Author: மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமி

பச்சிளம் நரம்புகளை அறுப்பதற்குஇரும்பு ஆயுதங்கள் சுமந்திடும்உம் கைகளுக்கு முன்னால் சிறு கற்கள் கொண்டுஉம் இரும்பு துப்பாக்கிகளைத்தொடை நடுங்கச்செய்யும்தூஃபான் நாங்கள் நூறு கட்டிடங்கள் துளைத்துஇறங்கும்உம் வெடி குண்டுகளின் கதறல்கள்எங்களின் நெஞ்சைக் கிழிப்பதற்குமுன்னால் எம் “அக்ஸா”வில்எம் பாங்கொலிகள் கொண்டுஉம்மை உருக்குலைத்திடும்தூஃபான் நாங்கள் அநீத கவசங்கள் அணிந்துவிட்டாய்அநீதத்தால் எம் நிலங்களைச் சுரண்டிவிட்டாய்உம் நெற்றியின் சிறு மயிர்”அக்ஸா”வின் சுவர்களைத்தொடுவதற்கு முன்னால் எம் தாய்மார்களின் அழுதுவறண்டு போன குரல்களால்எம் சிதிலமடைந்த கட்டிகளால்அநீதி இழைக்கப்பட்ட எம் அறச்சீற்றத்தால் உம் அநீதக் கவசங்களை உடைத்துசுதந்திர கொடி ஏற்றும்தூஃபான் நாங்கள் உலக ஊடகங்கள் அநீதியின் பக்கம் நின்றுகொள்ளட்டும்கோழை வல்லரசுகள் உம் கால்களை நக்கிக்கொள்ளட்டும் குழந்தைகள் குருதி உறிஞ்சுவதற்கு ஆயுதங்கள் பதமாக்கப்படட்டும்உலகின் அநீதிகள் யாவும் உம் ஆடைகளின் மேல் பைகளுக்குள் சொருகிக் கொள்ளட்டும் எம் நீதவான்களுக்கெல்லாம் நீதவான் அல் ஆதிலின் “அபாபீல்” படைபலம் கொண்டுசிறு சிறு கூர்தீட்டப்பட்ட கற்கள் ஏவிஉம்மை என்றும் அழித்தொழிக்கும்தூஃபான் நாங்கள் தூஃபான் நாங்கள்”அல் அக்ஸா”வின் தூஃபான் நாங்கள்புயலாய் பிரளயமாய் பெருமழையாய்திரண்டு வருவோம் சுதந்திர அக்ஸாவை நாங்கள் முத்தமிட்டே தீருவோம் “தூஃபான் அல் அக்ஸா” எனும் போர்வெற்றியடைந்துகுழந்தை கொலையாளிகளின் முகங்களைக் கிழிக்கட்டும் பாகுபாடில்லா பேதமில்லா வயது வித்தியாசமில்லா ஷுஹதாக்களின்குருதிச் சொட்டுக்கள்அக்ஸாவின் விடுதலையை எட்டாமல்உலக முஸ்லிம்களின்”அல்லாஹ் அக்பர்” எனும் தூஃபான் படைகள் ஓயாது

Read More

சர்வதேச முஸ்லீம் அறிஞர்கள் கூட்டமைப்பு (International Union of Muslim Scholars) வெளியிட்டுள்ள அறிக்கை : ஹிஜாப் விவகாரம் குறித்து நாம் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் : தற்போது, இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் முஸ்லீம் பெண்களுக்கான ஹிஜாப் பிரச்சனை உட்பட முஸ்லீம் உம்மத்தின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகளின் முயற்சி மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லீமும் இயன்றளவில் இதேப்போன்ற பங்களிப்பை செய்தாக வேண்டும். என்னுடைய குறைந்த பட்ச அனுபவத்தில் கூறுவது என்னவென்றால் ; திடமான செயல்ரீதியான அமைப்புகளின் மூலமே உரிமைகள் நிலைநாட்டப்படும். அவை அரசியல் அமைப்புகளாக இருக்கட்டும் அல்லது பொருளாதார, மத, மனித உரிமை, சமூக நீதி அமைப்புகளாக இருக்கட்டும். ஏனெனில், ஒரு சமூகத்தின் கூறுகளுக்குள் அமைப்புகளே செயல்படுகின்றன. அந்த சமூகத்தில் ஏற்படுகின்ற ஆபத்துகள், நெருக்கடிகள் மற்றும் சவால்களை, முன்கூட்டியே அறிந்துக்கொண்டு, திசைக்காட்டியாக அமைப்புகளே அச்சமூகத்தை வழிநடத்தி செல்கிறது. சமூகத்தில் ஏற்படுகின்ற…

