Author: Admin

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடியிடம் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு வலியுறுத்துவதன் பின்னணி என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் 5225 மாணவர்கள் கற்பதற்கான இடங்கள் இருக்கின்றன. பொதுவாகவே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் கற்கச் செல்லும் தமிழக மாணவர்களில் அநேகமானோர் 15% உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டில் (AIQ) தங்களுக்கான இடங்களை எடுப்பதில்லை. மாறாக, 85% உள்ள மாநில ஒதுக்கீட்டிலேயே தங்களின் இடங்களைப் பெறுகின்றனர். இதன் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவர் அதிக இடங்களைப் பெறும் சூழல் உள்ளது. மட்டுமின்றி, கட்-ஆஃப் மதிப்பெண் சற்று குறைவாக எடுத்த…

Read More

மு.சிவகுருநாதன் குழந்தைகளுக்கான பாடநூல்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் எழுதப்பட வேண்டியது அவசியம். தவறான செய்திகளும் கருத்துகளும் ஒருபுறமிருக்க, சனாதனத்துக்கு, இந்துத்துவத்துக்கு வலுச்சேர்க்கும் கருத்தோட்டங்கள் பள்ளிப் பாடநூல்களில் தூவப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். பாடப் புத்தகங்களில் வெறுப்பு அரசிலைப் புகுத்தி குழந்தைகளின் மனத்தில் நஞ்சை விதைக்க அனுமதிக்கக் கூடாது. அப்படியான நச்சுக் கருத்துகளை இனங்கண்டு அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டுப் பாடநூல்களில் காணப்படும் இத்தகைய விஷயங்களிலிருந்து சிலவற்றை இங்கு தொகுத்தளிக்கிறேன். (1) 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், ‘அண்டை நாட்டுறவைப் பொறுத்த வரையில் இந்தியா ஓர் உன்னத நிலையைக் கொண்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் கடந்த 5000 ஆண்டுகளாக நிலவி வந்த ஒரே மாதிரியான பண்பாட்டின் ஒருபகுதியாக அண்டை நாடுகள் விளங்குகின்றன. சிந்துவெளி நாகரிக காலம் முதல் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் பன்முகத்தன்மையையும் மிக ஆழமான நட்புறவையும் கொண்டிருந்தன.’ (பக்கம் 295). இந்தியாவையும் அதைச் சுற்றியுள்ள நாடுகளையும் ஒன்றிணைத்து அகண்ட பாரதம் எனக்…

Read More

மக்களுக்கான சித்தாந்தங்கள் என கூறிக்கொண்டு இந்த உலகில் தோன்றியவை எல்லாம் மக்களை வஞ்சிக்கின்றன. அந்த சித்தாந்தங்களால் குறிப்பிட்ட சில வர்க்கங்களே தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றன. இத்தகைய சூழலில் மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் தங்களுக்கான விடுதலையை, விடியலைத்தான் என்பதை இன்று நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். மக்களுக்கான விடியலைத் தருகிற ஒரே சிந்தனையாக இறைவன் வழங்கிய இஸ்லாமால் இருக்க முடியும். இன்று மக்களிடம் நிலவுகிற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வை எந்தவித தயக்கமும் இல்லாமல் சரியாக வழங்கிட முடியுமானால் அது இஸ்லாமால்தான் முடியும் என்பதை புரிந்துகொண்ட ஆதிக்கவாதிகளும், அவர்களின் அடிவருடிகளும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர். அதனைத் தான் இஸ்லாமோஃபோபியா என்கிறோம். இந்த இஸ்லாமோஃபோபியா எவ்வளவு ஆபத்தானது, அதனை எதிர்த்து வலுவானப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது ஏன் அவசியமாகிறது. அதனை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்த வேண்டிய அவசியம் என்ன? போன்றவற்றைக்…

