• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»மிதக்கும் சென்னை
குறும்பதிவுகள்

மிதக்கும் சென்னை

AdminBy AdminNovember 11, 2021Updated:May 29, 2023No Comments2 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

நீரின் அருமை உணர்வாய் கோடையிலே என்ற பாடலின் வரிகளுக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள் சென்னை மக்கள் ஆம் இன்று இந்த வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தத்தளிக்கும் சென்னை வெயில் காலத்தில் குடிநீர் லாரிகளை எதிர்நோக்கி நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பார்கள். ஒரு பக்கம் குடிநீர் தட்டுப்பாடு மறுபக்கம் மழை வெள்ள பாதிப்பு எங்கே இந்த சமநிலை தவறுகிறது

தண்ணீர் இயற்கையின் அன்பளிப்புகளில் ஒன்று எப்படி மலைகளில் உள்ள கனிமங்களுக்கு மதிப்பு உள்ளதோ, நிலத்துக்கு அடியில் உள்ள வாயுக்கு மதிப்புள்ளதோ அதே மதிப்பு தண்ணீர்க்கும் உண்டு ஆனால் இதை கவனிக்காமல் வெறும் கனிமம் மற்றும் வாயுக்களை மட்டும் வைத்து கொண்டு அரசை வல்லரசாக ஆக்க முயற்சி செய்து வருகிறார்கள். மக்களின் எதிர்ப்பை மீறி இந்த வகையான திட்டங்களை செயல்படுத்த வேகமெடுக்கிறார்கள். ஆனால் தேவையான சில திட்டங்கள் இன்னும் திட்டமாகவே உள்ளன மழை வெள்ளம் என்பது பிரச்சனையாக அரசு கண்களுக்கு புலப்படவில்லையா? சென்னை தலைநகரம் அதிகபடியான மக்கள் தொகை கொண்ட நகரம் இந்த மாநகரத்தில் வீடுகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களின் சராசரி வாழ்க்கையும்,சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது போன்றவை இன்னும் கவனம் செலுத்த வேண்டிய பணிகளாக கருதப்படுகிறது வெயில் காலத்தில் குடங்களில் தண்ணீர் இல்லாமலும் மழை காலத்தில் வீடுகளே தண்ணீரில் மூழ்கி இருப்பதுமாக எத்தனை நாட்களை கடக்க போகிறோம்

யானை அதிக ஞபகசக்தி கொண்ட விலங்கு அது வந்து போகும் பாதையை பல ஆண்டுகள் வரை நினைவு வைத்திருக்கும் அதேபோல தான் மழை நீரும் தான் வந்து போகும் பாதையை மறக்காது. மீண்டும் அடுத்த மழை காலத்தில் அதே பாதையில் பயணிக்க வரும் ஆனால் நாம் அதை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்பது தான் இங்கே கேள்வி? முதல்வர் அவர்கள் களத்தில் சென்று மேற்பார்வை செய்வது  பாராட்ட கூடியது அது மக்களுக்கு தைரியத்தை அளிக்கும் படியாக உள்ளது. அடுத்த ஆண்டு மழை காலத்தில் தகுந்த முறையில் ஏதிர்கொள்வோம் என்பதே இந்த மேற்பார்வையின் நோக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தண்ணீர் பஞ்சம் என்பது இந்த காலகட்டத்தில் மிகவும் ஆபத்தான பிரச்சினைகளில் ஒன்று. இன்னும் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு இதற்கு சரியான முன்னேற்பாடுகளில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரேபிய போன்ற பாலைவன நாடுகள் குடிநீருக்காக மாற்று வழியை கண்டுபிடிக்க பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. ஆனால் அனைத்து வளங்களும் நிரம்ப பெற்ற இந்தியா இன்னும் அதற்கான எந்த முன்னேற்பாடுகளிலும் ஈடுபடாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

நிலத்தடி நீர் அடி ஆழத்தில் இரங்கி கொண்டு இருக்கிறது, குளம்,குட்டை,ஆறுகள் போன்றவை சாக்கடை குழிகளாகவும் கான்கிரீட் வீடுகளாகவுமே காட்சி அளிக்கிறது. மழைநீர் சேகரிப்பு திட்டம் இன்று எந்த நிலையில் உள்ளது என்பது எல்லாம் வருத்தத்தையே அளிக்கிறது. இன்னும் எத்தனையோ கிராமங்களில் ஒரு குடம் தண்ணீர் எடுக்க ஒரு நாளே செலவழிக்கும் மக்கள் சென்னையில் இருக்கின்றார்கள். அதே சென்னையில்தான் வருடம்தோறும் மழையால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு  தனது அடிப்படை தேவைகளை நிறைவேற்றவே அவர்களின் வாழ்க்கை கழிந்து கொண்டிருக்க எப்படி அவர்கள் அறிவுசார் துறைகளில் சாதிக்க தன் நேரங்களை செலவழிக்க முடியும். லாரிகளை எதிர்நோக்கி நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பார்கள் ஒரு பக்கம் குடிநீர் தட்டுப்பாடு மறுபக்கம் மழை வெள்ள பாதிப்பு எங்கே இந்த சமநிலை தவறுகிறது.

சாஹுல் – எழுத்தாளர்

சென்னை மழை வெள்ளம்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும் – சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு SIO கோரிக்கை

August 20, 2024

இஸ்மாயில் ஹனிய்யா கொல்லப்படக் காரணம் என்ன?

August 10, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.