Read More

கருப்பு முகத்திரையினுல் ஒரு முழக்கம்காவியின் மதவெறி ஓலங்களைமண்கவ்விடச் செய்து,ஆயிரம் ஆண்டுகள் கழித்தும்மறையாமல் வெல்லும் உயிர்மையானது! அன்றுமுதல் இன்றுவரைஎழுதப்படும் நீதிப்போராட்டங்களில்எழுந்திடும் எழுச்சி முழக்கமது! அமேரிக்காவின் அடிமை எழுச்சியோ!அரேபியாவின் ஏகத்துவ முதிற்ச்சியோ!இந்தியாவின் சுதந்திர உணர்ச்சியோ!பதினைந்து நூற்றாண்டுகளில்சிந்தப்பட்ட இரத்தத்திலும்அதனால்,ஊடுருவப்பட்ட இதயங்களிலும்வற்றா பேரூற்றின் முழக்கமது! மண்ணில் மழுங்கிமாயும் மனிதஅதிகார வெறுமை,பாமரர்களின் ஈரற்குலைகளை விழுங்காமல்,ஆழியின் அடர்த்தி அறிந்தவனின்வானத்தின் வழியறிந்தவனின்மகத்தான அதிகாரத்திற்கு முன்மண்டியிடச் செய்யும் முழக்கமது! ஒற்றை நீதியை, அநீதத்தின்பெரும் நிலமொன்றின் வீசினாலும்அம்மண்முழுதும், ஒற்றை நீதியின்வேர்களில் சூழந்து,ஒரு நிலையான பனை மரத்தையேவளரச்செய்யும்ஒரு கனமான மழைத்துளியே,அவ்வீர முழக்கம்! மதவெறுப்பிற்கு எதிராக!மத பேதங்களுக்கு எதிராக!ஒரு பெண்ணின் ஒற்றை விரல்உயர்வாய் இருக்கட்டும்,அடிவயிற்றிலிருந்து நெஞ்சுரத்தோடுஎழுப்பப்பட்ட எத்தனையோ ஆஸாதிமுழக்கங்களாக இருக்கட்டும்,அனைத்தின் பிறப்பிடமாகிவிட்டது அம்முழக்கம்! உரிமையை உடலில் போர்த்திக்கொண்டதால்கல்வி மறுக்கப்பட்டவள்,அவளின் கண்களில் வழிந்தோடும்ஒரு துளிக்கண்ணீரை,ஒரு பெரும் கருங்கடலாய் தன் முகத்தில்அணிந்துக்கொண்டு,ஒரு கொடுங்கோல் அதிகாரத்திற்கெதிராய்அவளிலிருந்து எழும் சுனாமியேஅந்த முழக்கமானது..!”அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப்பெரியவன்)

Read More

மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்எடுக்க முடியாத சதியில் இங்கே மக்கள். சமூக நீதியும் எறியும் தீயாய்இங்கே அடித்தட்டு மக்களே அதற்கு தீனி. சூரியனின் உதிப்பில் முதலாளிய கிரகணம் கூடியதால், இனி,இருளில் சேர்ந்திடும் குரல்களைஎங்கே முழங்கலாம். முதலாளித்துவ கர சேவையில்இடிக்கப்படும் கட்டிடங்கள்வாக்களித்த மனங்களின் திராவிடபிம்பத்தை உடைத்தெறியும்..! மயானங்களில் புதைக்கப்பட்ட எழும்புக்கூடுகள்இந்துத்துவ திராவிடத்தை ஏற்றாலும்சமாதிகளின் சாம்பல் துகளிலிருந்துஅடித்தட்டு மக்கள் தொடர்ந்து பேசிக்கொண்டேஇருப்பார்கள்..! சென்னை அரும்பாக்கம் மக்களின் இடம்பெயர்வுஎனும் சுரண்டலுக்கு  கண்ணீரால் தோய்ந்த எழுத்துக்களில்கடுமையான கண்டனங்கள்..!

