• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»அடிப்படை கட்டுமானங்கள் சமரசம் செய்து கொள்ளப்பட்டு வருகின்றன – பதவி விலகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
கட்டுரைகள்

அடிப்படை கட்டுமானங்கள் சமரசம் செய்து கொள்ளப்பட்டு வருகின்றன – பதவி விலகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

ஆர். அபுல்ஹசன்By ஆர். அபுல்ஹசன்September 7, 2019Updated:May 30, 2023204 Comments2 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

கண்ணன் கோபிநாதன் – இந்த பெயரை எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா..?

சென்ற வருடம் கேரளா வெள்ளம் ஏற்பட்ட போது தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் தான் இந்த கண்ணன் கோபிநாதன். அப்போது இவர் மாவட்ட ஆட்சியராக இருந்தார்.

தற்போது ஏன் அவரைப்பற்றி பேசுகிறேன் என்றால் தனது குடிமைப் பணியை இவர் தற்போது இராஜினாமா செய்துள்ளார். அதற்கான காரணம், காஷ்மீரில் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால் தனது மனசாட்சியின் உந்துதலின் படி இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்,தனது ராஜினாமா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடாது, கிண்டல்களுக்கும், கேள்விகளுக்கும் உள்ளாகும் என்றாலும் மனசாட்சிக்கு நாம் பதிலளிக்க வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் நஷ்டத்தில் இருந்த மின்சார துறையை தான் பதவியேற்ற பிறகு லாபகரமானதாக மாற்றியுள்ளார். மிசோரமில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அங்கு பேட்மின்டன் வீரர் கோபிசந்த் உதவியுடன் 30 பேட்மிட்டன் பயிற்சி மையங்களை ஏற்படுத்தியுள்ளார். 

தான் பணியில் இருந்தபோது கேரளா வெள்ளத்தில் எதற்காக மீட்பு பணியில் ஈடுபட்டேன் என்று கேட்டும், பிரதமரின் நல்லாட்சி விருதுகளுக்கு ஏன் விண்ணப்பிக்கவில்லை என்று என்று கேட்டும் தன்மீது நோட்டீஸ் விடப்பட்டதாக கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானங்கள் சமரசம் செய்து கொள்ளப்பட்டு வருகின்றன என கூறி தனது பதவியைத் துறந்திருக்கிறார் மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.அவர்,
சசிகாந்த் செந்தில்.


 தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர் கர்நாடகத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்து வந்தார். தனது பதவியை துறந்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் எதிர்வரும் நாட்கள் தேசத்தின் இயல்புக்கு மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்றும், தான் ஒரு சாதாரண குடிமகனாக இருந்து அனைவரின் நன்மைக்காக செயலாற்ற விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். 

ஜனவரியில் தனது பதவியைத் துறந்த ஜம்மு-காஷ்மீரின் ஷாஃபைசலை தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து  கண்ணன் கோபிநாதன்,செந்தில் ஆகியோர் பதவி விலகி உள்ளனர்.

2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த சில காலங்களில் சாகித்ய அகாடமி, தேசிய விருது, பத்ம விருதுகளை திருப்பித் தந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர் பல்வேறு அறிஞர்கள், ஆர்வலர்கள்..தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டு விலகி வருவது இந்திய ஜனநாயகத்தின் மீதான ஆபத்தை வெளிப்படுத்துவதோடு நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.

-ஆர்.அபுல்ஹஸன்,கட்டுரையாளர்

Loading

IAS Resign Modi Government
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
ஆர். அபுல்ஹசன்

Related Posts

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.