ஒரு நாட்டியில் மாணவ- இளைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களின் வளர்ச்சி தான் சமூகத்தின் வளர்ச்சியாகவும் நாட்டினுடைய வளர்ச்சியாகவும் அமைகிறது. அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் போதும் விளையாட்டில் வெற்றி அடையும் போதும் பல துறைகளில் பல சாதனைகள் செய்யும் போதும் அது அந்த நாட்டின் வெற்றியகவும் சாதனையாகவுமே கருதப்படுகிறது.
இந்தியாவில் மாணவ- இளைஞர்களின் மக்கள் தொகை என்பது அபாரமானது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவ- இளைஞர்கள் இங்கு வாழ்கிறார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 54% பேர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மேலும் இந்திய மக்களின் சராசரி வயது 29 தான். வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் கூட சராசரி வயது முறையே 4௦, 46, 47 என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி எந்த நாட்டிடமும் இல்லாத தனித்தன்மையான சூழல் இருந்தும் கூட இந்திய மனிதவள வளர்ச்சி குறியீடு பட்டியலில் 130 வது இடத்திலும் Human Capital Index-யில் 115 வது இடத்திலும் Inclusive Development Index-யில் 62 வது இடத்திலும் இருக்கிறது. இதற்கான காரணங்கள் இந்தியா சமூகத்தின் சாதிய கட்டமைப்புகள், அரசின் வளர்ச்சி திட்டங்களின் உள்ள குறைபாடுகள், அரசாங்கத்தின் செயல்பாடு போன்றவை இருத்தலும் மாணவ இளைஞர்களின் சிந்தனைதிறனை மழுங்கடிக்கும் அவர்களின் வளர்ச்சியை மடைமாற்றுபவையான ஆபாசம், மது மற்றும் போதை பொருளின் ஊடுருவல் ஒரு முக்கிய காரணம் என்பது மறுப்பதற்கில்லை.
புதியதாக பொறுபேற்கும் ஒவ்வொரு அரசும் தனது ஆட்சியில் போதை பொருள் தடுப்பிற்கான பரப்புரை இய்யகத்தை வலக்கமாக நடத்துகிறது. இப்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக அரசும் கூட பிரச்சார இய்யகத்தை முன்னெடுத்து வருகிறது. இருந்தபோதும் போதை பொருளின் செயல்பாடு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடவில்லை என்பது தான் உண்மை. காரணம் அரசின் உட்கட்டமைப்பில் வலுவான செயல் திட்டம் இல்லை என்பது தான் வெளிப்படையான உண்மை.
இளைஞர் சக்தியை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து துறைகளிலும் ஒரு சிறந்த நிலையை இந்தியாவால் எட்ட முடியும். சமூகத்தின் சக்தியாக இருக்கக்கூடிய மாணவ இளைஞர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாக இன்று போதைக் கலாச்சாரம் மாறி வருகிறது., சமூகத்தின் எல்லா இடங்களில் வெகுவாக பரவியுள்ள போதைக் கலாச்சாரம்தான் இன்றைய சமூகத்தின் மிகப்பெரும் ஆபத்தாக இருக்கிறது. எனவே ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக அரசு போதைக் கலாச்சாரத்திற்கு எதிரான திட்டங்களை அறிவிப்பதோடு நின்று விடாமல் இரும்புக்கரம் கொண்டு அதனை தடுக்க வேண்டும்.