Read More

மது பானைகள் ஒவ்வொரு வீட்டிலும், இருந்தால்தான் கோத்திரப் பெருமை.விருந்தோம்பலாக இருந்தாலும் சரி, துக்க அனுசரணையாக இருந்தாலும் சரி, மது முக்கியம். இவ்வாறே, அறிவு மழுங்கடிக்கப்பட்டதாக அரேபிய சமூகம் இருந்தது. அதேப்போலத்தான் இன்றும், மதுபான ஆலைகள் முதல் மதுபான அரசு அலுவலகங்கள் வரை மதுக்கென்று, பொருளாதார கொள்கையே உருவாகும் வரை வியாபித்து இருக்கின்றது.மதுவின் தாக்கம், கலாச்சாரம், பொருளாதாரம், என அனைத்து அடிப்படை மனித வாழ்விலும், அங்கமாக மாறிவிட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், பெரியாரின் மூலமாக, 1921 ஆம் ஆண்டு முதலே, மதுவிலக்கு போராட்டம் சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது. தென்னை மரங்கள் மூலமாக மதுவிறக்க கூடாது என்பதற்காக, தன் குடும்பத்திற்கு சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார் பெரியார். 1930 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி, மதுவிலக்கு போராட்டத்தை நாடுமுழுக்க தீவிரமாக்கினார். என்றாலும், தமிழகத்தில்தான் இப்போராட்டம் வலுப்பெற்றிருந்தது.என்றாலும், காமராஜர்தான், 1954 முதல் 1963 வரை மதுவிலக்கை எந்த தளர்வுமின்றி நடைமுறைப்படுத்தியவர். அடுத்த ஆட்சி பொறுப்பில் இருந்த…

Read More

தோண்டப்படாத கிணறொன்றில் ஆயிரம் அழுவோசை, காதுகளை செவியிழக்கச் செய்கிறது.. மம்மட்டிகள் அறையாமலேயே இரத்தக் கண்ணீர் விட்டு மணல் அழுகிறது. ஏனோ, தாகித்த நெற்பயிர்கள் இரத்த கண்ணீரையே ருசிக்க துவங்கிவிட்டது.. விளைச்சல் எதிலும் இரத்த வாடை; வலியும் சகதியுமாய் இரத்த கண்ணீர் தேங்கிக் கிடக்கையில்.. மஞ்சள் கதிரவன் அதனை தங்கமாகவும் வெள்ளை சந்திரன் அதனை வெள்ளியாகவும் அலங்காரப்படுத்தியது.. சில அகங்கார கண்களுக்கு!! தோண்டப்படாத கிணற்றை கிளறிப் பார்ப்பதற்கு ஏனிந்த தயக்கம்? அதில் கலப்பற்ற நன்னீர் கிடைக்க கூடும்!! அழுவோசையும் நின்றுவிடும்!! (தடை.. என்பதை விட வேணடாம் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்)!! Faiz_Rahmani

Read More

என் கண்ணீரால் என் கருவறை நதியாகிவிட்டது அதை தேக்கிவைப்பதற்கு இடமின்றி என் தாயின் கண்விழியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.. அன்னையர்தினம் என்று நாள் ஒதுக்கும் இவ்வுலகம், அவள் நிம்மதியாய் வாழ்வதற்கு நாள் ஒதுக்கவில்லையே! நீதியை மறைப்பதற்கு துப்பாக்கி சுமந்தவன் மகிழ்ச்சியாய் உறங்குகிறான்.. “குடியுரிமை எங்கள் உரிமை” என்று அறவழியில் முழங்கியவள் தேசதுரோகியாய் சிறை செல்கிறாள்.. உரிமைக்காக தன் நெஞ்சில் அநீதியின் நெருப்பையும் குளிராக்கிடுவாள்..அவள் என்னை சுமப்பதற்கு நான் ஆனந்தம் அடைகிறேன்.. உலகமே!! என்னை மதியற்றதாய் நினைக்காதே!! என் தாயின் மனவழியால் நான் அவதியுறுகிறேன்.. நான் என் தாய் வயிற்றில் உதைப்பதையும் தடுத்துக்கொண்டேன் என் தாயின் சிறை வேதனையைக் கண்டு.. இனவாதமும் மதவாதமும் துருப்பிடித்த முற்களாய் என் தாயின் சிந்தையை கிழித்துவிட்டது. மன வேதனையில் ஊறிய இரத்ததை நான் உணவாக உட்கொள்கிறேன்.. அசைவில்லாத மண்ணினம் கூட தன் வயிற்றில் முளைக்கும் வெடித்த வித்தை மலரச்செய்கிறது.. ஆனால், மகிழ்ச்சி என்னும் மலராய் பூமியில் உதிக்கப்போகும் நான்…