Read More

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். மாஹி-மாண்டாவி என்ற விடுதியில் இரவு உணவு அருந்தியதற்குப் பின்பு தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தைச்(ABVP) சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொரு அறையாகச் சென்று பிரச்சாரம் செய்யும் போது ஒரு அறையில் நஜீப் அகமது இருந்தார். முதுகலை உயிரித் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் நஜீபுக்கு விடுதி கிடைத்து இரண்டு வாரங்களே ஆகின. ஜாமியா மில்லையா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் ஜே.என்.யு.வில் தான் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், இந்த வளாகத்திற்கு வந்தவர் நஜீப். இஸ்லாமிய வெறுப்பைக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜகவினரும் அவர்களது மாணவ அமைப்பும் இயல்பாகவே முஸ்லிம்களைப் பார்க்கும்போது, வெறுப்பும் அவர்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்டிருக்கின்றனர். ஓட்டுக் கேட்பதாக நஜீப் அறைக்குள் சென்றவர்கள், அங்கும் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.…

Read More

ஒரு நாட்டியில் மாணவ- இளைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களின் வளர்ச்சி தான் சமூகத்தின் வளர்ச்சியாகவும் நாட்டினுடைய வளர்ச்சியாகவும் அமைகிறது. அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் போதும் விளையாட்டில் வெற்றி அடையும் போதும் பல துறைகளில் பல சாதனைகள் செய்யும் போதும் அது அந்த நாட்டின் வெற்றியகவும் சாதனையாகவுமே கருதப்படுகிறது. இந்தியாவில் மாணவ- இளைஞர்களின் மக்கள் தொகை என்பது அபாரமானது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவ- இளைஞர்கள் இங்கு வாழ்கிறார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 54% பேர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மேலும் இந்திய மக்களின் சராசரி வயது 29 தான். வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் கூட சராசரி வயது முறையே 4௦, 46, 47 என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி எந்த நாட்டிடமும் இல்லாத தனித்தன்மையான சூழல் இருந்தும் கூட இந்திய மனிதவள…

Read More

‘Life without Liberty is like a body without soul’ ‘சுதந்திரம் இல்லாத வாழ்க்கை ஆன்மா இல்லாத உடலை போன்றது ‘ இயேசு கிறிஸ்து தனது புகழ்பெற்ற மலை பிரசங்கத்தில் சொன்ன வார்த்தைகள் இது. சுதந்திரம் – அது ஒரு மனிதனின் தவிர்க்கவியலா தேவை. தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் அவர்கள் வாழும் நாட்டிலும் சுதந்திரமும் சுதந்திரச் செயல்பாடுகளும் இன்றியமையாதது. தங்கள் எஜமானர்களை அண்டிப் பிழைப்பவர்களுக்கும் சில நேரங்களில் அவர்களின் ‘ஷூக்களை’ நக்கிப் பிழைப்பவர்களுக்கும் சுதந்திரத்தின் மேன்மை புரியாது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்து விட்டது. நாடு முழுவதும் அமுதப் பெருவிழா – அம்ரித் மஹோட்சவ் – ஒன்றிய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. தடைகள் இல்லா சுதந்திரமும் எல்லைகள் இல்லா மானிடமும் தழைத்து நிற்கும் ஒரு மண்ணை உருவாகத்தான் நமது முன்னோர்கள் பாடுபட்டார்கள். ஒரு நீண்ட 75 ஆண்டு கால நெடும் பயணத்திற்குப் பிறகு அவர்கள் கண்ட கனவு…

Read More

கடந்து எட்டு வருடங்களில் மோடி அரசு ஒரு திட்டத்தை அறிவிப்பதும் யாருக்காகக் கொண்டு வரப்படுகிறதோ அவர்களே அத்திட்டத்தை எதிர்ப்பதும் வாடிக்கையாக உள்ளது. பண மதிப்பீடு நடவடிக்கை கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்கும் என்று கூறி அத்திட்டத்தை எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் முந்தைய காலங்களை விடவும் இப்பொழுது கருப்பு பணத்தின் விகிதம் அதிகமாகியிருக்கிறது என்று கூறுகிறது புள்ளிவிவரங்கள்.விவசாயிகள் நலன் பெறுவார்கள் என்று கூறி அறிவிக்கப்பட்ட வேளாண் சட்டம் விவசாயிகளிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. நாடெங்கும் உள்ள விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜிஎஸ்டி வரி சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் என்று நடைமுறைபடுத்தப்பட்ட திட்டம். மாறாக இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து அவர்களை தெருவில் நிற்க வைத்துள்ளளது. இவ்வாறாக மோடி அரசு அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும் மக்களையும் மக்கள் நலனையும் பாதிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்பொழுது…

Read More