• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»கல்வி வளாகங்களில் அறவிழுமியங்களையும் நல்லொழுக்கத்தையும் வளர்த்தெடுப்போம்! – SIOவின் கல்வி வளாகப் பரப்புரை
குறும்பதிவுகள்

கல்வி வளாகங்களில் அறவிழுமியங்களையும் நல்லொழுக்கத்தையும் வளர்த்தெடுப்போம்! – SIOவின் கல்வி வளாகப் பரப்புரை

AdminBy AdminSeptember 16, 2023Updated:September 16, 2023No Comments2 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

சமூகத்தில் மாற்றமும் முன்னேற்றமும் நிகழ்வது இளைஞர்களால்தான். அவர்கள் வரலாறு நெடுக சிந்தனை ரீதியான, நடைமுறை ரீதியான புரட்சிகளுக்கு உந்து சக்தியாய்த் திகழ்ந்துள்ளார்கள். இளைய தலைமுறையின் ஆற்றலை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) நன்கு உணர்ந்து, சிறந்த சமுதாயத்தை வார்த்தெடுக்கும் பொருட்டு அவர்களின் நல்லொழுக்கத்தையும் அறிவையும் அற உணர்வையும் செப்பனிட உறுதிகொண்டுள்ளது.

“உங்களில் சிறந்தவர் உங்களில் நற்பண்புடையவரே!” – நபிகள் நாயகம் (ஸல்)

கல்வி வளாகம் என்பது எதிர்மறையான சூழலைக் கொண்டிருக்காமல், கல்வியையும் ஒழுக்கத்தையும் செழித்தோங்கச் செய்யும் தளமாக இருக்க வேண்டும் என்று SIO கருதுகிறது. கல்வியை அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவதுடன், மாணவர்களை ஒழுக்கநெறிமுறைகளுக்கும், அறத்துக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழச் செய்து, எல்லா விதமான சமூகத் தீமைகளுக்கும் எதிரான போராட்டத்தை வழிநடத்துவோராக அவர்களைத் தயார்ப்படுத்துவதே எமது குறிக்கோளாகும்.

SIOவின் இலக்குகள்

  1. அறிவும் விழிப்புணர்வும்: உண்மையான அறிவையும், விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்துவது SIOவின் முதன்மைப் பணியாகும். சமூக விவகாரங்களை விமர்சனபூர்வமாக அணுகுவதற்கும், அறிவார்ந்த முடிவுகளை எடுப்பதற்கும் அவர்களைத் தயார்ப்படுத்துவது எமது இலக்குகளில் ஒன்று.
  2. அறமும் நன்னடத்தையும்: சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களை உருவாக்குவதோடு, அவர்களை கல்வியில் மட்டுமின்றி நன்னடத்தையிலும் சிறந்து விளங்குவோராக ஷிமிளி ஆக்க முனைகிறது. ஒருமைப்பாட்டுக்கும், தோழமை உணர்வுக்கும், நீதியுணர்வுக்கும் மதிப்பளிக்கும் ஒரு தலைமுறையை வார்த்தெடுப்பது SIOவின் மற்றொரு இலக்காகும்.
  3. விழுமம் சார்ந்த கல்வி: விழுமங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வித் திட்டத்துக்காக SIO தொடர்ந்து பாடுபடுகிறது. கல்வி என்பது பாடப் புத்தகங்களைத் தாண்டி, வாழ்க்கைக் கலைகளையும் அறத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் விதைக்க வேண்டும்.
  4. பாகுபாடற்ற கல்வி வளாகம்: அச்சமும் பாகுபாடும் இல்லாத கல்வி வளாகத்தைதான் இன்று மாணவர்கள் வேண்டி நிற்கின்றனர். சாதி, மத, பாலின மாச்சரியமின்றி சம உரிமைகளுக்காக நிற்பது ஷிமிளிவின் நிலைப்பாடு. பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய சூழலை அது உருவாக்க முயற்சிக்கிறது.
  5. அடிமையாவதையும் ஒழுக்கக்கேட்டையும் ஒழித்தல்: கல்வி வளாகத்தில் பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாவதும், அநாகரிகமும் சவாலாக இருந்துவரும் நிலையில், விழிப்புணர்வு இயக்கம் போன்றவற்றை உருவாக்கி இவற்றை வளாகத்திலிருந்து துடைத்தெறிய SIO முயலும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அது ஊக்குவிக்கும்.

இந்தப் பரப்புரை இயக்கத்தில் நீங்களும் இணையுங்கள்


ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த, கல்வியின் உண்மையான சாரத்தை மீட்டெடுக்க எல்லா மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அறம் சார்ந்த கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்களுக்கும் SoulSpark: Illuminate Ethicsஎன்ற SIOவின் பரப்புரை அழைப்பு விடுக்கிறது.

உறுதிமொழி

  • அறம் சார்ந்த முன்மாதிரிகளாக இருப்போம். சிந்தனைகளிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் அற விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்.
  • எல்லா வகையான பாகுபாட்டுக்கும் அநீதிக்கும் எதிராக, சமத்துவத்துக்கும் பன்முகத்தன்மைக்கும் ஆதரவாக நிற்போம் கற்றலையும் வளர்ச்சியையும் தோழமை உணர்வையும் வளர்த்தெடுப்பதுடன், பிரிவினைவாத அரசியலை முறியடிப்போம்.
  • பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகும் போக்கையும், அநாகரிகத்தையும் கல்வி வளாகத்திலிருந்து ஒழித்துக்கட்டி, அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வோம்.

கல்வி வளாகங்களை அறத்தின், ஞானத்தின் கோட்டைகளாக மாற்றும் இந்த உன்னதமான பயணத்தில் எங்களுடன் இணையுங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கல்வியின் ஆன்மாவை மீளக் கண்டடைவோம், இளைஞர்களை அதிகாரப்படுத்துவோம், ஒழுக்க விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்

“கல்வி என்பது எதிர்காலத்துக்கான பாஸ்போர்ட், இன்று அதற்குத் தயாராவோருக்கே எதிர்காலம் சொந்தமாகும்” -மால்கம் எக்ஸ்

கல்வி வளாகம் மாணவர் அரசியல்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும் – சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு SIO கோரிக்கை

August 20, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025

வி.எஸ். நைபாலும் இஸ்லாமிய வெறுப்பு பயணங்களும்

October 4, 2025

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.