இவர் தான் ரமேஷ் குமார் ஜல்லா.ஆசிஃபாவின் வழக்கை விசாரித்தவர். BJPயின் பல அமைச்சர்கள் இவரை நெருக்கடிக்குள் ஆளாக்கியபோதும் தன் உயிரையே பணயம் வைத்து உலகத்திற்கே அதிர்ச்சி அளிக்கும் அந்த குற்றப் பத்திரிக்கையை பதிவு செய்கிறார்
நீதிமன்றத்தில்.ஒருவேளை ஜஸ்டிஸ் லோயாவையும் ஹேமந்த் கர்கரேவையும் மனதில் வைத்துக் கொண்டு இவருக்கு வேண்டுமானால் இந்த வழக்கில் இருந்து விலகியிருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யாமல் இரவு பகலாக ஆஸிஃபாவின் நீதிக்காக அவர் உழைத்திருக்க வேண்டும் அதனாலேயே அவரால் இத்தகைய வழக்கை துணிச்சலாக செய்து முடிக்க முடிந்தது.
இந்த வழக்கின் வேறொரு குறிப்பிடத்தக்க பங்கை வகித்தவர் தீபிகா துஸொ என்ற பெண் வழக்கறிஞர் ஆவர். ஆளும் வர்க்கத்தின் மிரட்டல் மட்டுமல்லாமல் பல வழக்கறிஞர்களின் அழுத்தத்திற்கும் ஆளாக்கப்பட்டு தைரியமாக வழக்கை கைவிடாமல் எடுத்துச் செல்கிறார். இத்தகைய அச்சுறத்தல்களுக்கு எதிராக ஜம்மு கஷ்மீர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார். அவர் தற்காலிகமாக போலீஸ் பாதுகாவலில் உள்ளார்.
இருவரும் கஷ்மீரின் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். மனிதநேயமும் நீதியும் அகராதியில் பார்க்க முடியாத காலத்தில் இத்தகைய அதிகாரிகள் எடுக்கும் துணிச்சலான சவால்கள் பாராட்டப்பட வேண்டியது. வெறுமனே இந்தியாவின் ஏதோ ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஹாஷ் டாகை Facebook இல் போட்டு தன்னுடைய பொறுப்பை முடித்து விட்டோம் என்று திருப்தி அடைவதை போன்றல்ல இந்த வேலை.இந்த பொறுப்பை ஏற்றதற்காக நாளை இவருக்கும் இவர்களுடைய குடும்பத்திற்கும் அது பாதகமாக வந்து விடலாம். ஆகையால் இந்த அதிகாரிகளுக்கு ஸல்யூட் செய்தாலும் அது மிகையல்ல என்பேன்.!