• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»தீர்வை தேடும் பாலியல் குற்றங்கள்
கட்டுரைகள்

தீர்வை தேடும் பாலியல் குற்றங்கள்

AdminBy AdminJuly 21, 2018Updated:June 1, 20232,222 Comments2 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

மற்றுமொரு வன்கொடுமை சென்னையில் நிகழ்தப்பட்டிருக்கிறது மனித மிருங்கங்களால் அல்ல மிருகங்கள் கூட அவ்வாறு செய்யாது மனித வடிவில் உலாவறும் கொடூரர்களால்.

ஏழு மாதங்களாக அரங்கேறியிருக்கிறது அந்த அசிங்கமான கொடூரம்…..

இது போன்ற கேவலங்கள் காலம் காலமாக நடந்து வந்தாலும் டெல்லியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு தான் இது அதிகமான அளவில் பேசு பொருளாக்கப்பட்டது.அன்றிலிருந்து இன்று வரை இது பேசு பொருளாக மட்டுமே இருந்து வருகிறது.அதுனால் தான் என்னவோ மூன்று வயது முதல் 80 வயது வரை இக்கொடூர தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இந்த சம்பவங்கள் நாள்தோறும் இந்திய தேசத்தின் மடியில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போது அதை செய்தியாக கடந்து சென்றுகொண்டிருக்கும் நாம் நம் அருகில் அமைதி பூங்காவின் தலை நகரில் நடக்கும் போது இங்கும் இவ்வாறெல்லாம் நடக்குமா என அதிர்ச்சி அடைகிறோம்.

ஆம் நடக்கிறது, நடந்து கொண்டே தான் இருக்கிறது.சம்பவம் நடக்கும் போது மட்டும் ஆங்காங்கே எழுப்பப்படும் கண்டன குரல்கள் அதற்கான தீர்வை எடுத்துரைப்பவைகளாக இல்லை என சொல்லலாம் அப்படி அவர்கள்  தீர்வை கூறியிருந்தால் இந்த கொடூரங்கள் என்றோ நிறுத்தப்பட்டிருக்கும் ஆனால் அவை இன்றும் தொடர்கிறது என்றால் நிரந்தர தீர்வை யாரும் இதை தடுக்க கூறவில்லை.

இந்த கொடூரங்கள் அரங்கேறும் போது அதிகம் பேசப்படும் வார்த்தைகள் பாலியல் கல்வி…..

அந்த கல்வியை பள்ளிகளில் கொண்டு வந்தால் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என கூறுகிறார்கள்.ஆனால் சுய ஒழுக்கம் குறித்து அவர்கள் ஏனோ பேச மறுக்கிறார்கள்.

பாலியல் கல்வியை விட அதீத முக்கியத்துவம் வாய்ந்தது சுய ஒழுக்க கல்வி.அது போதிக்கப்படாததால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

அதே போல இதற்கு மற்றொரு காரணம் இன்றைய சினிமா,மக்களை எளிதில் சென்றடையும் மிகப்பெரிய ஆயுதமான சினிமாவில் நஞ்சை கலந்து கொடுக்கப்படுகிறது.அதில் வரும் காட்சிகள் அனைத்தும் பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே சித்தரித்து வருகின்ற.ஆணும் பெண்ணும் சமம் என்கிற கருத்தை வெறும் ஆண்களோடு சேர்ந்து பெண்கள் மது அருந்துவதை மட்டும் அதிகமாக கட்டப்படுகிறது ஆணாதிக்கவாதிகளால் எடுக்கப்படும் சினிமாவில்.திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும் நாடகங்களிலும் இந்த காட்சிகள் தற்போது சர்வசாதரணமாகி மனித மனத்தை கெடுக்க அச்சாரமாக விளங்குகின்றன.

அடுத்து அனைத்து தீமைகளுக்கும் தாயாக விளங்கும் மது இது போன்ற கொடூரங்களை எந்த வித தயக்கமுமின்றி செய்ய உறுதுணையாக இருந்து வருகிறது.

சுய ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும், சமூக கண்ணோட்டத்தோடு திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும், மது நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இது போன்ற கொடூர சம்பவங்களை தடுக்க முடியும்……

தனி மனித மாற்றமே சமூக மாற்றம் என்பதை இனியும் உணராமல் இருந்தால் இது போன்ற வன்கொடுமைகளை தடுக்க முடியும் இதற்கு அரசுக்கும் சம பொறுப்பு உள்ளது என்பதை ஆட்சியாளர்களும் உணர வேண்டும்

Loading

Chennai girl abuse editorial
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

நபிகள் நாயகம் ஒரு மகான்

September 6, 2025

சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்

August 27, 2025

சூப்பர் மேன் திரைப்படம் பேசுபொருளானது ஏன்?

July 26, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.