Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»விநாயகர் சதுர்த்தியும், மதக் கலவரமும்
கட்டுரைகள்

விநாயகர் சதுர்த்தியும், மதக் கலவரமும்

கே. எஸ். அப்துர் ரஹ்மான்By கே. எஸ். அப்துர் ரஹ்மான்September 20, 2018Updated:May 31, 2023816 Comments3 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

திருவிழாக்கள் என்று சொன்னாலே மகிழ்ச்சிக்குரிய தினங்கள். ஒவ்வொரு சமூகத்துக்கும், ஒவ்வொரு இனத்துக்கும், ஒவ்வொரு சிறு சிறு இனக் குழுக்களுக்கும் திருவிழாக்கள் உண்டு, பண்டிகைகள் உண்டு , பெருநாட்கள் உண்டு. இந்திய திருநாட்டிலே ஏராளமான மதச் சிறுபான்மையினர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஏராளமான சின்ன சின்ன குழுக்களை சார்ந்த பழங்குடியினர் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான திருநாட்களை, பண்டிகைகளை, பெருநாட்களை கொண்டாடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இந்த திருவிழாக்கள் என்பது பரஸ்பரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய தினங்களாக  இருக்கின்றது. தங்களுடைய  குடும்பத்தாரை, சொந்த பந்தங்களை, உற்றார் உறவினர்களை சந்திப்பதற்குண்டான மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்குத்தான் திருவிழாக்கள் முக்கிய பங்கினை அளிக்கின்றன.

ஒவ்வொரு பண்டிகைகளுக்கு பின்னாலும், ஒவ்வொரு திருவிழாக்களுக்கு பின்னாலும் ஒரு நோக்கம் இருக்கின்றது. முஸ்லிம்கள் பெருநாட்களை கொண்டாடுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. தமிழ் பெருமக்கள் பொங்கலை ஒரு திருவிழாவாக கொண்டாடுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு பின்னால் நன்றி செலுத்தக்கூடிய ஒரு பெரிய காரணம் இருக்கிறது. இந்துக்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. இந்த காரணங்களும், மகிழ்ச்சிகளும் நாட்டிலே தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் இந்த பண்டிகைகளிலே பங்கெடுக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள், தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வழிபாட்டுத் தளங்களிலும் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. வைகை ஆற்றிலே கள்ளழகர் இறங்குவது மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது,  திருப்பதி திருமலையிலே உட்சவம் நடப்பது மிகப்பெரிய திருவிழாவாக  வைணவர்களிடத்திலே கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது போல தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் ஆடி மாசத்திலே மிகப்பெரிய அளவிலே பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது . முஸ்லீம் பெருமக்கள் வசிக்கக்கூடிய இடங்களிலே குறிப்பாக நாகூர் , ஏர்வாடி போன்ற இடங்களில் சந்தனக்கூடு திருவிழாக்கள், வேளாங்கண்ணியில் கிறிஸ்துவ பெருமக்களின் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்கள் இன்னொரு வகையில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஏர்வாடியிலும், நாகூரிலும் ஏராளமான முஸ்லீம் அல்லாத சகோதரர்கள் பங்கேற்கின்றனர். வேளாங்கண்ணியிலே நடைபெறக்கூடிய  அந்த கிறிஸ்தவர்களுடைய  பண்டிகைகளில் ஏராளமான இந்துக்கள் பங்கேற்கின்றனர் .

இப்படி பரஸ்பரம் அன்பையும் சகோதரத்துவத்தையும் பாசத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் தான் இந்த நாட்டிலே திருநாட்கள் என்பவை இதுநாள்வரை அமைந்திருக்கின்றன.

ஆனால் இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி என்ற பெயரிலே ஒரு விழா இந்து முன்னணியினராலும், ஆர்எஸ்எஸ் சங்பரிவாரக் கும்பலினாலும் மக்களிடையே திணிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சதூர்த்தி என்பதற்கு எந்தவிதமான புராதன ஆதாரங்களும் இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. மக்களை ஒன்று திரட்டுவதற்காக வேண்டி, குறிப்பாக இந்துக்களை மற்றவர்களுக்கு எதிராக ஒன்று திரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பாலகங்காதர திலகர் என்க கூடிய ஒரு பார்ப்பன தலைவரால் உருவாக்கப்பட்ட ஒரு விழாதான் விநாயகர் சதுர்த்தி என்பது. இந்த விழாவை வைத்துக் கொண்டு விநாயகர் சதூர்த்தி என்ற பெயரிலே இன்றைக்கு சமூகங்களுக்கு உள்ளே ஒரு மோதலை உண்டு பண்ணக் கூடிய ஒரு போக்கை இந்து முன்னணியும் அதைச் சார்ந்த அமைப்புகளும் தமிழகத்திலே திட்டமிட்டு செய்து கொண்டு இருக்கின்றார்கள். மத நல்லிணக்க பூமியான, சமூக நல்லிணக்க பூமியான தமிழகத்தில் இந்த விநாயகர் சதூர்த்தி விழா ஊடாக கலவரத்தை உண்டு பண்ணி சமூகத்திலே பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகளை திட்டமிட்டு ஆர்எஸ்எஸ் சங்பரிவார் பார்ப்பன கும்பல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

நீங்கள் தெளிவாக ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் இன்று பார்ப்பனக் கும்பல் தாங்கள் தீர்மானிக்கக்கூடிய  கலாச்சாரங்களை மக்களுடைய கலாச்சாரங்களாக மாற்றுவதற்கு உண்டான வேலையை திட்டமிட்டு செய்து கொண்டிருக்கின்றார்கள். அதனுடைய ஒரு பாகம் தான் விநாயகர் சதூர்த்தி. இது தமிழ்நாட்டின் விழா அல்ல , தமிழர்களின் விழா அல்ல, இன்னும் சொல்லப்போனால் இந்து பெருமக்கள் உடைய விழா கூட கிடையாது. பார்ப்பனர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, புத்த மதத்திற்கு எதிராக திணிக்கப்பட்ட ஒரு விழாவாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. விநாயகர் சதூர்த்தி இருக்கிறது என்பதற்கான எந்த ஆதாரங்களும் புராணங்களிலோ, இதிகாசங்களிலோ, இந்து மத வேதங்களிலோ கிடையாது.

எந்த ஒரு நேரத்திலும் சமூக நல்லிணக்கத்தை மதநல்லிணக்கத்தை நமக்குள்ளே இருக்கக்கூடிய சகோதரத்துவ உறவை பாதிக்கக்கூடிய இந்த சதிகளுக்கு நாம் பலியாகிவிடக் கூடாது, விழிப்புணர்வோடு இருந்து தமிழ் மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமை நம் அனைவரின் முன்னாலும் இருக்கிறது. திட்டமிட்டு  பார்ப்பன கும்பலால் உருவாக்கப்பட்ட இந்த சதிக்கு ஆர்எஸ்எஸ் சங்பரிவார கும்பலால் உருவாக்கப்பட்ட இந்த சதிக்கு தமிழ்ப் பெருமக்கள் ஒருபோதும் பலி ஆகிவிடக் கூடாது என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறோம்.

எழுதியவர்

கே எஸ் அப்துர் ரஹ்மான்

தலைவர் – வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா

கோயம்புத்தூர்

Loading

மதக் கலவரம் விநாயகர் சதூர்த்தி
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
கே. எஸ். அப்துர் ரஹ்மான்

மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு

Related Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026

அண்டை வீட்டார் உரிமைகள்

November 22, 2025

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.