வதற்கான காரணம். அதற்கு முதலில் அமரன் படத்தின் கதையினை பார்த்து விடுவோம். கதைச் சுருக்கம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைதான் இந்த அமரன் திரைப்படம்.…

Read More

கடந்த ஆண்டு அக்டோபர் 7, 2023 ஹமாஸ் இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தியது முதல் இஸ்ரேலுக்கு 17.9 பில்லியன் டாலர்கள் இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது என்று ஒரு சர்வதேச அறிக்கை பகிரங்கப்படுத்தியுள்ளது. பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான வாட்சன் நிறுவனம் தயாரித்த “அக்டோபர் 7, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரை இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பிராந்தியத்தில் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் செலவு” என்ற தலைப்பிலான ஆய்வின் முடிவில் வெளியான அறிக்கை இஸ்ரேலின் மீது அமெரிக்கா கொண்டிருக்கும் விரிவான ஆதரவைக் காட்டுகிறது. இதன் மூலம் இஸ்ரேலின் ராணுவ செயல்பாடுகளின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா தனது இருப்பை வலுப்படுத்திவருவதன் தீவிர தன்மையை நாம் தெரிந்து கொள்ள இயலும். அமெரிக்கா 6.8 பில்லியன் டாலர்களை வெளிநாட்டு இராணுவ நிதியுதவிக்கும் (FMF), 5.7 பில்லியன் டாலர்களை அயர்ன் பீம் போன்ற ஏவுகணை பாதுகாப்பு…

Read More

முஸ்லிம்களின் மீதான அநீதிக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்து நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இந்துத்துவவாதிகளின் பல நாள் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது. ஆம் அவர்கள் இவ்வளவு நாள் இந்து மக்களைக் கிளர்ச்சியூட்டி அரசியல் செய்து வந்த இராமர் கோயில் வரும் ஜனவரி 22ஆம் நாள் திறக்கப்படுகிறது. 2.7 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள இராமர் கோயில் 2019  பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து அதன் கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. கொரானாவின் காரணமாகப் பணிகளில் மந்தநிலை ஏற்பட்டாலும், இதனைக் கட்டி முடிப்பதற்கு ஏறக்குறைய 5 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இக்கோயிலைக் கட்டுவதற்கு முதலில் 1800 கோடி தேவைப்படும் என்று கணித்த நிலையில் கட்டி முடிப்பதற்குள் 3000 கோடி ஆகியிருக்கிறது. ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களே இதற்கான நன்கொடையைத் திரட்டுவதற்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தக் கோயிலைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குப் பல சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன! அதிலும்…

Read More

அர்ஜுன் ரெட்டி எனும் வக்கிரக் கதாநாயகனை வைத்து வெற்றிப் படம் கொடுத்த இயக்குநரின் அடுத்த வக்கிரப் படைப்பு தான் இந்த அனிமல். படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல ஆரம்பம் முதலே நாயகனின் கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லத் தொடங்குகிறது படத்தின் கதை.  அனிமலின் கதை என்னவென்றால் படத்தின் கதாநாயகனான ரன்விஜய் சிங் (ரன்பீர் கபூர்) இந்தியாவின் முதல் பணக்காரரான பல்பீர் சிங்கின் (அனில் கபூர்) ஒரே மகன். தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் விஜய் சிங் சிறுவயது முதலே பணக்காரனாக இருப்பதால் அவனுக்கு அனைத்தும் கிடைத்து விடுகிறது. தந்தையின் பாசத்தைத் தவிர, தந்தையின் அன்பிற்காக ஏக்கம் கொள்கிறான். ஒருகட்டத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படவே தந்தைக்கு அரணாக நின்று எதிரிகளைப் பழிவாங்கத் துடிக்கிறான். இறுதியாகத் தந்தையைக் கொலை செய்ய நினைக்கும் எதிரிகளைப் பழி வாங்கினாரா? ஏக்கத்தில் இருக்கும் ரன்விஜய் தந்தையின் அன்பைப் பெற்றாரா? என்பதே மீதி கதை.…

Read More

23 மார்ச் 2003, ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களின் இதயமும் சுக்குநூறாக உடைத்த நாட்களில் ஒன்றாகும். அன்று ஆஸ்திரேலியா அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் 140 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து, ஒரு பில்லியன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கைகளைத் தவிடுபொடியாக்கினார். சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் மக்களிடையே ஒரு வதந்தி பரவத் தொடங்கியது, அது உண்மை என்ற பதத்தை ஏற்படுத்தியது. அந்த வதந்தி என்னவென்றால்: பாண்டிங்கின் பேட்டில் ஒரு ஸ்பிரிங் (Spring) இருந்தது, அது அவருக்கு அதிக ரன்கள் அடிக்க உதவியது, இதுவே இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு வழிவகுத்தது என்ற கூற்று காட்டுத்தனமாகப் பரவியது, ஆனால் இந்தியா தோற்றுவிட்டதற்கான காரணத்தை ஜீரணிக்க முடியாமல் சிக்கித் தவித்த பல ரசிகர்களுக்கு இந்த வதந்தி குறிப்பிட்ட சில காலங்களுக்குத் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்திருக்கக் கூடும். இது 90களின் குழந்தைகளின் வாழ்க்கையில் மாயை மட்டுமே ஒரே…

Read More