Read More

எத்தனையோ மோசடிகள் என் கண்களை சுற்றுகிறது அறத்தின் குருதியை சர்வமும் நுகர்கிறது கண்ணால்பார்த்தவைஇதயத்தில் நிலைக்கவில்லை பிணம் திண்ணி கழுகுகளும், குருதியில் குளிப்பதை நிறுத்தவில்லை புரட்சி சுமக்கும் காகிதங்களும் காழ்புணர்ச்சி கொள்கிறது காவலரின் கைநழுவிய கலிகளும் சுதந்திரத்தை மறுக்கிறது இரத்த கண்ணீரால் அடக்குமுறையை அழித்த சமூகம் விசுவாசம் மறந்தவர்களால் அடக்கியே அழிக்கப் படுகிறது கர்ப்பிணிகள் சடலம் சுமந்த தருணம் போதும் ஜனநாயகத்தின் யதார்த்தம் சகதியில் என்றும் வீழாது வாழ்வைத் துறந்தவனிடம் உயிரைத் தவிர உறவேதுமில்லை உரிமையற்ற சடலத்தின் காயங்களும் தேசத்தை நினைவு கூறும் மண்ணின்தாகத்தை மழைநீர் தணிப்பதுபோல் உயிர்கொண்ட உறவுகள் உரிமையை கேட்கிறது அநீதத் தாமரை சாக்கடையில் மலர்ந்து நீதவானிடம் சுவாசிக்க செய்தாலும் திரவிடத் திடலில் மணமாகாது பேதமற்று உறவாடிய தாயகத்தின் வாரிசுகள் நாம் எத்துனை அதர்மம் தழைத்தாலும் தாயகம் போராடும். முகம்மது பைஜ் அஸ்-ஸலாம் இஸ்லாமிய கல்லூரி மாணவன்

Read More

கடல் யானை சோம்பலாய் காணாது உன்னையே தாண்டிடாத ஆதங்கம் கண்டு மெய்யினை காத்திட அறத்தினை சூழ்ந்திட கூட்டறிக்கையில் உன் விரல் பேசும் எதிர்வினை அறம் அறுத்து துன்பம் தறிக்க சதிகள் களவாடும் தனியாய் உயர்வது தரமாய் காணாது அரணாய் காண்பது குமுவாய் வினைவது சாந்திகன் அடைகாத்து கொடியது விலகிடஅகிம்சை கண்டிட காந்தியம் வேண்டாம் கொள்ளையன் அடங்கிட அகிம்சை போதும் துரோகி அழிந்திட சூத்திரம் போதும் நண்டாய் உருவெடுத்த தேள் கொடியது அதன் உயிர் கொல்லும் விஷம் போதும் தரகர் சேர்க்கும் எண்ணம் அனுமதியில்லை தடை துளைக்கும் அறிவு அறனில்லை பணம் தடுக்கும் சம்பவம் நியாயமில்லை உயிர் உழைக்கும் உழைப்பிற்கு கூலியில்லை அறம் காணும் விருப்பம் பயனில்லை நம் அறிவு அறமாய் அலரட்டும் நம் வாழ்வுரிமை கைக்குள் அடங்கட்டும் உயர்ந்து நிற்க முகங்கள் வேண்டாம் தடிகள் வேண்டாம் அறம் போற்றும் கழகம் போதும்… -முஹம்மது ஃபைஜ்,நான்காம் ஆண்டு மாணவன்,அஸ்ஸலாம் இஸ்லாமிய…

Read More