Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கவிதை»தூஃபான் நாங்கள்
கவிதை

தூஃபான் நாங்கள்

மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிBy மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிOctober 13, 2023Updated:October 21, 2023No Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

பச்சிளம் நரம்புகளை அறுப்பதற்கு
இரும்பு ஆயுதங்கள் சுமந்திடும்
உம் கைகளுக்கு முன்னால்

சிறு கற்கள் கொண்டு
உம் இரும்பு துப்பாக்கிகளைத்
தொடை நடுங்கச்செய்யும்
தூஃபான் நாங்கள்

நூறு கட்டிடங்கள் துளைத்து
இறங்கும்
உம் வெடி குண்டுகளின் கதறல்கள்
எங்களின் நெஞ்சைக் கிழிப்பதற்கு
முன்னால்

எம் “அக்ஸா”வில்
எம் பாங்கொலிகள் கொண்டு
உம்மை உருக்குலைத்திடும்
தூஃபான் நாங்கள்

அநீத கவசங்கள் அணிந்துவிட்டாய்
அநீதத்தால் எம் நிலங்களைச் சுரண்டிவிட்டாய்
உம் நெற்றியின் சிறு மயிர்
“அக்ஸா”வின் சுவர்களைத்
தொடுவதற்கு முன்னால்

எம் தாய்மார்களின் அழுது
வறண்டு போன குரல்களால்
எம் சிதிலமடைந்த கட்டிகளால்
அநீதி இழைக்கப்பட்ட எம் அறச்சீற்றத்தால்

உம் அநீதக் கவசங்களை உடைத்து
சுதந்திர கொடி ஏற்றும்
தூஃபான் நாங்கள்

உலக ஊடகங்கள் அநீதியின் பக்கம் நின்றுகொள்ளட்டும்
கோழை வல்லரசுகள் உம் கால்களை நக்கிக்கொள்ளட்டும்

குழந்தைகள் குருதி உறிஞ்சுவதற்கு ஆயுதங்கள் பதமாக்கப்படட்டும்
உலகின் அநீதிகள் யாவும் உம் ஆடைகளின் மேல் பைகளுக்குள் சொருகிக் கொள்ளட்டும்

எம் நீதவான்களுக்கெல்லாம் நீதவான் அல் ஆதிலின் “அபாபீல்” படைபலம் கொண்டு
சிறு சிறு கூர்தீட்டப்பட்ட கற்கள் ஏவி
உம்மை என்றும் அழித்தொழிக்கும்
தூஃபான் நாங்கள்

தூஃபான் நாங்கள்
“அல் அக்ஸா”வின் தூஃபான் நாங்கள்
புயலாய் பிரளயமாய் பெருமழையாய்
திரண்டு வருவோம் சுதந்திர அக்ஸாவை நாங்கள் முத்தமிட்டே தீருவோம்

“தூஃபான் அல் அக்ஸா” எனும் போர்
வெற்றியடைந்து
குழந்தை கொலையாளிகளின் முகங்களைக் கிழிக்கட்டும்

பாகுபாடில்லா பேதமில்லா வயது வித்தியாசமில்லா ஷுஹதாக்களின்
குருதிச் சொட்டுக்கள்
அக்ஸாவின் விடுதலையை எட்டாமல்
உலக முஸ்லிம்களின்
“அல்லாஹ் அக்பர்” எனும் தூஃபான் படைகள் ஓயாது

இஸ்ரேல் பாலஸ்தீன்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமி
  • Website

Related Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025

ஃபலஸ்தீனம் மீதான இனப் படுகொலையில் அமெரிக்காவின் பங்கு

November 7, 2024

ஷஹீத் யஹ்யா சின்வாரின் இறுதி உயில்

October 23, 2024

“தூஃபாநுல் அக்ஸா” – அக்டோபர் 7ம் இஸ்ரேலின் தோல்வியும்

October 9, 2024
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

சிறையிலிருந்து சீரமைப்பு!

March 25, 2026

PM CARES: ஒன்றிய அரசின் மற்றுமொரு ஊழல் பெரும் கொள்ளை

March 17, 2026

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.